திங்கள், 30 டிசம்பர், 2013

7 ? முடியாது !.. தே.மு.தி.க.19 தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்கிறது !

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு இரண்டாவது பெரிய கட்சி அந்தஸ்து வழங்கி, ஏழு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பேச்சுவார்த்தையை, திரைமறைவில் தி.மு.க., மேலிடம் துவக்கியதற்கு, தே.மு.தி.க., தரப்பு இன்னும் பிடி கொடுக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், தங்களுக்கு, 19 லோக்சபா தொகுதிகளை தர வேண்டும் என, தே.மு.தி.க., பேரம் பேசுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.கடந்த, 2011ல் நடந்த, சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 41 தொகுதிகளை பெற்று, விஜயகாந்த் தலைமையிலான, தே.மு.தி.க., தேர்தல் களத்தை சந்தித்தது. அந்த கணக்கின் அடிப்படையில், தே.மு.தி.க., தங்கள் கூட்டணிக்கு வந்தால், ஏழு லோக்சபா தொகுதிகளையும், புத்தாண்டில் வரக்கூடிய, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியையும், அதற்கு ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தயாராக உள்ளது. ஓவர் பந்தா ஒடம்புக்கு ஆவது...தே.மு.தி.க கடைசியில் அனைத்து வாய்ப்பையும் விட்டு விட்டு திரிசங்கு நிலையில் இல்லமால் இருந்தால் சரி..

இதுதொடர்பாக, தே.மு.தி.க., பெண் தலைவர் ஒருவரிடம், தி.மு.க., தரப்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு இரண்டாவது பெரிய கட்சி அந்தஸ்து வழங்கி, உரிய மரியாதையுடன் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி உறவு கசத்ததாலும், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், அதிக அளவு ஊழல் புகாரில் மாட்டி, கறை படிந்ததாலும் அதை மாற்ற, இத்தேர்தல் வெற்றி முக்கியம் என, தி.மு.க., மேலிடம் கருதுகிறது. அதனால், தே.மு.தி.க.,வுக்கு, முதலில் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டு, மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என, தி.மு.க., தலைமை விரும்புவதாக, தே.மு.தி.க., பெண் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு, அந்த பெண் தலைவர், "கட்சி தலைமையிடம் தெரிவித்து, நல்ல முடிவை சொல்கிறேன்' எனக் கூறியுள்ளார். இதற்கிடையில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தரப்பிலிருந்தும், "கணிசமான தொகுதிகளை நாங்கள் தருகிறோம்; எங்கள் பக்கம் வாருங்கள்' என, தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு மேல், அழைப்பு சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில், ""தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி; விஜயகாந்த் பரிசீலிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதேபோல், "காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படவில்லை; தே.மு.தி.க.,விடம் விரைவில் டில்லி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்' என, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரும் கூறியுள்ளார். இரு தேசிய கட்சிகளிடமும், தே.மு.தி.க.,வுக்கு, "டிமாண்ட்' அதிகரித்துள்ளதால், அக்கட்சியில் பரபரப்பு அதிகரித்திருக்கிறது. மற்றொரு புறம், அரசியல் பேரமும் சூடுபிடித்துள்ளது. "தே.மு.தி.க., கேட்கும், 19 சீ"ட்டுகளை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., உடனடியாக விரும்பவில்லை என்பதால், தே.மு.தி.க.,வை விட்டு பிடிக்க அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்ட போது, அ.தி.மு.க.,வை நாங்கள் தோற்கடித்தோம். உள்ளாட்சி தேர்தலில், 27 சதவீதம் ஓட்டுகளை, நாங்கள் பெற்றோம். அந்தக் கணக்கு அடிப்படையில் நாங்கள், 27 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.தே.மு.தி.க.,வுக்கு, ஏழு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதற்கு தயாராக இருக்கிறோம். மீதமுள்ள தொகுதிகளை, மற்ற கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்தால் தான், மெகா கூட்டணி அமைக்க முடியும். தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களால் கட்சியில் ஏற்பட்டுள்ள இழப்பு, ஏற்காடு தேர்தல் புறக்கணிப்பு, போன்ற காரணங்களை எல்லாம், நாங்கள் பெரிதாக கருதவில்லை. உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., எடுத்துள்ள, 10 சதவீதம் ஓட்டுகள் அடிப்படையில், அக்கட்சிக்கு சீட்டு ஒதுக்கீடு செய்ய விரும்புகிறோம். தே.மு.தி.க.,வுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நமது நிருபர் dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக