வியாழன், 5 ஜூலை, 2012

பாலிவுட் நடிகை லைலான் கான் குடும்பத்துடன் சுட்டுக் கொலை

மும்பை: மர்மமான முறையில் காணாமல் போன பாலிவுட் நடிகை லைலா கான் அவரது குடும்பத்தினருடன் மும்பையைச் சேர்ந்த கும்பலால் கடந்த ஆண்டே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.
2011-ம் ஆண்டு மும்பையிலிருந்து காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்ற லைலாகான் மர்மமான முறையில் மாயமானார். அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜம்முவில் பர்வேஷ் டாக் என்பவரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
லைலா கானின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்காக கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி மும்பையைச் சேர்ந்த கும்பல் ஒன்று லைலாகானையும் அவரது குடும்பத்தினரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக பர்வேஷ் டாக் கூறியுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக