செவ்வாய், 3 ஜூலை, 2012

ஆபாச Internet கேரளாவுக்கே முதலிடம்!

டெல்லி: இணையதளத்தில் ஆபாச புகைப்படங்கள், கட்டுரைகளை அப்லோட் செய்வதில் கேரளாதான் முதலிடத்தில் இருக்கிறதாம். 
இந்த மாநிலத்திலிருந்துதான் அதிக அளவில் இணையதளங்களில் ஆபாசப் படங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்கின்றனராம்.
தேதிய குற்றப்பதிவேடுகள் துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆபாச செய்திகள், கட்டுரைகளை இணையளத்தில் அப்லோட் செய்தது தொடர்பாக மொத்தம் 496 வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகின. இதில் கேரளாவிலிருந்து மட்டும் 136 வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வழக்குகளில் இது 27 சதவீதமாகும்.

மேலும் கடந்த ஆண்டு பதிவான 245 சைபர் கிரைம் வழக்குகளில் 55 சதவீத வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
ஒரு காலத்தில் ஆபாச திரைப்படங்களை அதிக அளவில் தயாரிப்பதில் முன்னோடியாகவும், முன்னணியிலும் இருந்து வந்தது கேரள மாநிலம். அந்த மாநிலத்தின் இதர சூப்பர் ஸ்டார்களை விட ஆபாசப் படங்களில் நடித்த ஷகீலாதான் முன்னணியில் இருந்தால், வசூல் ராணியாகவும் திகழ்ந்தார் என்பது நினைவிருக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக