திமுக போராட்டம்: 'கேமரா பயத்தில்' நிதானமாக செயல்பட்ட போலீஸார்!
சென்னை:
திமுகவினர் கைது சம்பந்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் மிகவும்
எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்ததால்
இன்றைய கைது நடவடிக்கையின்போது போலீஸார் படு கவனமாக இருந்தனர்.
திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கொளத்தூரிலும், எம்.பி. கனிமொழி சைதாப்பேட்டையிலும் போராட்டம் நடத்தி கைதானார்கள். சென்னையில் 22 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் திமுகவினர் கைதின் போது போலீசார் அடிதடி அல்லது அடக்குமுறை முயற்சிகளை மேற்கொண்டால், அவர்களை எதிர்த்து அறவழியில் போராடுவது என சில இடங்களில் திமுக தொண்டர்கள் முடிவு செய்திருந்தனர். மேலும் போலீசார் தடியடி நடத்தினால் அதை லைவாக படம்பிடிக்க வேண்டும் என சன் டிவி, கலைஞர் டிவி கேமராமேன்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாம்.
இந்த நிலையில், நேற்று தமிழக டிஜிபி ராமானுஜம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போலீசாரால் கலவரம் ஏற்பட்டது என்றும், போலீசாரால் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் யாரும் கூறும் அளவுக்கு நடக்கக் கூடாது. திமுக போராட்டத்தை பல டிவி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக திமுக சார்பு டிவிக்கள் செய்தியை மிகைப்படுத்திவிடும். எனவே காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கோபம் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. திமுகவினரை கைது மட்டுமே செய்ய வேண்டும். சம்பவ இடத்தில் பிரச்சனை எழும்பட்சத்தில் உடனே காவல் துறை தலைமையை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெறலாம் என கூறப்பட்டிருந்ததாம்.
இதனால் இன்றைய போராட்டத்தின்போது போலீஸார் படு கவனமாக செயல்பட்டனர். தொணட்ர்களை கூட பஸ்சில் ஏற்றும்போது போர்ஸ் செய்யாமல் மெதுவாக ஏற்றினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக