சனி, 7 ஜூலை, 2012

5 Star மக்களின் தாகம் தீர்க்கும் 24 நேரமும் மது

 சாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க ‘தீயா’ வேலை பார்க்கிறது

சென்னை, திருச்சி நகரங்களில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பார்களில் 24 மணி நேரமும் மது பரிமாறப்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதால் இந்த சிறப்பு சலுகை தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
பன்னாட்டு விமான நிலையங்கள் இல்லாத மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணம் செலுத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் கடை விரிக்கலாம்.

Akilesh Yadav மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்!

அகிலேஷ் யாதவ்
ஜூலை 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள கார்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சட்டசபையில் அறிவித்தார். அதற்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதன் மூலம் அவரது கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சொன்னார்.
ஊடகங்களில் பெருத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அடுத்த நாளே அந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். நாம் கவனிக்க வேண்டியது இத்தகைய திட்டத்தை அறிவிப்பதற்கான அரசியல் பின்னணியும் சூழலும்தான்.
மனித வள மேம்பாட்டு குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் 35 மாநிலங்களில்  உத்தர பிரதேசம்  34வது இடத்தில் இருக்கிறது (புனிதர் நிதீஷ் குமார் ஆளும் பீகார்தான் அந்த கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது). உலக நாடுகளின் வரிசையில் ஒப்பிட்டால் உத்தர பிரதேசம் கானா, காங்கோ, லாவோஸ், கென்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விட பின் தங்கியிருக்கிறது.

Air India Pilots தேவை 434 ஆனால் இருப்பதோ 750 மக்களின் வரிப்பணம் கோவிந்தா கோவிந்தா

புதுடில்லி: "ஏர்-இந்தியா நிறுவனத்தில், தேவைக்கு அதிகமாக, 256 பைலட்கள் உள்ளனர்' என, அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்களை, ஏர் இந்தியா நிறுவனமும், உள்நாட்டு விமானச் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நிர்வகித்து வந்தன. 
ஆனால், 2007ம் ஆண்டு, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, தற்போது ஏர்-இந்தியா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேவைகளுக்கு, 494 பைலட்கள் போதுமானது. ஆனால், இருப்பதோ 750 பைலட்கள் என, ஏர்-இந்தியா நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களில் இந்திய பைலட்கள் கில்டு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பைலட்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 7ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

1 கோடி பரிசு கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால்

கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்ல வைகள் அல்ல. இதனால் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.
கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்லவைகள் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.

தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் அதன் கள் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் நடந்தது.கீழ்ப்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர்கள் கோபிநாத், தங்கராசு, கனகராசு, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமசாமி மற்றும் பி.கே.ராமசாமி, இல.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருளாக நெருக்கடிக்கான தீர்வாக எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு எத்தனால் தயாரிக்கவும், அதை விற்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. எத்தனாலை 85 சதவீதம் அளவுக்கு பெட்ரோலில் கலந்து வாகனங்களை ஓட்டலாம்.

Mumbai தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு தோட்டாக்கள் வழங்கிய ஐ.எஸ்.ஐ., அதிகாரி

புதுடில்லி: "" மும்பையில் நடந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டவை,'' என, பயங்கரவாதி அபு ஜுண்டாலிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அபு ஜுண்டாலை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். ஜுண்டாலை, டில்லி சிறப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது, ஜுண்டால் கூறியுள்ளதாவது: மும்பையில் தாக்குதலுக்கு முன், பாகிஸ்தான் உளவு அமைப்பின் உயரதிகாரியான சமீர் அலி, பாக்., ஆக்கிரமிப்புக்கு காஷ்மீருக்கு வந்தார். மும்பையில் தாக்குதல் நடத்த செல்லவிருந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கியிருந்தனர். அவர்களிடம், தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஏ.கே.,-47 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களை அவர் அளித்தார்.

2.5 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கும் வைரஸ் பாதிப்பு!

2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வைரஸ் மூலம் வருகிற திங்கட்கிழமை முடக்கப்பட இருப்பதாக ஓர் பரபரப்பு ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
சமீபமாகவே கம்ப்யூட்டர் ஹேக்கிங், வைரஸ் பாதிப்பு என்று பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதை தொடர்ந்து ஆலுரியான் என்ற வைரஸை பரவுவதன் மூலம் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வருகிற திங்கட்கிழமை முடக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வெள்ளி, 6 ஜூலை, 2012

Karnataka ஆசிரமத்திற்கு மூடு விழா...கொடைக்கானலில் புதிய ஆசிரமம் அமைக்கிறார் நித்தியானந்தா??

 Nithyanantha Plans Establish New As
சென்னை: கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குள் இனி காலெடி எடுத்து வைப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதால், தமிழகத்திற்குள் தனது ஆசிரமத்தை ஷிப்ட் செய்ய நித்தியானந்தா தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. அதுவும் கொடைக்கானலில் தனது புதிய ஆசிரமத்தை அவர் திட்டமிட்டிருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய திட்டத்துடன்தான் அவர் அடிக்கடி கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டு வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவரான நித்தியானந்தா, தனது தியான பீடம் எனப்படும் ஆசிரமத்தை கர்நாடக மாநிலம் பிடதியில் அமைத்து செயல்பட்டு வந்தார்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஐவர் குழு ஒப்புதல்:உம்மன்சாண்டி

 New Mullai Periyar Dam Gets Approval Of Empowered
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐவர் குழு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் இன்று பேசிய உம்மன் சாண்டி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஐவர் குழு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்ற பிறகு புதிய அணை கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றார்.

Flibanserin உற்சாகம் தரும் லேடீஸ் வயாகரா!

Flibanserin, a Medical Treatment for Female Hypoactive Sexual Desire Disorder      Flibanserin is a new drug being investigated for the prevention of HSDD in woman. HSDD, is a relatively new term developed to describe Hypoactive Sexual Desire Disorder which basically means a woman whose is otherwise healthy has a lacking libido, or a lack of sexual desire. Studies show that about 10-20% of women face this problem and some say HSDD outnumbers men with sexual problems. Flibanserin is classified as a 5-HT serotonin receptor agonist and a dopamine D4 receptor partial agonist. It is a Non-Hormonal agent that in essence increases dopamine and noradrenalin while reducing Serotonin in the brain. This in return seemingly has a positive effect on a woman's sexual craving who was otherwise lacking in this area. The benefits of it being Non-Hormonal are that it will not have the problems associated with other hormonal treatments such as a negative altered mood among other issues.
மனஅழுத்தம் போக்கும் மருந்து ஒன்று பெண்களின் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. பிளிபான்செரின் என்ற அந்த மருந்தினை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும். இது நேரடியாக மூளையில் சென்று மூளையின் பரவசப் பகுதிகளைத் தூண்டி விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட வயாகரா உலகெங்கும் பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் குவிக்கிறது. அது கூட இதய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றபோது எதேச்சையாய் அகப்பட்டது தான். ஆண்களுக்கு வயாகரா போல பெண்களுக்கு எந்த மாத்திரையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்த குறையை போக்க தற்போது புதிதாக ஒரு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Kingfisher மல்லையாவின் 7500 கோடி கடனைத் தீர்க்க முடியாது


மும்பை: கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு தந்துள்ள ரூ. 7,000 கோடியை வசூலிக்க விஜய் மல்லையாவின் மும்பை அலுவலகத்தையும் கோவாவில் உள்ள வில்லாவையும் ஏலம் விடப் போவதாக 17 வங்கிகள் கூட்டாக எச்சரித்துள்ளன.
இந்த ஒரிசாவை சேர்ந்த சுத்த பிராமணியின் குலத்தொழில் சாராயம் விஸ்கி பீர் உற்பத்தி தற்போது கொடிகட்டி பறப்பது விமான சேவை தொழில் ஆனால் இவர் அதிகமாக பணம் சம்பாதித்தது அரச வங்கிகளை பின்கதவால் சுரண்டியதாகும் 
இந்த நிறுவனத்துக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என மொத்தம் 17 வங்கிகள் இதுவரை பல்லாயிரம் கோடிகளைக் கடனாகத் தந்துள்ளன. வட்டி, அதன் குட்டி எல்லாம் சேர்த்து இப்போது அந்தத் தொகை ரூ. 7,500 கோடியை எட்டிவிட்டது.
இதையடுத்து மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள இரண்டு மாடி கிங்பிஷர் கார்ப்பரேட் அலுவலகம், கோவா அகுடா போர்ட் பகுதியில் உள்ள விஜய் மல்லையாவின் பிரமாண்டமான வில்லா ஆகியவற்றை ஏலம் விட இந்த வங்கிகள் முடிவுக்கு வந்துள்ளன.

மாயாவதி சொத்து வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: பகுஜன் சமாஜ்கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.
8 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஐ தாக்கல் செய்த சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு மே மாதம் மாயாவதி மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது வருமானம் நேர்மையானதுதான் என்று வருமான வரி தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளதையும், அதை தில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ளுமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மாயாவதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிபிஐயின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Besant Nagar பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடனும்

பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் அடாவடி :
உயிருக்குப்பயந்து பயணிகள் அலறல்
சென்னை பெசன்ட் நகரிலிருந்து சுங்கச்சாவடிக்கு சென்று கொண்டிருந்த பஸ்சில் (6டி), மாநில கல்லூரி மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர் ஏறினர். கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் ஆக்ரோஷமாக ஏறியதால், பயணிகள் அலறினர்.
சத்தம் போட்டால் அடி விழும் என, மிரட்டிய மாணவர்கள் யாரையோ பஸ்சில் தேடினர். அப்போது, பல மாணவர்கள் பஸ்சின் மேல் கூரையில் ஏறுவதும், கீழே இறங்குவதுமாக பயணிகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால், வள்ளலார் நகருக்கு செல்ல வேண்டிய பல பயணிகள் பாதியிலேயே, ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஓடினர்.

ஆந்திரத்து 'அல்வாக்கள்'! சூப்பர் ஹீட் ஆட்டக்காரிகள்


முன்பெல்லாம் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா என்று ஒரு திரை வரிசை கோலிவுட்டைக் கலக்கியது. அத்தனை பேரும் ஆந்திரத்து ரசகுல்லாக்கள். இன்றும் அதே போல ஆந்திரத்து அல்வாக்கள் குரூப் ஒன்று கோலிவுட்டை சூடாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அழகிகள் அத்தனை பேருமே குத்துப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். ஓங்குதாங்காக இருக்கும் இவர்கள் இல்லாமல் ஒரு படமும் கிடையாது என்றாகி விட்டது இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.
இன்றைய தேதியில் நாகு என்ற நாகமல்லேஸ்வரி, சுஜாதா மற்றும் கல்யாணி ஆகியோர்தான் சூப்பர் ஹீட் ஆட்டக்காரிகளாக உள்ளனர். அதிலும் ராஜமுந்திரியிலிருந்து ரகளையாக வந்திருக்கும் நாகுவுக்குத்தான் செம கிராக்கியாம். முன்பு சில்க் வேண்டு்ம் என்று வேண்டி விரும்பி கேட்டதைப் போல இப்போது நாகு டான்ஸ் போடுங்கோ என்று விரும்பி வாங்கி வெளுத்துக் கட்டுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.

ஜெ.வை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற அமைச்சர் ஓ.பி.எஸ். சதி அம்பலம்!

viruvirupu.com




“இந்தியாவின் பிரச்னைகள் தீர வேண்டுமானால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆகவேண்டும்” என்று கூறியிருக்கிறார், தமிழக நிதியமைச்சரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். 
இந்தியா சமீப காலமாக பொருளாதாரப் பிரச்னை, பாகிஸ்தானுடன் பிரச்னை, வெளியுறவுக் கொள்கையில் பிரச்னை என பல பிரச்னைகளில் மூழ்கியுள்ளதை, அமைச்சர் பன்னீர் சமீபத்தில் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது.
அதையடுத்தே, பாரத தேசத்தின் நலனுக்காக, அம்மா அவர்களை சலுகை முறையில் டில்லிக்கு வழங்க (விலையில்லாத ஆடு போலவா?) அமைச்சர் பன்னீர்செல்வம் தயாராக உள்ளார். (அவர் டில்லிக்கு போனால், இவர் சென்னையில் முதல்வரா?)
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரானிய எண்ணை இறக்குமதி கொள்கையால் ஏற்பட்டுள்ள பிரச்னை, அமெரிக்க பொருளாதார சீர்குலைவு, ஆகியவற்றை தீர்த்து வைக்க அம்மா அவர்களை அங்கெல்லாம் அனுப்பி வைக்கும் திட்டம் ஏதும் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இல்லை என தெரிகிறது.

திருவண்ணாமலை சமூக சேவகர் கொலை வழக்கு .44 police மீது புகார்

44 காவல்துறை அதிகாரிகள் மீது புகார்
திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் ராஜ்மோகன் சந்திரா கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதில் நிறைய மர்மங்கள் உள்ளன என பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று களமிறங்கியது.

மக்கள் கண்காணிப்பகத்தின் தமிழ்நாடு இயக்குநர் மனித உரிமை ஆணையத்தின் வழக்கறிஞர் ராசன், மண்டல மக்கள் கண்காணிப்பக ஆலோசகர் வழக்கறிஞர் முருகேசன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் காப்பாளர் அசீர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், வழக்கறிஞர் விநாயகம் உள்ளடக்கிய குழுவில் இருந்தனர். ராஜ்மோகன் சந்திராவின் மனைவி, அவரது நண்பர்கள், அவருக்கு உதவிய வழக்கறிஞர்கள் என பல தரப்பிலும் தகவல்களை சேகரித்து அறிக்கை தயார் செய்துள்ளனர்.

அதுப்பற்றி இன்றைய செய்தியாளர்களை அழைத்து பேசிய வழக்கறிஞர் ராசன், ''உண்மையான குற்றவா ளிகள் கண்டறியப்பட வேண்டும். பொது நல வழக்குகள் அதிகளவில் காவல்துறையினர் மீது பதிவு செய்தவர் என்பதால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்ரீன கைப் உலகின் மிக sexi யான பெண்ணாமே



ஆண்களுக்கான முன்னணி இதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் உலகின் செக்சியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘ஏக் தா டைகர்’, 'தூம்-3’, மற்றும் ஷாருக்கானுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் தற்போது நடித்துவரும் காத்ரினா தொடர்ந்து 4-வது முறையாக இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சக நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா மற்றும் ஹாலிவுட் நடிகை களான மெகன் பாக்ஸ், ஏஞ்சலினா ஜோலி ஆகியோ ரைப் பின்னுக்குத் தள்ளி காத்ரினா மீண்டும் மகுடம் சூட்டியுள்ளார்.

Tamilnadu 24 hours bar open இனி பார் விடிய விடிய திறந்திருக்கும்

இனி 24 மணி நேரமும் BAR open in Chennai.. Madurai..Kovai...thruchi.

சென்னை: பார் புகழும் தமிழகத்தின் மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினக் கல்லை தூக்கி வைத்துள்ளது தமிழக அரசு. அதுதான் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து குடிமக்களுக்கு சர்வீஸ் செய்யலாம் என்பது.
தமிழகத்தின் பெருநகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
 இந்த நகரங்களில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல்களில் கூடுதல் சுங்க வரியைச் செலுத்தி விட்டு, 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து 'குடிமக்களுக்கு' மது விற்பனை செய்யலாமாம்.!
ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் அரசுக்கு எக்குத்தப்பாக வருவாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கும் அனுமதியை அளித்துள்ளது அரசு.

பெரியார் தி.க., பிரமுகர் சுட்டுக்கொலை:தலையை தனியாக வெட்டியும் கொடூரம்

ஓசூர்:உத்தனப்பள்ளி அருகே, பெரியார் தி.க., மாவட்ட அமைப்பாளரை, டாடா சுமோ மற்றும் பைக்கில் வந்த, 20 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும், தலையை அரிவாளால் கொடூரமாக வெட்டியும் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பாலேபுரத்தைச் சேர்ந்தவர் பழனி,47. இவரின் மனைவி முருகம்மாள். இவர்கள் மகன் வாஞ்சிநாதன்,25. பழனி ஆரம்பத்தில், கிருஷ்ணகிரி அருகே சந்தூர் கிராமத்தில் வசித்தார்.
விவசாயி:பத்து ஆண்டுகளுக்கு முன், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபம் பாலேபுரத்தில் குடியேறி, விவசாயம் செய்து வந்தார். பெரியார் தி.க., கட்சியின் மாவட்ட அமைப்பாளராக, தீவிரமாக இயக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்.நேற்று அதிகாலை, 6 மணிக்கு பழனியும், மகன் வாஞ்சிநாதனும், விவசாயத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றனர். வாஞ்சிநாதன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். பழனி, கிணறு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது, டாடா சுமோ மற்றும் பைக்குகளில் வந்த, 20 பேர் கொண்ட கும்பல் தோட்டத்தில் புகுந்து, பழனியை நோக்கி சென்றனர். அதில், நான்கு பேர் மட்டும் பழனியிடம் சென்று பேசினர். மற்றவர்கள் தூரமாக நின்றனர்.

நித்யானந்தா மீது பெற்றோர் பகீர் புகார் கதறி அழைத்தும் வர மறுத்த சீடர்

பெங்களூரு: நித்யானந்தா சீடரான சந்தோஷ், பெற்றோருடன் செல்வதற்கு, நீதிபதி முன்னிலையிலேயே மறுப்பு தெரிவித்து, ஆசிரமத்துக்கு திரும்பி சென்று விட்டார்.
முன்னூர் கிருஷ்ணமூர்த்தி - ஜெயந்தி தம்பதியினரின் மகன் சந்தோஷ். அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். பணியை விடுத்து, நித்யானந்தா சீடராக இருந்து வருகிறார். ஆசிரமத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டதால், கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர், சந்தோஷை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சந்தோஷ், "வரமுடியாத சூழ்நிலையில் உள்ளேன்' எனக் கூறியுள்ளார். இதனால், தங்கள் மகன், ஆசிரமத்தில் ஆபத்தில் இருப்பதாகவும், அவனை மீட்டு தருமாறும் பிடதி போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீஸ் நிலையம் வந்த சந்தோஷ், "ஆசிரமத்தை விட்டு நான் வர முடியாது' எனக் கூறி விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, "என் மகனை, நித்யானந்தா, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். மகனை மீட்டு தாருங்கள்' எனக் கோரியிருந்தார்.

I.G சிவனாண்டி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி நில மோசடி வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் 12 ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சிவனாண்டியின் சஸ்பெண்ட் 7-3-2012 முன்தேதியிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

வியாழன், 5 ஜூலை, 2012

கனடாவுக்கு தப்பியோடிய மாஜி பிரான்ஸ் அதிபர் சர்கோசி

Sarko Carla Fled Canada Hours Before Raid On Paris Home
மொன்ட்ரியல்: பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின்போது முறைகேடாக நிதி திரட்டிய புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி தமது மனைவி கர்லா புரூனியுடன் கனடாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.
பிரான்ஸ் அதிபரான சர்கோசி, கடந்த 2007-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் பணக்காரரான லிலியான் என்பவரிடம் முறைகேடாக தேர்தல் நிதி திரட்டியதாக புகார் கூறப்பட்டது.
அவர் பதவி வகித்த காலத்தில் இந்த புகார் எழுந்தது. ஆனால் இதை மறுத்த சர்கோசி, தாம் அதிபர் என்பதால் தமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார். தாம் பதவி காலத்தில் இருக்கும் வரை வழக்கு விசாரணைக்கு தடையும் கோரி இருந்தார்.
இந்நிலையில் புதிய அதிபர் பதவி ஏற்ற நிலையில் நேற்று முன்தினம் பாரீஸில் உள்ள சர்கோசியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையின் போது சர்கோசி அந்த வீட்டில் இல்லை.போலீசார் வருவதற்கு முன்பாகவே அவர் எஸ்கேப்பாகிவிட்டார்.

பாலிவுட் நடிகை லைலான் கான் குடும்பத்துடன் சுட்டுக் கொலை

மும்பை: மர்மமான முறையில் காணாமல் போன பாலிவுட் நடிகை லைலா கான் அவரது குடும்பத்தினருடன் மும்பையைச் சேர்ந்த கும்பலால் கடந்த ஆண்டே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.
2011-ம் ஆண்டு மும்பையிலிருந்து காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்ற லைலாகான் மர்மமான முறையில் மாயமானார். அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜம்முவில் பர்வேஷ் டாக் என்பவரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
லைலா கானின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்காக கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி மும்பையைச் சேர்ந்த கும்பல் ஒன்று லைலாகானையும் அவரது குடும்பத்தினரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக பர்வேஷ் டாக் கூறியுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளார்

10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்!

சமீப காலங்களில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி கசிந்திருக்கிறது. பத்து லட்சம் கோடி அளவுக்கான இதன் பிரம்மாண்டம் ஒரு கணம் மலைக்கச் செய்கிறது. 
சமீபகாலமாக ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாகி வெடித்தெழும் போது அது முந்தைய ஊழல் சாதனையை விஞ்சுவதாக இருக்கிறது. உலகமயமாக்க புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட1992-ம் ஆண்டிலிருந்து 2009 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே சுமார் 73 லட்சம் கோடி மதிப்புக்கு ஊழல்கள் நடந்திருப்பதாக அவுட்லுக் இதழ் ஒரு கணக்கைச் சொல்கிறது. அதன் பின் தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த 1.67 லட்சம் கோடி ஊழல் அம்பலமானது.<br /> இந்த இருபதாண்டுகளில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி ஊடகங்களில் கசிந்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (CAG) வரைவறிக்கை சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதை ஊழல்களின் மகாராணி என்றே ஊடகங்கள் பிரமிப்புடன் குறிப்பிடுகின்றன.

வரலாறு காணாத வெற்றி ஜெயித்தது திமுகதான்...!

 Dmk Has Some Reasons Smile
சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் நிச்சயம் அதிமுக அரசுக்கு பெருத்த டென்ஷனை ஏற்படுத்தி விட்டது உண்மையே. இந்தப் போராட்டத்தில் திமுகதான் கண்டிப்பாக ஜெயித்துள்ளது என்று கூறலாம்- 
உண்மையிலேயே சிறைக்குப் போகாவிட்டாலும் கூட.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் தினசரி திமுகவினர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். கடைசியில் வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டத்தை அதிமுக அரசு பிரயோகித்தபோது திமுகவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. இதை இப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தொண்டர்கள் சோர்ந்து போய் விடுவார்கள். நமது எதிர்ப்பை ஏதாவது ஒரு விதத்தில் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர் தலைமைக்கு.
இதையடுத்து கூட்டப்பட்ட திமுக செயற்குழுவில் பல்வேறு வகையான போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் மிகப் பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் போராட்டத்திற்கு திமுக தொண்டர்கள் ஆதரவு தர மாட்டார்கள், தலைவர்கள் ஜாலியாக வெளியே இருக்க தாங்கள் மட்டும் எப்படி சிறையில் அடைபடுவது, அதுவும் ஜெயலலிதாவை நம்பி ஜெயிலுக்குப் போனால் என்ன நடக்குமோ என்றெல்லாம் திமுகவினர் தயங்குவதாக தகவல்கள் வெளியாகின.

வேதாரண்யம்..காதல்ஜோடிகளை கொல்லும் காட்டுமிராண்டிகள்

காதல் ஜோடி கொடூர கொலை! வேதாரண்யம் அருகே நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்! 
 நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு போலீஸ் சரகம், சேனாதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர், நடராஜன். இவரது மகள் கரிஷ்மா (வயது 19). பி.ஏ. பட்டதாரி. ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சுதாகர் (21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
ரெத்தினம் குடும்பத்துடன் சமீபத்தில் சேனாதிக்காட்டிற்கு குடிபெயர்ந்தார். அப்போது கரிஷ்மாவிற்கும், சுதாகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டு காலமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்ததால், இருவருடைய பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஒருவரையொருவர் சந்திக்கவும் தடைவிதித்தனர். பெற்றோர் கண்டித்ததால் கரிஷ்மாவுடனான தனது காதல் தோல்வியில் முடிந்து விடுமோ? என்று சுதாகர் பயந்தார்.

ஹிக்ஸ் போஸான் : கிட்டத்தட்ட கடவுள்

கடவுள் துகளை (God Particle) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டதாக நேற்றைய தினத்திலிருந்து கதறுகின்றன ஊடகங்கள். ஏதோ கடவுளையையே கண்டுபிடித்து விட்டது போல! கண்டுபிடித்துவிட்டது உண்மையானால், தொலைத்தவர் யார் என்று பகடிகள் வேறு!
கடவுளிடம் போகும் முன் முதலில் சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கலாம்.
இன்றைய நவீன துகள் இயற்பியல் (Modern Particle Physics) பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கும் சித்தாந்தம் – நியம மாதிரி (Standard Model) என்பதாகும். இது அணுக்கூறுகளிடயே (Subatomic Particles) இயங்கும் மின்காந்த விசை (Electromagnetic Force), மென்விசை (Weak Force), வன்விசை (Strong Force) ஆகிவற்றை விளக்குகிறது.
இதன்படி பிரபஞ்சம் மூலத்துகள்களால் (Elementary Particles) ஆனது. சூரியன், சந்திரன், கடல், காற்று, அனக்கோன்டா பாம்பு, ஐஸ்வர்யா ராய், நீங்கள், நான் எல்லாமே.
இந்த‌ மூலத்துகள்கள் இரண்டு வகைப்படும் – ஃபெர்மியான்கள் (Fermions) மற்றும் போஸான்கள் (Bosons). இத்தாலிய‌ இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மியின் பெயரால் அழைக்கப்படுபவை ஃபெர்மியான்கள். இவை ஃபெர்மி – டைராக் புள்ளியியல் (Fermi-Dirac Statistics) சொல்லும் குணங்களைக் கொண்டிருப்பவை. இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸின் பெயரால் அழைக்கப்படுபவை போஸான்கள். இவை போஸ் – ஐன்ஸ்டைன் புள்ளியியலைப் (Bose-Einstein Statistics) பின்பற்றுபவை.

கர்நாடக சட்டசபையை கலைக்க அத்வானி அறிவுறுத்தல்!

 Lk Advani Tells Karnataka Bjp Again பெங்களூர்: கர்நாடகத்தில் எதியூரப்பாவும் எதிர் கோஷ்டிகளும் நடத்தி வரும் அரசியல் சர்க்கஸால் மக்களை விட அதிகமாக நொந்து போயிருக்கிறார் பாஜக மூத்த தலைவரான அத்வானி.
கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை கர்நாடகத்தில் இல்லாத அளவுக்கு கோஷ்டிப் பூசலை பாஜக சந்தித்துவிட்டது. கூடவே ஊழல் புகார்கள், நில அபகரிப்புகள், அமைச்சர்கள் மீதான பெண் வில்லங்க விவகாரங்கள் என நாறிக் கிடக்கிறது நிலைமை.

பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!

 Rs 10 Lakh Cr Worth Jewells Found Padmanabhaswamytemple
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் 5வது ரகசிய அறை கடும் முயற்சிக்குப் பின்னர்திறக்கப்பட்டது. அந்த அறையில் சுமார் 10 லட்சம் கோடி மதிப்பிலான, தங்க, வைர நகைகள் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷம் குவிந்திருப்பதாகவும், இதை சிலர் அபகரித்து வருவதாகவும், எனவே இதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கேரளம், குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம்

 Kerala Is Country S Most Crime Prone State Statistics
டெல்லி : இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலம், கடவுளின் சொந்த இடம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வந்த கேரளம் இனி, குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம் என்ற அடைமொழியையுடன் அழைக்கப்பட உள்ளது என்பதை தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் அண்மைய தகவல்கள் கூறுகின்றன.
நாடுமுழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு, கடத்தல், வரதட்சணை மரணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குற்றவியல் புள்ளி கணக்கிடப்படுகிறது. குற்றவியல் புள்ளி என்பது ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு அங்கு நடைபெறும் குற்றவியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துக் கணக்கிப்படுவதாகும். அதிக மக்கள் தொகை உடைய மாநிலம் குறைவான மக்கள் தொகை உடைய மாநிலத்தைவிட அதிக குற்றங்களை உடைய மாநிலமாக இருக்கக் கூடும். ஆனால் குற்றவியல் புள்ளி சராசரியாகக் கணக்கிடப்படுகிறது.

சுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்?: விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மக்களை கொள்ளை அடித்து வீரர் வேஷம் போட்ட இந்த மன்னர்களின் வேஷம் கலைய இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவே 
சென்னை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான பணம் சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாண்டிய மன்னர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி ஜமீன். ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஜமீனுக்கு சொந்தமான பல சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து சிவகிரி ஜமீனான செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஏராளமான சொத்துகளுக்கு அவர் உரிமையாளர் ஆனார். பின்னர் அந்த சொத்துகளில் பல அவரது வாரிசான வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியாருக்கு சொந்தமாகின.
அதன் பின்னர் வரகுணராம பாண்டிய தம்பியாரின் சட்டபூர்வமான வாரிசு நான்தான் என்று கூறி எஸ்.கே.ஜெகநாதன் என்பவர் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். எனினும் நான்தான் உண்மயான வாரிசு என்று கூறி திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த பத்மினி ராணி அந்த வழக்குகளில் பிரதிவாதியாகச் சேர்ந்துள்ளார்.

ஏழ்மையை உற்பத்தி செய்யும் வால்மார்ட் எங்களுக்கு தேவையில்லை

 இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 8.81 டாலர் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு பணிபுரியும் முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக 8ஆயிரத்து 990 டாலர் வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைத்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம். வார்ல் மார்ட் கடந்த வருடம் அதன் நலன்களை பாது காக்க பிரச்சாரம் செய்த செலவு மட்டும் 430 கோடி டாலர் ஆகும்
 ஏழ்மையை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய வால்மார்ட் சில்லரை வர்த்தக நிறுவனம் எங்களுக்கு தேவையில்லை என்று அமெரிக்க லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள பாரம் பரியமிக்க சீனாடவுனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பண்பாடு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சீனாடவுனில் புதியகிளையை துவங்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் வால்மார்ட் இறங்கியுள்ளது. சுமார் 33 ஆயிரம் சதுரஅடியில் கட்டிடத்தை கட்டி அதில் கடையை திறக்க அனுமதி பெற்றுள்ளது. இதையறிந்த தெற்கு கலிபோர்னியா பகுதி மக்கள் வால்மார்ட் நிறுவனத்திற்கு சில்லரை வியாபாரத்தில் இப்பகுதியில் அனுமதி கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்படும்.

Stockholm Syndrome அடிமையாக வைத்திருப்பவனை ஆராதிப்பது / காதலிப்பது

 When men and women are placed in a situation where they no longer have any control over their fate, feel intense fear of physical harm and believe all control is in the hands of their tormentor, a stragedy for survival can result which can develop into a psychological response that can include sympathy and support for their captor's plight.
சுவீடன் தலைநகரான ஸ்டோக்கோம் இல் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் பொது பணயகைதிகளே மெதுவாக கடத்தல்காரர்மீது பரிவு காட்டிய வினோத சம்பவம் நிகழ்ந்தது .இது ஒரு மன நோய் 
கடத்தி அடிமையாக வைத்திருப்பவனை  காதலிப்பது என்பது உங்களுக்கு ஒரு விசித்திரமாக தெரியக்கூடும். 

Stockholm Syndrome என்பது மிகவும் விசித்திரமான ஒரு மன வியாதியாகும்.பலரும் பல சமயங்களில் தம்மை அறியாமலேயே இந்த Stockholm syndrome என்ற மனப் பிறள் நிலைக்கு ஆட்பட்டு இருக்ககூடும்.
நாம் எதை கண்டு பயப்படுகிறோமோ அதை மெதுவாக ஆதரிப்பது அல்லது அதை ஆராதிப்பது போன்ற விசித்திரமான நிலைக்கு  ஆட்படுவது.
ஒட்டு மொத்த சமுகமே இந்த ஸ்டாக்ஹோம் சின்றோம் என்ற வியாதிக்கு  ஆட்பட்டிருக்கும் விசித்திரம் எல்லாம்கூட சரித்திரத்தில் நடைபெற்றுள்ளது.
quantumstudies.blogspot.com

MBBS படிப்பிற்கு கட்டணம் எவ்வளவு?தனியார் மருத்துவ கல்லூரிகளில்

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணம், அதிகபட்சம் 2.8 லட்ச ரூபாயாகவும்; பி.டி.எஸ்., படிப்பிற்கு, ஒரு லட்ச ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. நடப்பு கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் நேற்று அறிவிக்கப்பட்டது.
கட்டணம் உயர்த்த கோரிக்கை: இதுகுறித்து, தனியார் தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலைவர் பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும், 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கோரின.

தற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் தற்கொலை அதிகரிப்பு

பெங்களூர்: இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் முதல் நான்கு முக்கிய நகரங்களில் பெங்களூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டு பெங்களூரில் 2,167 தற்கொலை வழக்குகள் பதிவாயின. அதுவே 2010ம் ஆண்டில் 1,778 பேரும் 2011ம் ஆண்டு 1717 பேரும் தற்கொலை மூலம் மரணமடைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய குற்றவியல் பதிவு மையத்தில் பதிவாகியுள்ள புள்ளிவிபரத்தின்படி டெல்லி. பெங்களூர், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. சென்னையில் 2,438 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதேபோல் டெல்லியில் 1,385 பேரும். மும்பையில் 1,162 பேரும் தற்கொலை செய்து மரணமடைந்ததாக பதிவாகியுள்ளன.

காட்சி பொருளாகிறது மாணவர்களின் இலவச மடிக்கணினி

thangairaja - Dammam,சவுதி அரேபியா
2012-07-05 00:18:02 IST Report Abuse
கலைஞர் கொடுத்த டி வி யே பரவாயில்லைன்னு தோணுமே. ஆனா சொல்லத்தான் மனசு வராது. எத்தனையோ ஏழைகளின் குடிசைகளில் அந்த தொலைக்காட்சியின் அருமையை உணர்ந்து இருக்கிறார்கள்.

சென்னை :பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை பயன்படுத்துவது பற்றிய போதிய பயிற்சியின்மை காரணமாக, காட்சி பொருளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியை பயன்படுத்துவது குறித்து, பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, மடிக் கணினிகள் முறையாக பயன்படுத்த முடியாமல் உள்ளன. புறநகர் பகுதிகளில், மாணவர்களுக்கு மடிக்கணினி பயன்படுத்துவது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மடிக்கணினி வழங்கும் போது, அதை எப்படி பயன்படுத்துவது என்ற வழிகாட்டு கையேடும், தமிழில் வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வழிகாட்டு கையேட்டை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

எதிர்பார்த்திராத எழுச்சி’ என்று நிச்சயம் கூறலாம்

தி.மு.க. போராட்டம்: போலீஸை மட்டுமா ஏமாற்றினார்கள் தொண்டர்கள்?

Viruvirupu
நேற்று நடைபெற்ற, தி.மு.க.-வின் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை இந்தளவுக்கு இருக்கும் என்பதை, ஆளும் கட்சி எதிர்பார்த்திருக்கவில்லை. தி.மு.க.-வேகூட எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 1 லட்சத்தைவிட அதிகம். (அதைவிட சற்று குறைவான எண்ணிக்கையை போலீஸ் சொல்கிறது)
போராட்டத்துக்கு முதல்நாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர், போராட்டத்தில் கலந்துகொள்ள பெயர்களை பதிவு செய்துள்ளார்கள்” என்றார். மறுநாள் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என அவரே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான அத்தனை பேரும் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். காரணம், அவ்வளவு பேரையும் சிறையில் அடைக்க முன்னேற்பாடுகள் ஏதும் கிடையாது. மாநிலம் முழுவதிலுமாக சுமார் 40,000 பேர் வரை சிறை வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
போலீஸ் எதிர்பார்த்த எண்ணிக்கை அவ்வளவுதான்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை முடக்க ரகசிய திட்டம்: அதிர்ச்சியில் ராமதாஸ்?

சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாமகவை முடக்கிப் போடும் திட்டம் இப்போது முதலே தயாராகி வருகின்றதாம். இதை அறிந்து பாமக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஜெயலலிதா:சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும் பயனற்ற வேலை

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை ஏன் சிறையில்
 அடைக்கவில்லை : ஜெயலலிதா விளக்கம் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினரை கைது செய்து சிறையில் அடைக்காமல் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில்,   ‘’சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் தி.மு.க.,வினர் ஜாமீன் கேட்கக்கூடாது என தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருந்தது.

புதன், 4 ஜூலை, 2012

போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!

காலை 11 மணியளவில் DPI அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். காலை 10.30 மணி வரை ஆர்ப்பாட்ட இடத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. ஆனால், போலிஸ்காரனுக்க மட்டும் படு உஷாராக இருப்பது தெரிந்தது. எப்படி?
நான் 10.30 மணிக்கு DPIஅலுவலகம் முன்பு சென்று தோழர்கள் இருக்கீறார்களா? என்று சுற்றம் முற்றும் பார்த்தேன். யரோ என்னை மெதுவாக அழைப்பது காதில் விழுந்த்து. அவரிடம் சென்றேன். எங்க போறீங்கனு யாரவது கேட்டால், +1 புத்தகம் வாங்க போறோமுனு சொல்லனுமுனு முடிவு செய்து உள்ளே சென்றோம்.

வாரிசுகள் அடிபட்டுக் கொண்டிருக்க, குஷ்பு தலைவியாகி விடுவாரோ!?

Viruvirupu



தி.மு.க.-வின் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஸ்டாலின் கலந்து கொண்டு கைதான கொளத்தூர், கனிமொழி கலந்து கொண்டு கைதான சைதாப்பேட்டை ஆகிய லெகேஷன்களுக்கு அடுத்தபடியாக, நட்சத்திர அந்தஸ்துடன் இருந்தது, சேப்பாக்கம். இங்கு என்ன விசேஷம்? குஷ்புதான் விசேஷம்.
தி.மு.க. துவங்கிய காலத்தில் பொதுக்கூட்டம் என்றால், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, மதியழகன், கருணாநிதி, அன்பழகன் என்று நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசுகிறார்கள் என்றால் கூட்டம் அலைமோதும். இப்போது, கருணாநிதி குடும்பத்தினருக்கும், சினிமா நட்சத்திரத்துக்கும் கூட்டம் வருகிறது.
ஸ்டாலின், கனிமொழிக்கு வந்த அளவில், குஷ்புவுக்கும் கூட்டம் திரண்டது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் எழிலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் லேசான ஒரு குழப்பம். எந்தவொரு அரசியல் கட்சியிலும் வரக்கூடாத குழப்பம். “யாருடைய தலைமையில் போராட்டம் நடக்கிறது?”
ஏரியாவில் எட்டிப் பார்த்தால் குஷ்புதான் ஜொலித்துக் கொண்டிருந்தார். மீடியா கேமராக்களும், குஷ்புவை சுற்றிச் சுற்றித்தான் வந்தன.

கனிமொழி: அதிமுகவுக்கு சரியான பதில் கொடுத்து விட்டோம், 2014ல் மக்கள் பதிலளிப்பார்கள்

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே பழிவாங்கும் அரசியலை மேற்கொண்டு வருகிறது. அதற்கு திமுக இன்று சரியான பதில் கொடுத்துள்ளது. இனி 2014 லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் தங்களது பதிலை ஆணித்தரமாக அளிப்பார்கள் என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் இன்று கனிமொழிதான் ஹைலைட்டாக இரு்நதார். இதற்காகவே அவருடைய போராட்டத்தில் வேறு முக்கியத் தலைவர்கள், குறிப்பாக குஷ்புவை அனுப்பாமல் வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி விட்டனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் கனிமொழியும் தொண்டர்களோடு சேர்ந்து அதிமுக அரசைக் கண்டித்து கோஷமிட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி மீண்டு வந்த பின்னர் கனிமொழி கலந்து கொண்ட முதல் போராட்டம் இது என்பதால் பல ஆயிரம் பேர் திரண்டு வந்திருந்தனர்.

திமுகவே எதிர்பாராத அளவில் சிறை நிரப்ப திரண்ட லட்சம் தொணடர்கள்- கைதாகி விடுதலை!

 Dmk Hold Jail Bharo Agitation Today
சென்னை: திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை கைதானதாக திமுகவினர் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான அத்தனை பேரும் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அழகிரி,அன்பழகன், பரிதி இளம்வழுதி, துரைமுருகனும் 'ஆப்சென்ட்'!

சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மட்டுமல்லாமல் மேலும் சில முன்னணி திமுக தலைவர்களும், இன்றைய சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் பதவியைப் பிடிக்க மு.க.ஸ்டாலினுடன் கடுமையாக மோதி வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது கூடத் தெரியவில்லை.
இந்தப் போராட்டம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே புறக்கணிப்பு செய்து வந்தார் அழகிரி. இந்தப் போராட்டம் குறித்த முக்கிய முடிவை எடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் போகவில்லை. இப்போது போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.

மாவட்ட வாரியாக கைதானோர் விபரம்

 District Wise Arrest List Dmk Cadre மாவட்ட வாரியாக எத்தனை திமுகவினர் கைது?... இதோ பட்டியல்!

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட வாரியாக எத்தனை திமுகவினர் கைதாகியுள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுக தரப்பில் தரப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் உள்ள விவரம்...
திண்டுக்கல்லில் 25,000 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் 5000 பேரும், விழுப்புரத்தில் 20,000 பேரும், திண்டுக்கல்லில் 25,000 பேரும், திருவண்ணாமலையில் 5000 பேரும், திருவள்ளூரில் 5000 பேரும், திருச்சியில் 7000 பேரும், கிருஷ்ணகிரியில் 5000 பேரும், தேனியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர்.
தஞ்சாவூரில் 15,000 பேர் கைது
அதேபோல கடலூரில் 10,000 பேரும், தஞ்சையில் 15,000 பேரும், நாகையில் 10,000 பேரும், கன்னியாகுமரியில் 2000 பேரும், வேலூரில் 15,000 பேரும் கைதாகியுள்ளனர்.
திருப்பூரில் 10,000, தர்மபுரியில் 10,000, தூத்துக்குடியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 20,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையி்ல 10,000 பேர் கைது
மு.க.அழகிரியின் கோட்டையாக கூறப்படும் மதுரையில் 10,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடந்த போராட்டத்தில் மு.க.அழகிரி மட்டும் பங்கேற்கவில்லை.
சென்னையில் மட்டும் 50,000 பேர் கைது
தலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.
மத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும்.

30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இளைஞர்கள்!


How Passion Vanishes Your 30s
பொருளாதார ரீதியான சிக்கல், குடும்ப சூழல், வேலைப்பளு போன்றவைகளினால் 30 வயதில் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர் தெரிவித்துள்ளனர். 
அவர்கள் திருப்தியற்ற வாழ்க்கை வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.செக்ஸ்க்கு ஏற்ற வயது 50 என்று அந்த செக்ஸ் சென்செஸ் தெரிவித்துள்ளது. முப்பது வயதை கடந்துள்ள ஆணோ, பெண்ணோ மன அழுத்தம், பொருளாதார சிக்கல், குழந்தைபிறப்பு, போன்ற காரணங்களினால் படுக்கை அறையில் போராடத்தான் வேண்டியிருக்கிறாதாம். இந்த சிக்கல்கள் எல்லாம் ஓய்ந்து ஒரளவு நிம்மதியான சூழலில் 50 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே சந்தோஷமாக தன்னம்பிக்கையுடன் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.

எக்குத்தப்பாக குவிந்து விட்ட திமுகவினர்...எங்கு போய் அடைப்பது என தெரியாமல் விழிக்கும் அரசு!


 Massive Arrest Dmk Cadres Put Police In Great Fix
சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர், தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்களை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைகள் உள்ளன. இதில் 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடியும். தற்போது சிறைகளில் 13,970 கைதிகள் உள்ளனர்.
இன்று நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு சில ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று அரசும், காவல்துறையும் எதிர்பார்த்திருந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளதாக தெரிகிறது.

1 லட்சம் திமுகவினர் கைது


தமிழகம் முழுக்க திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் : 1 லட்சம் திமுகவினர் கைது திமுகவினரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது

 தாம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘திமுகவினரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கைதாகி சிறைக்கு சென்றால் யாரும் ஜாமீனில் வெளியே வரக் கூடாது’ என்று கூறினார். செயற்குழு முடிவின்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Scientology..Tom Cruise - Katie விவாகரத்துக்கு காரணமான 'சைன்டாலஜி'!

Tom Cruise Katie Holmes Split The Full Story
தன் மூன்றாவது மனைவிக்கு அமைதியாக செட்டில்மென்ட் செய்யும் முடிவில் இருந்த டாம் குரூஸ், அதை மீறி விஷயம் நீதிமன்றத்துக்குப் போய்விட்டதால் பெரும் வருத்தத்தில் உள்ளாராம்.
ஆனால் இந்தப் பிரிவுக்குக் காரணம் சைன்டாலஜி எனப்படும் மத அமைப்புதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஆலிவுட் நடிகர் டாம்குரூஸ் (49). இவருக்கு ஏற்கெனவே 1987-ம் ஆண்டு மிமி ரோஜர் என்பவரைத் திருமணம் செய்து 1990-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
1990-ம் ஆண்டு நடிகை நிகோல் கிட்மேனை மணந்தார். இருவரும் 2001-ல் விவாகரத்து பெற்றனர்.

போராட்டம் பிரமாண்டமான வெற்றி! அதிமுக அரசு திருந்தும் என்ற நம்பிக்கை இல்லை! கலைஞர் பேட்டி!

 பால் விலை, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
தி.மு.கவின் சிறை நிரப்பும் போரட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் முன்னாள் அமிச்சர்கள், தி.மு.க நிர்வாகிகள் ஆயிரகணக்கான தொண்டர்கள் கைதாகினர்.
இது குறித்து தி.மு.க தலைவர் கலைஞர் கூறியதாவது:  தி.மு.க போரட்டத்தில் எதிர்பார்த்த அளவை விட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க.வின் போராட்டம் பிரமாண்டமான வெற்றியை பெற்று உள்ளது. எத்தனை போராட்டங்கள் நடத்தினால் அதிமுக அரசு திருந்தும் என்ற நம்பிக்கை இல்லை. எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் என்றார்.

50,000 பேர் கைது!திமுதிமுவென திரண்ட திமுகவினர்


 Dmk Hold Jail Bharo Agitation Today
 தமிழகம் முழுவதும் இதுவரை 50,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதாகவும், குண்டர் சட்டத்தைப் பிரயோகிப்பதாகவும் திமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த அது அழைப்பு விடுத்திருந்தது.

'Camera பயத்தில்' நிதானமாக செயல்பட்ட போலீஸார்!

திமுக போராட்டம்: 'கேமரா பயத்தில்' நிதானமாக செயல்பட்ட போலீஸார்!

சென்னை: திமுகவினர் கைது சம்பந்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்ததால் இன்றைய கைது நடவடிக்கையின்போது போலீஸார் படு கவனமாக இருந்தனர்.
திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டையில் கனிமொழி கைது.வழியனுப்பினார் ராசாத்தி அம்மாள்!

 Kanimozhi Arrested Rajathi Ammal Gives Send Off
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.

குஷ்பு, தயாநிதி மாறன்... தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது!

 Kushboo Arrested சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். 
 திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

வீடியோ கேமில் த்ரிஷா மிகவும் செக்சியாக காட்டப்படுகிறார்

பிரபலமான நிறுவனத்தின் வீடியோ-கேம்கள் வந்த விரைவிலேயே விற்று தீர்ந்துவிடும். 
ஆனால் வளர்ந்துவரும் நிறுவனங்கள் தங்களது வீடியோ-கேம்களில் பிரபலமான நடிகைகளின் உருவத்தை பயன்படுத்தி தங்களது கேம்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும். அந்த நடிகைகளுக்கென ஒரு விலை பேசி கொடுத்துவிடுவார்கள். பெரும்பாலும் ஹாலிவுட்  ஹீரோயின்களின் உருவத்தையே அனைத்து நாட்டு வீடியோ-கேம் நிறுவனங்களும் பயன்படுத்திவந்தன. 
ஆனால் முதல்முறையாக இந்திய நடிகையான த்ரிஷாவின் உருவத்தை தனது வீடியோ-கேமில் பயன்படுத்தியுள்ளது ‘அட்லஸ்’ நிறுவனம். ’CATHERINE' என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோகேமில் வரும் ‘கோல்டன் பிளேஹவுஸ்’ என்ற டிவி நிகழ்ச்சியினை தொகுத்துவழங்கும் பெண்ணாக த்ரிஷாவின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ-கேமில் த்ரிஷா என்ற பெயரையே உபயோகப்படுத்தியுள்ளனர். 

நித்யானந்தா சிஷ்யைகளுக்கு நேற்றிரவு சாய முடியாமல் ஏற்பட்ட சங்கடம்!


Viruvirupu.com
 காத்திருந்த சிஷ்யைகள், என்மீது சாய முடியவில்லை என வருந்த வேண்டாம். வெளிப்படையாக சாய முடியாத வகையில் நிலைமை உள்ளது.
நித்தியானந்தாவின் பவுர்ணமி லீலைகள், அவரது பக்தகோடிகளிடம் மிகப் பிரபலம். பவுர்ணமி இரவுகளில், ‘சத்சங்கம்’ என்ற பெயரில் விடியவிடிய அருள் வழங்கப்படும். நேற்று பவுர்ணமி என்பதால், பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் உள்ள நித்தி ஆச்ரமத்தில் அருள் சப்ளை நடைபெற்றது.
சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் நம்ம மதுரை ஆதீனத்தின் இளையவர். இதனால், மீடியாவின் கவனம் முழுவதும் நித்தியின் லீலைகளை சுற்றிச் சுற்றி வருவது, இவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அது பற்றி தமது சத்சங்கத்தில் கூறினார் சுவாமிகள்.

கட்டட பணியா... கதறி ஓடும் ஒப்பந்ததாரர்கள் admk கட்டிங்' தொகை உயர்வு

சென்னை: ஒன்பது முறைக்கும் மேலாக, ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) விடுத்தும், வேலை செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வராததால், பல்வேறு பள்ளி கட்டடப் பணிகள், கிடப்பில் உள்ளன 
கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், பள்ளி, கல்லூரியில் புதிய கட்டடங்கள் அமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு, 7.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கிடப்பில் கட்டட பணி: இதற்காக, பத்து இடங்களில் வேலைகள் துவக்க, பொதுப்பணித் துறையால் ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டது. முதல் இரண்டு முறை விடுத்த ஒப்பந்தப் புள்ளிக்கு, ஒப்பந்ததாரர் எவரும் முன்வராததால், அடுத்த முறையும் முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு சில வேலைகளுக்கு, 10 முறைக்கும் அதிகமாக, ஒப்பந்தப் புள்ளி விடுத்தும், இன்று வரை, பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. இதனால், பள்ளி கட்டடப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியும், வேலை துவக்கப்படாமல் உள்ளது; மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏழை எம்.எல்.ஏ.,க்களுக்குரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், முதல்வர் அகிலேஷ் யாதவ்

லக்னோ:""உ.பி., மாநிலத்தில், கார் வாங்க முடியாத ஏழை எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் வாங்கிக் கொள்ளலாம்,'' என, முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
பிரசாரம்: உ.பி.,யில், கடந்த மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசாரத்தின் போது வாக்காளர்களிடையே ஓட்டு சேகரித்த அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆட்சியில், சிலைகளை அமைப்பதற்காக மக்கள் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது என, கூறி வந்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், மாயாவதி அரசு மேற்கொண்ட ஆடம்பரங்களுக்கெல்லாம் இடம் தரப்பட மாட்டாது; வளர்ச்சிப் பணிகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும் என்றும் கூறியிருந்தார்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

ஆபாச Internet கேரளாவுக்கே முதலிடம்!

டெல்லி: இணையதளத்தில் ஆபாச புகைப்படங்கள், கட்டுரைகளை அப்லோட் செய்வதில் கேரளாதான் முதலிடத்தில் இருக்கிறதாம். 
இந்த மாநிலத்திலிருந்துதான் அதிக அளவில் இணையதளங்களில் ஆபாசப் படங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்கின்றனராம்.
தேதிய குற்றப்பதிவேடுகள் துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆபாச செய்திகள், கட்டுரைகளை இணையளத்தில் அப்லோட் செய்தது தொடர்பாக மொத்தம் 496 வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகின. இதில் கேரளாவிலிருந்து மட்டும் 136 வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வழக்குகளில் இது 27 சதவீதமாகும்.