சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான
கல்விக் கட்டணம், அதிகபட்சம் 2.8 லட்ச ரூபாயாகவும்; பி.டி.எஸ்.,
படிப்பிற்கு, ஒரு லட்ச ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. நடப்பு
கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக்
கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக்
கட்டணம் நேற்று அறிவிக்கப்பட்டது.
கட்டணம் உயர்த்த கோரிக்கை: இதுகுறித்து, தனியார் தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலைவர் பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும், 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கோரின.
இது தொடர்பாக, அக்கல்லூரிகளின் வரவு, செலவு விவரங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணம், 2.3 முதல், 2.8 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணம், 85 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் கட்டணம்? தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, 2012-13ம் கல்வியாண்டிற்கு மட்டும், இக்கட்டணம் பொருந்தும். தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு, நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக, இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது புகார்கள் வந்துள்ளன. விசாரணை நடைபெறுவதால், அக்கல்லூரிகளின் பெயரை தற்போது வெளியிட முடியாது. இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக