புதன், 4 ஜூலை, 2012

குஷ்பு, தயாநிதி மாறன்... தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது!

 Kushboo Arrested சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். 
 திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பஸ்கள், வேன்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது
இதேபோல தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியில் கே.என்.நேரு கைது
திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக