இந்த அழகிகள் அத்தனை பேருமே குத்துப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். ஓங்குதாங்காக இருக்கும் இவர்கள் இல்லாமல் ஒரு படமும் கிடையாது என்றாகி விட்டது இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.
இன்றைய தேதியில் நாகு என்ற நாகமல்லேஸ்வரி, சுஜாதா மற்றும் கல்யாணி ஆகியோர்தான் சூப்பர் ஹீட் ஆட்டக்காரிகளாக உள்ளனர். அதிலும் ராஜமுந்திரியிலிருந்து ரகளையாக வந்திருக்கும் நாகுவுக்குத்தான் செம கிராக்கியாம். முன்பு சில்க் வேண்டு்ம் என்று வேண்டி விரும்பி கேட்டதைப் போல இப்போது நாகு டான்ஸ் போடுங்கோ என்று விரும்பி வாங்கி வெளுத்துக் கட்டுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.
இந்த மூன்று பேரிலும் சீனியர் சுஜாதாதான். ரொம்ப காலமாக டான்ஸ் ஆடி வருகிறார். தளபதி படத்தில் ராக்கம்மா கையைத் தட்டு பாடலுக்கும், காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கும் ரஜினியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டவராம் இந்த சுஜாதா. அதேபோல அக்னிநட்சத்திரம் படத்திலும் பிரபுதேவாவுடன் கூட கரம் கோர்ட்டு கலக்கல் செய்துள்ளார். இவரும், பிரபுதேவாவின் முதல் மனைவியான ரமலத்தும் நெருங்கிய தோழிகளாம். சேர்ந்து பல படங்களில் டான்ஸ் போட்டுள்ளனர்.
பிறகு பைட் மாஸ்டர் விக்ரம் தர்மாவின் தம்பி பாபுவை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு பாபுவும், சுஜாதாவும் சேர்ந்து டான்ஸ் மாஸ்டர்களாக பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.
பிறகு இருவருமே சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டனர். குடும்பம், குழந்தை என்று அக்கடா என இருந்தவரை தினேஷ் மாஸ்டர்தான் ஈசன் படத்துக்காக ஒரு பாட்டுக்கு கூட்டி வந்து ஆட வைத்தார். அந்தப் பாட்டு செம ஹிட் ஆனது. இதையடுத்து அதே மாதிரி எங்களுக்கும் ஆடுங்க என்று பலரும் அன்புக் கோரிக்கை வைக்கின்றனராம். ஆனால் தோளுக்கு மேல்வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது இப்படியெல்லாம் ஆடுவது சரியாக இருக்காது என்று கூறி நாசூக்காக மறுத்து வருகிறாராம் சுஜாதா.
நாகுவைப் பற்றி தனி ஸ்டோரியே போடலாம். அந்த அளவுக்கு பாப்புலரான பிகர் இப்போதைக்கு இவர்தான். இவரது ஆட்டம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நாடோடிகள் படத்திற்கு போக வேண்டும். அதில்இடம் பெற்ற யக்கா யக்கா பாடல்தான் நாகுவுக்கு ஐடி கார்டு. அந்தப் பாட்டில் அவர் போட்ட சதிராட்டம் அத்தனை பேரின் தூக்கத்தையும் தூக்கிக் கொண்டு போனது. பிறகு மைனாவில் வந்த ஜிங்கு சிக்கா பாட்டு பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே இந்தப் பொண்ணு என்று அத்தனை பேரையும் ஜொள்ளு விட வைத்தது.
இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கொத்திப் பறவையாக மாறி, தனது கவர்ச்சி பிளஸ் அட்டகாச ஆட்டத்தால் வியாபித்து நிற்கிறார் நாகு. ஆள்தான் ஆஜானுபாகுவாக, அலேக்காக இருக்கிறார். ஆனால் இன்னும் ஒரு வாட்டி கூட கல்யாணம் ஆகவில்லையாம். ஸ்டைலாக சிரித்தபடி சொல்கிறார் இந்த ராஜமுந்திரி ரகளை அழகி.
சின்ன வயசுலேயே ஆட வந்து விட்டதால், எப்படிப்பட்ட ஆட்டமாக இருந்தாலும் பின்னிப் பெடலெடுத்து விடுகிறாராம். என்ன படம், யார் டைரக்டர், நடிகர் யார் என்றெல்லாம் இவர் பார்ப்பதே இல்லையாம். ஆட வர்ரீங்களான்னு கூப்பிட்டாப் போதுமாம், சம்பளத்தை மட்டும் பேசி விட்டு ஆடி விட்டு போய் விடுவாராம்.
லேட்டஸ்டாக இவர் செய்த செல்லச் சில்மிஷம் மனம் கொத்திப் பறவைகள் படத்துக்காக.
இதேபோல இன்னொரு மூர்க்கமான அழகு அழகி கல்யாணி. தடையறத்தாக்க படத்தில் இடம் பெற்ற பூந்தமல்லிதான், புஷ்பவள்ளிதான் பாடலுக்கு டான்ஸ் போட்ட கவர்ச்சி பூகம்பம்தான் கல்யாணி.
இரவு பகல் பாராமல் குத்தாட்டம் போட்டு வருகிறாராம் கல்யாணி. ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்டேட் என்று ரவுண்டு கட்டி ஆடிவரும் இவர் தொழில் என்று வந்து விட்டால் வேறு எதையும் பார்க்க மாட்டாராம். ஒருமுறை பலமாக ஆடும்போது சறுக்கி விழுந்து எலும்பு மூட்டில் ஜவ்வு கிழிந்து போய் விட்டதாம். இருந்தாலும் விடாமல் சிகிச்சை பெற்று விட்டு மறுபடியும் ஆடிக் கொடுத்து விட்டுத்தான் ஓய்ந்தாராம்.
என்ன செய்வது சார், குடும்பத்தை காப்பாத்தியாகனுமே என்று சிரிக்கிறார் கேட்டால்.
ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு பீலிங்ஸ்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக