திங்கள், 30 டிசம்பர், 2013

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்


இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ( வயது 75 ) காலமானார்.  பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.

தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில்  1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார்.  மரபணு மாற்ற விதை களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் நம்மாழ்வார்.  பேரிகை என்ற இயற்கை  வழி வேளாண்மை மாத இதழையும் நடத்தி வந்தார். 
மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிராக  தொடர்ந்து போராடி வந்தார். தற்போதும் அவர்,  மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவே பட்டுக்கோட்டை சென்றிருந்தார்.  அங்கே, லெனின் என்பவர் வீட்டில் தங்கியிருந்த அவர்,  உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக