வெள்ளி, 6 ஜூலை, 2012

Kingfisher மல்லையாவின் 7500 கோடி கடனைத் தீர்க்க முடியாது


மும்பை: கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு தந்துள்ள ரூ. 7,000 கோடியை வசூலிக்க விஜய் மல்லையாவின் மும்பை அலுவலகத்தையும் கோவாவில் உள்ள வில்லாவையும் ஏலம் விடப் போவதாக 17 வங்கிகள் கூட்டாக எச்சரித்துள்ளன.
இந்த ஒரிசாவை சேர்ந்த சுத்த பிராமணியின் குலத்தொழில் சாராயம் விஸ்கி பீர் உற்பத்தி தற்போது கொடிகட்டி பறப்பது விமான சேவை தொழில் ஆனால் இவர் அதிகமாக பணம் சம்பாதித்தது அரச வங்கிகளை பின்கதவால் சுரண்டியதாகும் 
இந்த நிறுவனத்துக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என மொத்தம் 17 வங்கிகள் இதுவரை பல்லாயிரம் கோடிகளைக் கடனாகத் தந்துள்ளன. வட்டி, அதன் குட்டி எல்லாம் சேர்த்து இப்போது அந்தத் தொகை ரூ. 7,500 கோடியை எட்டிவிட்டது.
இதையடுத்து மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள இரண்டு மாடி கிங்பிஷர் கார்ப்பரேட் அலுவலகம், கோவா அகுடா போர்ட் பகுதியில் உள்ள விஜய் மல்லையாவின் பிரமாண்டமான வில்லா ஆகியவற்றை ஏலம் விட இந்த வங்கிகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த இரு சொத்துக்களின் விலையையும் நிர்ணயிக்குமாறு எச்டிஎப்சி வங்கிக்கு ஸ்டேட் வங்கி தலைமையகத்தில் நடந்த 17 வங்கிகளின் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதில் மும்பை கட்டடத்தை விற்றால் ரூ. 90 கோடியும், கோவா வில்லாவை ஏலம் விட்டால் ரூ. 30 கோடியும் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் தனது நிறுவனத்தின் நிதி நிலையை சீராக்க விஜய் மல்லையா எந்த உருப்படியான திட்டத்தையும் முன் வைக்காமல் காலதாமதம் செய்து வருவதால், முதல் கட்டமாக இந்த இரு சொத்துக்களையும் ஏலம் விட வங்கிகள் முடிவுக்கு வந்துவிட்டன.
ஆனால், இந்த இரு கட்டடங்களும் காலியாக இருப்பதால் நாங்கள் தான் இவற்றை ஏலம் விடுமாறு வங்கிகளிடம் கூறினோம் என்று பத்திரிக்கைகளுக்கு கிங்பிஷர் செய்தித் தொடர்பாளர் இ-மெயில் அனுப்பியுள்ளார்.
ஆனால், அதைத் தொடர்ந்து வந்த எஸ்எம்எஸ்சில், இந்த இரு சொத்துக்களையும் ஏலம் விட வேண்டாம் என வங்கிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் கிங்பிஷர் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சொத்துக்களைக் காக்க மல்லையா மல்லுகட்டுவது தெளிவாகிறது.
கிங்பிஷர் நிறுவனத்துக்கு தரப்பட்ட கடனுக்கு விஜய் மல்லையா தனிப்பட்ட முறையிலும், அவரது மதுபானத் தயாரிப்பு நிறுவனமான யுனைட்டர் பிரீவரீஸ் நிறுவனமும் உத்தரவாதம் தந்துள்ளன என்பதும், ரூ. 90 கோடி மதிப்புள்ள இரு ஹெலிகாப்டர்களும் ஜாமீனாகத் தரப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த உத்தரவாதங்கள், ஜாமீன்களை எல்லாம் சேர்த்தாலும் கூட கிங்பிஷருக்கு உள்ள ரூ. 7,500 கடனைத் தீர்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் முதல் வட்டி கட்டுவதைக் கூட கிங்பிஷர் நிறுத்திவிட்டதால் தான் இப்போது முதல் கட்டமாக இரு அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட வங்கிகள் முடிவுக்கு வந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக