செவ்வாய், 31 டிசம்பர், 2013

தேவயாணி வழக்கை கைவிடும் திட்டமில்லை : அமெரிக்கா முடிவு

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதராக இருந்த தேவயாணி கோப்ரகடே மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும், இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமெரிக்கா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கு கடைசி நாளான ஜனவரி 13-ந் தேதிக்குள் இந்த ஆதாரங்களை திரட்டவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக