சனி, 7 ஜூலை, 2012

Mumbai தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு தோட்டாக்கள் வழங்கிய ஐ.எஸ்.ஐ., அதிகாரி

புதுடில்லி: "" மும்பையில் நடந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டவை,'' என, பயங்கரவாதி அபு ஜுண்டாலிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அபு ஜுண்டாலை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். ஜுண்டாலை, டில்லி சிறப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது, ஜுண்டால் கூறியுள்ளதாவது: மும்பையில் தாக்குதலுக்கு முன், பாகிஸ்தான் உளவு அமைப்பின் உயரதிகாரியான சமீர் அலி, பாக்., ஆக்கிரமிப்புக்கு காஷ்மீருக்கு வந்தார். மும்பையில் தாக்குதல் நடத்த செல்லவிருந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கியிருந்தனர். அவர்களிடம், தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஏ.கே.,-47 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களை அவர் அளித்தார்.


பயிற்சி: இந்த குண்டுகளைத் தான், மும்பையில் தாக்குதல் நடத்துவதற்காக, அஜ்மல் கசாப் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். கடல் வழியாக மும்பைக்கு செல்வதற்கான பயிற்சியையும், அந்த பயங்கரவாதிகளுக்கு சமீர் அளித்தார். இவ்வாறு ஜுண்டால் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ராவல்பிண்டியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லஷ்கர் அமைப்பின் கமாண்டர் ஷாகிர் உர் ரகுமான் லக்வியையும், சிறைக்குச் சென்று, ஜுண்டால் சந்தித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.,யின் மற்றொரு அதிகாரி ஹம்சா, ஜுண்டாலுக்கு தேவையான பணம் மற்றும் தங்குமிட வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

என்.ஐ.ஏ., தகவல்: இதற்கிடையே, "அபு ஜுண்டாலை, வரும் 20ம் தேதி வரை, டில்லி போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால், இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஜுண்டாலை எங்களின் காவலில் எடுத்து, விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள், புலனாய்வு அமைப்பின் சிறப்பு கோர்ட்டில் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக