புதன், 4 ஜூலை, 2012

எக்குத்தப்பாக குவிந்து விட்ட திமுகவினர்...எங்கு போய் அடைப்பது என தெரியாமல் விழிக்கும் அரசு!


 Massive Arrest Dmk Cadres Put Police In Great Fix
சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர், தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்களை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைகள் உள்ளன. இதில் 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடியும். தற்போது சிறைகளில் 13,970 கைதிகள் உள்ளனர்.
இன்று நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு சில ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று அரசும், காவல்துறையும் எதிர்பார்த்திருந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளதாக தெரிகிறது.
அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு ஆங்காங்கு கல்யாண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையி்ல அடைக்க வேண்டும். ஆனால் இத்தனை பேரையும் எப்படி சிறைகளில் அடைப்பது என்று தெரியாமல் காவல்துறையினர் விழித்துக் கொண்டுள்ளனராம்.
சென்னையில் மட்டும் 50,000 பேர் வரை கைதாகியுள்ளனர். ஆனால் புழல் சிறையில் இத்தனை பேரையும் அடைக்க முடியாது. சரி வேலூருக்கும் பிற ஊர்களுக்கும் கொண்டு போவதாக இருந்தாலும், அந்தப் பகுதிகளிலும் பல ஆயிரம் பேர் கைதாகியுள்ளனர். எனவே திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது, இட வசதி போதாதே என்று காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.
ஒரு 50 ஆயிரம் பேர் வரை கூடலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக லட்சத்திற்கும் மேற்பட்டோர் திமுக போராட்டத்திற்கு திரண்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக