சனி, 7 ஜூலை, 2012

1 கோடி பரிசு கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால்

கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்ல வைகள் அல்ல. இதனால் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.
கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்லவைகள் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.

தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் அதன் கள் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் நடந்தது.கீழ்ப்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர்கள் கோபிநாத், தங்கராசு, கனகராசு, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமசாமி மற்றும் பி.கே.ராமசாமி, இல.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருளாக நெருக்கடிக்கான தீர்வாக எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு எத்தனால் தயாரிக்கவும், அதை விற்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. எத்தனாலை 85 சதவீதம் அளவுக்கு பெட்ரோலில் கலந்து வாகனங்களை ஓட்டலாம்.


இதனால் சுற்றுப் புறச்சூழல் மாசு படுவதும் வெகுவாக குறையும் என்றும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப் பட்டது. கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்ல வைகள் அல்ல. இதனால் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.
கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்லவைகள் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக