வெள்ளி, 6 ஜூலை, 2012

திருவண்ணாமலை சமூக சேவகர் கொலை வழக்கு .44 police மீது புகார்

44 காவல்துறை அதிகாரிகள் மீது புகார்
திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் ராஜ்மோகன் சந்திரா கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதில் நிறைய மர்மங்கள் உள்ளன என பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று களமிறங்கியது.

மக்கள் கண்காணிப்பகத்தின் தமிழ்நாடு இயக்குநர் மனித உரிமை ஆணையத்தின் வழக்கறிஞர் ராசன், மண்டல மக்கள் கண்காணிப்பக ஆலோசகர் வழக்கறிஞர் முருகேசன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் காப்பாளர் அசீர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், வழக்கறிஞர் விநாயகம் உள்ளடக்கிய குழுவில் இருந்தனர். ராஜ்மோகன் சந்திராவின் மனைவி, அவரது நண்பர்கள், அவருக்கு உதவிய வழக்கறிஞர்கள் என பல தரப்பிலும் தகவல்களை சேகரித்து அறிக்கை தயார் செய்துள்ளனர்.

அதுப்பற்றி இன்றைய செய்தியாளர்களை அழைத்து பேசிய வழக்கறிஞர் ராசன், ''உண்மையான குற்றவா ளிகள் கண்டறியப்பட வேண்டும். பொது நல வழக்குகள் அதிகளவில் காவல்துறையினர் மீது பதிவு செய்தவர் என்பதால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறையில் உயர் பதவியில் உள்ள எஸ்.பி லட்சுமி, டி.எஸ்.பி வைத்திலிங்கம், வழக்கறிஞர்கள் குமரன், பார்த்திபன், கவுன்சிலர் வெங்கடேசன் ஆகியோர் தான் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர் என்பது தெளிவாக அறிய முடிகிறது.

படுகொலை செய்யப்பட்ட ராஜ்மோகன் மனைவி மினி எ எலியம்மாள்ஜோசப் தனிமையில் உள்ளார். அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக இவ்வழக்கை எடுத்து விசாரணை செய்ய வேண்டும், காவல்துறை அதிகாரிகள் மீது அதிகளவில் புகார் உள்ளதால் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என அவ்வறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்பின் நம்மிடம், 2010 மற்றும் 2011ல் இவர் தனக்கு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மனு செய்தபோது, தனக்கு எதனால் துப்பாக்கி தேவைப்படுகிறது என்பதை 6 பக்க கடிதமாக தந்துள்ளார். அதில் காவல்துறையில் தற்போதும் முக்கிய பதவியில் உள்ள பல அதிகாரிகளால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது.

அவர்கள் மீது நான் வழக்கு நடத்தி வருகிறேன் என மனு தந்துள்ளார். அம்மனுவில் 44 பேரால் என் உயிருக்கு ஆபத்து என பட்டியல் தந்துள்ளார்.

துப்பாக்கி லைசென்ஸ் தர முடியாது என்றது காவல்துறை. அவர் தந்த மனுவை கொண்டு அதில் உள்ள அதிகாரிகளை உள்துறை விசாரணை செய்துயிருந்தால் இன்று இந்த கொடூர கொலை நடந்திருக்காது. ஆனால் அதனை அரசு செய்யவில்லை.

அதோடு, நீதித்துறையில் உள்ள மாவட்ட நீதிபதிகள் நடத்தையை கேள்வி கேட்டவர். அந்தளவுக்கு தீவிரமான மனித உரிமை ஆர்வலராக இருந்தவரை திருவண்ணாமலை இழந்துள்ளது. இதனை கண்டித்து வரும் ஜீலை 10ந்தேதி மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டம் நடத்தவுள்ளோம் என்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக