சனி, 3 மார்ச், 2012

நடராஜனுக்கு போலீஸ் ஸ்டேஷனோடு இடிந்து நெருங்கிய இமேஜ்!

Viruvirupu
நடராஜன் தொடர்பாக வெளியே காண்பிக்கப்பட்ட இமேஜ் உடைந்து நொருங்குவதை அவரது ஆதரவாளர்கள் காணத் தொடங்கியுள்ளார்கள். நடராஜனை கைது செய்தால், அரசியல் ரீதியாக கொந்தளிப்பு ஏற்படும் என்று இருந்த எதிர்பார்ப்பு, புஸ் என்று போயிருக்கிறது.
இந்தக் கைதுடன் தொடர்பாக அரசியல் ரீதியாக ஏதாவது ஆக்ஷன் காட்டக்கூடிய சில அமைப்புகள் இருந்தன. அந்த அமைப்புகளை ‘சைலன்ட்’ ஆக்கும் வகையில் காவல்துறை செய்த சில ஏற்பாடுகள் வெற்றி கண்டிருக்கின்றன.
இதில் தொடர்புடையதாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் பிரச்னையாக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டபோது இருந்த வேகம் எல்லாம் உள்ளேயிருந்த நாட்களில் நடராஜனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டது.

பாரதிராஜா மகன் மனோஜ் வில்லன் ஆகிறார்!

Manoj Bharathirajas son becomes a villain
காதல் தீவு படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் வில்லனாக நடிக்கிறார். அரும்பு மீசை குறும்பு பார்வை’ படத்தில் டைரக்டு செய்தவர், வெற்றிவீரன். இவர் அடுத்து, காதல் தீவு’ என்ற படத்தின் கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். அழகி’ படத்தில் சிறு வயது பார்த்திபனாக அறிமுகமான ராம்சரண், இந்த படத்தின் கதை நாயகன் ஆகிறார். ஆஸ்கார் விருதுகளை அள்ளிய “ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் சிறு வயது நாயகியாக நடித்த தானவிலோகர், இந்த படத்தின் கதை நாயகி ஆகிறார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி, இந்த படத்தின் மூலம் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

மக்களுக்கு எதிரானவராக காந்தி ஒருவர் மட்டுமே இருந்தார்.

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

ஏ.சண்முகானந்தம்
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

ம்பங்களை தலையில் தூக்கி கொண்டாடுவதிலும், புரட்சியாளர்களை கண்டு கொள்ளாமல் விடுவதுமான நமது போக்கு வரலாறு நெடுகிலும் நடந்து வந்துள்ளது. காந்தி, பாரதியார், நேரு, இராசாசி சமீபத்திய அரசியல் கோமாளி அப்துல் கலாம் என முதலாளித்துவ பிம்பங்களை வரலாற்று நாயகர்களாகவும், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், வ.உ.சி., பகத்சிங், பாரதிதாசன் போன்ற மக்கள் தலைவர்களை மதிக்க தெரியாத அல்லது அவர்களது கொள்கைகளை பின்பற்றாமல் இருப்பது என கேடுகெட்ட சமூகமாகவே தமிழ் சமூகம் பல காலமாக இருந்து வந்துள்ளது.
‘பாரதிய ஜனதா பார்ட்டி’, ‘வே.மதிமாறன் பதில்கள’, ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’- போன்ற நூல்கள் வழியே தமிழ் வாசகர்கள் அறிந்துள்ள தோழர்.மதிமாறன் எழுத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல் ‘காந்தி நண்பரா? துரோகியா?’.

வெள்ளி, 2 மார்ச், 2012

அரவான், கொண்டான் கொடுத்தான், யார் என மூன்று படங்கள் இந்த வாரம்


Aravan Movie

இந்த வாரம் கோடம்பாக்கத்தில் அரவான், கொண்டான் கொடுத்தான் மற்றும் யார் என மூன்று படங்கள் வெளியாகின்றன.
இவற்றில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாகத் திகழ்வது வசந்தபாலனின் அரவான். வரலாற்றுப் படம்.
வீ சேகரின் உதவி இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் கொண்டான் கொடுத்தான். வீ சேகர் பாணியிலான கிராமத்துக் குடும்பக் கதை.
மூன்றாவதாக வரும் 'யார்' ஒரு டப்பிங் த்ரில்லர் படம்.
அரவானுக்கு எந்த வகையிலும் போட்டியைத் தராத படங்கள் மற்ற இரண்டும். ஆனால் அரவான் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினை, பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வுதான். மற்ற வகுப்புகளுக்கும் கூட இன்னும் சில தினங்களில் பரீட்சே தொடங்கிவிடும். எனவே இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டுள்ளது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சசிகலா, கோர்ட்டுக்கு கிளி கொண்டுவர கோரிக்கை விடவில்லை!

Viruvirupu
“சசிகலா, தம்மைச் சுற்றி எத்தனையோ விலை உயர்ந்த சொத்துக்கள் இருந்தும், அவற்றின் மதிப்பு எவ்வளவு என்றுகூட தெரியாத ‘துறவு நிலை வாழ்க்கை’ வாழ்ந்திருக்கிறாரே!” இவ்வாறு ஆச்சரியப்படும் வகையில் நேற்று சசிகலாவின் பதில்கள் பெங்களூரு கோர்ட்டில் அமைந்திருந்தன.
வழக்கில் சசிகலா தொடர்பான ஆரம்பக் கட்ட கேள்விகள் முடிந்து, இப்போது அவர்கள் தரப்பிலுள்ள சொத்துக்கள் தொடர்பான கேள்விகள் தொடங்கி விட்டன. இதில் நிச்சயம் ஆயிரக் கணக்கான கேள்விகள் இருக்கும். காரணம், கோர்ட் வைத்திருக்கும் சொத்துப் பட்டியலின் அளவு, டெலிபோன் டைரக்டரியைவிட சற்றுத்தான் சிறியது.
“தெரியாது” என்ற பதில்தான் வரப்போகின்றது என்று தெரிந்தும், பட்டியலில் உள்ள ஒவ்வொரு சொத்தின் பெயரைச் சொல்லியும், “தெரியுமா? தெரியுமா?” என்று கேட்க வேண்டியது சட்ட ரீதியாக அவசியமாகிறது.
“போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?”
“தெரியாது”

சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் பொதுவானது உறவினரை கைது செய்ய சொன்ன மம்தா

கொல்கத்தா, மார்ச் 1- மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தாபானர்ஜியின் உறவினர் ஆகாஷ்பானர்ஜி. இவர் கொல்கத்தாவில் உள்ள கிட்டர்போர் பகுதியில் இரண்டு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் போக்குவரத்து விதியை மீறியதால் அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் காரை நிறுத்துமாறு கூறினார்.
இதனால் கோபமடைந்த ஆகாஷ்பானர்ஜி காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் நான் யார் தெரியுமா? மம்தாபானர்ஜியின் நெருங்கிய உறவினர் என்று கூறியபடி காவலரை கடுமையாகத் தாக்கினார்.
இதனால் காவலர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஆகாஷ் பானர்ஜி தன்னை தாக்கியது பற்றி உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அடுத்த நிமிடமே உயர் அதிகாரிகள் முதல்வர் மம்தாபானர்ஜியிடம், ஆகாஷ் பானர்ஜி காவல்காரரை தாக்கியது பற்றி கூறினார்.
இதை கேட்டதும் சற்று அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, சட்டம்- ஒழுங்கு அனைவருக்கும் பொதுவானது. ஆகாஷ் பானர்ஜியை உடனே கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று ஆகாஷ்பானர்ஜி உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

நதிகள் இணைப்புத் திட்டத்தை ஏற்க மாட்டோம்: கேரளா

Oommen Chand

திருவனந்தபுரம்: நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார். நதிகள் இணைப்பை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கேரளா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கேரள நதிகளை இணைக்க முடியாது என்று முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் உம்மன் சாண்டி கூறியதாவது:

டேங்கர் லாரி ஸ்டிரைக்: 10 ஆயிரம் டன் காஸ் நிரப்பும் பணி முடக்கம்

நாமக்கல்: காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம், தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிப்பதால், நாள்தோறும் ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், பத்தாயிரம் டன் காஸ், டேங்கர் லாரிகளில் நிரப்பும் பணி முடங்கியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமாக சென்னை, நரிமணம், மங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அந்த சுத்திகரிப்பு நிலையங்களில், சமையல் காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சமையல் காஸ், டேங்கர் லாரிகளில் நிரப்பி, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் உள்ள, 45 பாட்டலிங் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஜெர்மனியரிடமிருந்து 12 கோடி கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு !

Kudankulam
நாகர்கோவில்: கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஜெர்மனிக்காரர் ஹெர்மனிடமிருந்து மட்டும் ரூ. 12 கோடி அளவுக்கு பணம் வந்துள்ளதாம். அதிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் 4 கோடி பணத்தை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளனர். இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கடந்த 7 மாதமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் குற்றம் சாட்டினர்.

திருநங்கைகளுக்காக பாலியல் சுதந்திர கட்சி தொடங்குகிறேன்.. இப்படிக்கு ரோஸ்!

Photo: K. Ananthan

SENSITISATION: Director of ‘Sahodari’ Kalki speaking at a workshop for mediapersons on LGBT (lesbians, gays, bisexuals and transgenders) community in the city on Saturday. —
கும்பகோணம்: திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக பிரபல திருநங்கை ரோஸ் என்கிற வெங்கடேசன் கூறியுள்ளார்.
இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். சமீபத்தில் திருநங்கைகளுக்கு சமூகம் எந்தவிதமான அங்கீகாரத்தையும் கொடுக்க மறுக்கிறது, கெளரவமான வேலை கிடைப்பதில்லை. எனவே அவர்களை பாலியல் தொழிலில் சட்டப்பூர்வமாக ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ரோஸ்.

வியாழன், 1 மார்ச், 2012

இந்திரா காந்தி அரசு கருணாநிதியைத்தான் கைது செய்யும் என்று திமுக தலைவர்கள் எதிர்



திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டு வாசலைக் காவல்துறை வாகனங்கள் ஆக்கிரமித்தன.  வாகனங்கள் முழுக்க காவலர்கள். எமர்ஜென்ஸி அமலில் இருந்ததால் (ஜனவரி 31, 1976) ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் வீட்டில் இருந்தவர்களுக்குப் புரிந்தது.  திமுதிமுவென வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் கருணாநிதியின் மகன் ஸ்டாலினைக் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர்.
‘அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்’
பதில் சொன்னவர் கருணாநிதி. நேற்றுவரை தமிழ்நாட்டுக்கே முதலமைச்சராக இருந்தவர். ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால் அவர் சொன்ன பதிலை அதிகாரிகள் ஏற்கக் தயாராக இல்லை. சர்ச் வாரண்ட் இருக்கிறது.. வீட்டுக்குள் தேடிப் பார்த்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்தனர். சில நிமிடங்களுக்குத் தேடுதல் நீடித்தது. பலனளிக்காத தேடல்.
‘ஸ்டாலின் வந்ததும் தகவல் கொடுக்கிறேன். வந்து கைதுசெய்து கொள்ளுங்கள்’
கருணாநிதி உத்தரவாதம் கொடுத்தார்.

ஜெயலலிதாவுக்கு "எதுவுமே" தெரியாமல் அவர் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்த ?????


Sasikala
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ தெரியாது, ஆனால், இந்த விஷயத்தில் போயஸ் கார்டன் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பெரும் யூகங்களைக் கிளப்பி வருகின்றன.

ஜெயலலிதாவுக்கு "எதுவுமே" தெரியாமல் அவர் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததில் சசிகலா அண்ட் கோவுக்குத்தான் முழுப் பங்கு இருக்கிறது என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்பது தான் போயஸ் கார்டனின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.

பெங்களூர் நீதிமன்றத்தில் ஆற அமர இழுத்தடித்து, சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் பி.பியை எகிற வைத்து சசிகலா அளித்து வரும் "பதில்கள்" போய்க்கொண்டிருக்கும் பாதை மேற்சொன்ன திசையை நோக்கித்தான்...

ராவணன் தொடங்கி எம்.நடராஜன் வரை சசி அண்ட் கோ பிரதிநிதிகள் சிறையில்! சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில்!

மோகன்லாலும் முல்லைப் பெரியாறும் தமிழ் சினிமா வீரர்களும்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள சினிமாகக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினார்கள். தமிழ் சினிமாக்காரர்கள் அமைதியாக இருந்துவிட்டார்களே? இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டிய ஆர்வத்தைக் கூட இதில் காட்டவில்லையே?
-கனல், திருப்பூர்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள சினிமாகக்காரர்கள் மலையாள இன உணர்வோடு நடந்து கொண்டார்கள் என்பதைவிடவும், தமிழ் சினிமா மீது உள்ள வெறுப்புணர்வை காட்டுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள், என்பது சரியாக இருக்கும்.
ஏனென்றால், கேரளாவில் தமிழ் சினிமாதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஷூ' அணிந்தபடி 'தூங்கினரா' கொள்ளையர்கள்?- எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்

Chennai Encounter
சென்னை: வேளச்சேரியில் ஐந்து கொள்ளையர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் அடங்கவில்லை. பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொள்ளையர்களில் ஒருவன் காலில் ஷூ இறுக்கமாக அணிவித்தபடி இருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டி இப்படித்தான் ஷூ போட்டு, ஜீன்ஸ் போட்டு ஒருவன் தூங்கிக் கொண்டிருந்திருப்பானா என்றும் கேட்கின்றனர்.

புதன், 29 பிப்ரவரி, 2012

காதல் எதிர்ப்பு: பாகிஸ்தானில் ‘இந்து முன்னணி’ ஆண்டியின் ரெய்டு!


ரெய்டு ஆண்டி மாயா கான்காதலர் தினத்தில் பொது இடங்களில் இருக்கும் காதலர்களை துரத்தி அடாவடி செய்யும் வெறிநாய்கள் இந்திய நாட்டில் மட்டும்தான் உலாவுகின்றன என்று நினைக்க வேண்டாம். ஒரு பக்கம் மதரசாக்கள், மறுபக்கம் குண்டு வெடிப்புகள் என்று இஸ்லாமிய சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானில் இன்னும் சுவராஸ்யமான நிகழ்வுகள் காணக் கிடைக்கின்றன. பாக்கைச் சேர்ந்த சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாயா கான் என்பவரின் தலைமையில் பல ஆண்டிகள் படப்பிடிப்பு குழுவினருடன் பொது இடங்களுக்குப் போகிறார்கள். இணையாக உட்கார்ந்திருக்கும் காதலர்களை மோப்பம் பிடித்து தட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்குப் பிடித்திருப்பது தொலைக்காட்சி ஊடக வெறி.
இந்த காணொளியை இதில் பார்க்கலாம்.
'ரெய்டு' ஆண்டி மாயா கான்
குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பது பற்றி விவாதித்துக் கொண்டே, கையில் மைக்குடன் கேமராக்கள் பின் தொடர சாலைகளில் சுற்றுகிறார்கள். எலி வேட்டையாடும் பரபரப்பை உருவாக்கியபடியே வேக வேகமாக நடக்கிறார்கள்.
ஆங்காங்கு  மறைந்து உட்கார்ந்திருக்கும் இளம் தம்பதியினர் இவர்களைப் பார்த்த பின் பதறி ஓடுகிறார்கள்.

காட்சி ஒரிஜினலாக வர, ஒரிஜினல் சரக்கடித்த விக்ரம்!!

குடித்துவிட்டு வரும் காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக நிஜமாக சரக்கடித்து தன் 'தொழில்நேர்த்தி'யைக் காட்டியுள்ளார் நடிகர் விக்ரம்!
மணிரத்னத்தின் உதவியாளர் பிஜோய் நம்பியார் இயக்கும் மலையாளம், இந்தி, தமிழ்ப் படமான 'டேவிட்'டில் நடிக்கிறார் விக்ரம்.
இந்தக் கதையின் நாயகன் ஒரு பெரும் குடிகாரன். ஆலப்புழை பகுதியில் வசிக்கும் மீனவன்.
ஆலப்புழையிலும், கேரள மாவட்டத்தின் எல்லைப்புற ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தபோது, மீனவர் விக்ரம் விக்ரம் குடித்துவிட்டு வருவது போல அதிக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய விக்ரம், உண்மையாகவே சரக்கடித்துவிட்டு அந்த காட்சிகளை நடிக்கலாமே என இயக்குநரிடம் யோசனை சொன்னாராம் (கேரள க்ளைமேட் வேற இம்சை பண்ணியிருக்கும்!)

பிராமணர்களை இழிவுபடுத்தும் கருணாநிதியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

ஏனையவர்களை இழிவு படுத்தும் பிராமணர்களை எப்போது கைது  செய்ய வேண்டும்?
திண்டுக்கல்:  பிராமணவர்களை இழிவுபடுத்தும் திமுக தலைவர் கருணாநிதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இகு குறித்து இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் தர்மராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது சாதியை சொல்லி இழிவுபடுத்தும் செயல். அதே போல அச்சுறுத்தும் செயலாகும்.
இவர் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் பிராமணர் சமூகம் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேசியும், எழுதியும், அறிக்கை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி மத உணர்வை புண்படுத்துவது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவது ஆகியவை தண்டனைக்குரியதாகும். சாதிக்கு எதிராக பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

வசந்தபாலனின் 'அரவான்' - மார்ச் 2-ல் ரிலீஸ்!


Aravaan Movie

வசந்த பாலன் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உருவாகியுள்ள அரவான் வரும் மார்ச் 2-ம் தேதி முதல் உலகெங்கும் வெளியாகிறது.
அங்காடித் தெரு என்ற அற்புதமான படைப்புக்குப் பின், 18-ம் நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்டு வசந்தபாலன் உருவாக்கியுள்ள படம் அரவான்.
ஆதி, பசுபதி, தன்ஷிகா, அஞ்சலி என முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.

தினமும் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் கனிமொழி


Kanimozhi

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள கலைஞர் டி.வி. பங்குதாரரான திமுக எம்பி கனிமொழி வழக்கு விசாரணைக்காக தினமும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலாவின் படத்தில் நடிக்கிறார் பூஜா

நான் கடவுள் படத்தில் கண்ணில்லாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் கண்ணீரை விருதாகப் பெற்ற பூஜா, பாலாவின் எரியும் தணல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.திடீரென பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று நமக்கு ஆச்சரியம் மேலிட்டது. அதனை எவ்வாறு தீர்ப்பது... ஒரே வழிதான் நேரடியாக பூஜாவைக் கேட்டுவிடலாமே என்று அவரை தொலைபேசியில் அழைத்தோம்.அப்போது,நான் தற்போது சென்னையில்தான் தங்கியுள்ளேன். பாலா சாரைப் பார்த்து இந்தப் படம் குறித்து பேசினோம், கதை சொன்னார், மிகவும் மிடித்துப்போய்விட்டது.

பெரியார் அண்ணா, சமூகநீதிக் காவலர்களால்தான் திராவிடர்கள் நிமிர்ந்து நிற்க முடிகிறது: கலைஞர்

சென்னை, பிப்.28- பெரியாரும், அண்ணாவும், சமூகநீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல, இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது என்று திராவிட இயக்க 100- ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலைஞர் கூறினார்.
திராவிட இயக்க 100- ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நூறாண்டு முடிகின்ற தருவாயில் நம்முடைய இயக்கம் இன்றைக்கு திராவிட இயக்கம் என்ற பெயரால் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.
நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்'' என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஏடா! சங்கரா! நீ High Court ஜட்ஜாமேடா? என்று நம்பூதிரிப் பார்ப்பான் கேட்டானாம்.

மனுதர்மத்திற்கும், மனித தர்மத்திற்குமிடையே மிகப் பெரும் போராட்டம்!

சென்னை, பிப்.28- மனுதர்மத்திற்கும், மனித தர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற போராட்டம் என்று திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா தொடக்கத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
திராவிடர் இயக்க நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி 27.2.2012 அன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
என்னுடைய உரையைத் துவக்குவதற்கு முன்னால் இந்த நூற்றாண்டிலே சுவடுகளைப் பதித்து எத்தனையோ சோதனைகளை எல்லாம் கண்டு மிகப் பெரிய அளவுக்குத் தியாகங்களை செய்து இந்த மேடையைக் கட்டியிருக்கின் றார்களே! அந்தக் கறுப்பு மெழுகுவத்திகளுக்கு, அந்தத் தியாகச் செம்மல்களுக்கு, மொழிப்போர் வீரர்களுக்கு இலட்சியத்திற்காக தனது உயிரை சிறையில் நீத்த அந்த மாவீரர்களுக்கு அனைத்து பேருடைய வீர வணக்கத்தையும் தெரிவித்து இந்த உரையைத் துவக்க நான் விரும்புகிறேன்.
அண்ணா முதலமைச்சர் ஆன நிலை!
1967-லே அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தார் கள். அவர்களேகூட எதிர்பார்க்கவில்லை. அண்ணா அவர்கள் போடுகின்ற கணக்குக்கும் கலைஞர் போடுகின்ற கணக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. அப்பொழுதே அதைத் தெளிவாகச் சொன்னார்.
ஆறே நாளில் ஆட்சி மாறப் போகிறது என்று மயிலாப்பூர் தேர்தல் கூட்டத்திலே கலைஞர் சொன்னார்.
ஆனால் அண்ணா அவர்கள் பெரி யாரிடத்திலே இருந்து கொஞ்சம் நிதான மாகக் கணக்குப் போட்டு பார்ப்பவர். 

போதை பொருள் பயன்பாடு இந்தியா முதலிடம்

புதுடில்லி: போதை பொருள் பயன்படுத்துவது மற்றும் போதை பொருட்கள‌ை மற்ற நாடுகளுக்கு கடத்துவதில் இந்தியா மையமாக செயல்படுவதாக ஐக்கிய நாடுகளின் போதை தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இண்டர்நேஷனல் ‌நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் போர்டின் ஆண்டு ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் ஹெராயின் போன்ற போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் மட்டும் சுமார் 40 டன் அளவிற்கு ஹெராயின் உற்பத்தியாகியுள்ளது. இதில் 17டன் அளவிற்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் , மீதமுள்ளவை இந்தியா வழியாக வங்களாதேசம், நேபாளம், இலங்கை , மற்றும் பாகிஸ்தான்வழியாக கடத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

பாரம்பரிய பிற்போக்குத் வர்க்க தமிழர் புலிகளையே ஆதரித்தனர்

children warபுலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது அவசியம்தானா?
கேள்வி: புலிகள் அழிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்பொழுது இலங்கையில் அவர்களின் தாக்குதல்கள் எதுவுமில்லை. அப்படியிருக்க அரசாங்கமும் சில ஊடகங்களும் (வானவில் உட்பட) புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இது அவசியம்தானா?
சு.தர்மானந்தன், மார்க்கம், கனடா
பதில்: புலிகள் இராணுவ ரீதியாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவர்கள் பெரும் பண பலத்துடனும் வலிமை வாய்ந்த சில வெளிநாட்டு சக்திகளின் பின்பலத்துடனும் புலம்பெயர் நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர். உள்நாட்டிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பணியைத்தான் முன்னெடுத்து வருகிறது. இது பருண்மையான கள நிலவரம். ஆனால் இதற்கும் அப்பால் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய, மறைந்து கிடக்கின்ற பல முக்கியமான விடயங்கள் புலிகள் விடயத்தில் இருக்கின்றது. அதுதான் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர்.புலிகள் இயக்கம் என்பது தமிழர் வாழ்வில் திடீரெனத் தோன்றிய ஒரு அமைப்பு அல்ல. அந்த இயக்கத்தில் பிரபாகரன் என்ற தனி மனிதன் செலுத்திய ஆளுமைமிக்க வெளிப்படையான தலைமைத்துவத்தை வைத்துக்கொண்டு, அந்த இயக்கம் முழுக்க முழுக்க ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்ற பார்வை பலரிடம் உள்ளது. உண்மை அதுவல்ல.
புலிகள் இயக்கம் என்பது தமிழ் மேட்டுக்குடி பிற்போக்கு வர்க்கத்தின் ஒரு ஆயுதம் தாங்கிய அணியே தவிர வேறொன்றுமல்ல. அது முதலில் சேர்.பொன்.இராமநாதன் போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, பின்னர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ், எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி என்பனவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வந்தது.

கூடங்குளம் உதயகுமார்: கைதான ஜெர்மானியருக்கும், எனக்கும் எந்த தொடர்பும்

பாங்க் டேர்ன் ஓவர் (வங்கி பணப்பரிவர்த்தனை) பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை'' என, ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் ஹெர்மான்,50, கைது விவகாரத்தில், நிருபர்களை சந்தித்த கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மழுப்பினார்.

நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்த உதயகுமார் கூறியதாவது: கைதான ஜெர்மானியருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை நாங்கள் ராய்னர் என்று அழைப்போம். கடந்த நான்கு ஆண்டுகளாக பழக்கம் உண்டு. சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் லால் மோகனுக்கும் தெரிந்தவர். ஜெர்மனியில் கணினி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நடராஜன்: என்கவுன்டரில் கொலை செய்யத் திட்டம்: நீதிபதி முன்

தஞ்சாவூர்: நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய, சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட மூவருக்கு, ஒருநாள் போலீஸ் கஸ்டடி கொடுத்து, தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை மாவட்டம், விளார் சாலை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், சசிகலாவின் கணவர் நடராஜன் தரப்பினர் மீது, நில அபகரிப்பு மனு புகார் ஒன்றை கொடுத்தார். இப்புகாரின்பேரில், சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது அண்ணன் விளார் சாமிநாதன் (75), அக்கா மகன்கள் சுரேஷ், சின்னையா, நீடாமங்கலம் யூனியன் தலைவர் (பொ) குபேந்திரன், சாமிநாதனின் கணக்குப்பிள்ளை மாரிமுத்து, நடராஜனின் நண்பர் சென்னை இளவழகன் ஆகிய ஏழு பேர் மீது, தஞ்சை நில அபகரிப்பு சிறப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

ஜீவா, கார்த்திக்கு நோ சொன்ன லட்சுமி ராய்!

2011-ம் ஆண்டின் மிக வெற்றிகரமான நடிகை லட்சுமி ராய்தான். அவர் நடித்த மங்காத்தா பெரிய ஹிட். காஞ்சனாவோ சூப்பர் டூப்பர் ஹிட்.
இன்றைக்கு பலரும் லட்சுமிராயை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார்கள். ஆனால் ரொம்ப தெளிவான லட்சுமிராய், தனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களை, அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒப்புக் கொள்ள மறுத்துவருகிறார்.
சமீபத்தில் லட்சுமி ராய்க்கு இரு பெரிய பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒன்று கார்த்தியின் படம். இதில் லட்சுமி ராய்க்கு இரண்டாவது நாயகி வேடம். ஆனால் நல்ல சம்பளம் தரத் தயாராக இருந்தார் தயாரிப்பாளர். கதையைக் கேட்ட லட்சுமி ராய், நான் நடிக்க மாட்டேன் என விலகிக் கொண்டார்.
அடுத்து ஜீவாவுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் வேண்டாம் என மறுத்துவிட்டார்.

பத்மாலட்சுமி மகளுக்கு பல்லாயிரம் கோடி சொத்துக்களை எழுதி வைத்த மறைந்த யு.எஸ். தொழிலதிபர்


Padma Lakshmi and Forstmannலண்டன்: இளவரசி டயானா மற்றும் பிரபல மாடல் பத்மலட்சுமி ஆகியோருடன் காதலில் ஈடுபட்டு சில காலம் குடும்பமும் நடத்திய, ரூ. 9,000 கோடிக்கு அதிபதியான தியோடர் டெட்டி பார்ஸ்ட்மேன் தனது சொத்துக்களை பத்மலட்சுமியின் மகள் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
இத்தனைக்கும் பத்மலட்சுமியின் மகள் கிருஷ்ணாவுக்கு இவர் தந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்மலட்சுமி (41) அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபல மாடலான இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மணந்தார். ஆனால், சல்மான் ருஷ்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்தார்.

Admk Mafiaநடராஜனை ராவணன் போட்டு கொடுத்ததாக… வரக்கூடாத சந்தேகம்!

Viruvirupuதிடீர் திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் திரைப்படம் போலத்தான் போய்க் கொண்டிருக்கிறது ராவணன் விவகாரம். இதில் உளவுத்துறை டீமுக்கே தலை சுற்ற வைத்த திருப்பம், ராவணன் பற்றி சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த வேறு இருவர் பேசிக்கொண்ட விவகாரம்தான்!
நடராஜன் கைது செய்யப்பட்ட நாட்களில் ராவணன், பெரும்பாலும் விசாரணை இல்லாமல்தான் வைக்கப்பட்டிருந்தார். அவரிடம் இனி என்ன கேட்பது என்பதில் போலீஸ் அதிகாரிகளுக்கே குழப்பம் வந்துவிட்டதில், ராவணன் விசாரணை ஏதுமில்லாமல் சும்மாதான் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்.
நடராஜன் கைது செய்யப்பட்ட தினமன்று, ராவணனிடம் பேச்சுக் கொடுத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “நடராஜன் சாரை கைது செய்யும்படி மேலிட உத்தரவு வந்திருக்கிறதே..  அவர் மேடத்துக்கு எதிராக ஏதாவது மூவ் செய்திருப்பாரா?” என்று நூல் விட்டுப் பார்த்தார். ராவணனிடம் இருந்து சோக கீதம்தான் பதிலாக வந்திருந்தது.
“நடராஜன்கூட நான் அவ்வளவா பேச்சு வெச்சுக்கிறதில்லை. நடராஜன், திவாகரன்லாம் ஒரே செட்.

அழகிரி:ஆருயிர் தம்பி ஸ்டாலின் அவர்களே


Azhagiri
சங்கரன்கோவில்: பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தி விட்டு, மின்தடையை மாநிலம் முழுக்க பரவி விட்டு மமதையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு சரியான பாடம் கற்பிப்போம் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சங்கரன்கோவிலில் வைஷ்ணவி திருமண மண்டபத்தில் இன்று திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அழகிரி பேசுகையில், இடைத் தேர்தல் நாயகன் என்று என்னைக் குறிப்பிட்டு ஒரு பெண்மணி பேசி வருகிறார் (பிரேமலதா விஜயகாந்த்தைக் குறிப்பிட்டு). அங்கேயே ஒரு நாயகன் இருக்கும்போது இந்த நாயகன் குறித்து அவர் ஏன் பேசுகிறார்?.

UP கிராமத்தில், பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை


லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பெண்களுக்கு இது நாள் வரை, ஓட்டு போட உரிமை அளிக்கப்படாமல் உள்ளது.உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், இந்த தேர்தல் தொடர்பாக பிரசாரம் செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை என கூறப்பட்டு வரும் நிலையில், இந்த மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் செருவா கிராமத்தில், பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது.சுதந்திரம் அடைந்த நாள் முதல்,
இந்த கிராமத்தில், தேர்தல் நடைபெறும் போதெல்லாம், பெண்களை ஓட்டு போட அனுமதிப்பதில்லை. இந்த வினோத நடவடிக்கை குறித்து, கிராம பெரியவர் நசீர் கானிடம் கேட்ட போது, "தேர்தல் நேரத்தில், கிராமத் தலைவர் எங்களை அழைத்து, யாரெல்லாம் ஓட்டு போடப் போகிறீர்கள். "யாரெல்லாம்
உங்கள் வீட்டு பெண்களை ஓட்டு போட அனுப்பப் போகிறீர்கள்' என கேட்பார். நாங்களும் வழக்கப்படி பெண்களை ஓட்டு போட அனுப்ப மாட்டோம்' என சொல்லி விடுவோம்'' என்றார்.

இது போலி என்கவுன்டர் - யாரையோ திருப்திப்படுத்த நடந்தது: உண்மை அறியும் குழுவின் அறிக்கை

பிப்ரவரி 26, 27 தேதிகளில், சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் குறித்து ஆய்வு செய்த அ மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, இந்த என்கவுன்டர் போலியானது என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அ. மார்க்ஸ் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை: வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மு.க.அழகிரி:சுற்றி சுற்றி வருவேன்: யாரும் லீவு போட்டுவிட்டு போகக் கூடாது

சங்கரன் கோவில் இடைத்தேர்தலையொட்டி திமுக செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் வைஷ்ணவி மகாலில் இன்று (28.02.2012) காலை 10.30 மணிக்கு தொடங்கியது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதாஜீவன், முன்னாள் துணை சபாநாயகர் விபி.துரைசாமி இவர்களோடு முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், தலைமை நிலைய செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் என மண்டபம் நிறைந்த அந்தக் கூட்டத்தில், திமுக எம்பி தங்கவேல் உள்பட பலர் பேசினர். இவர்களில் கூட்டணிக் கட்சியில் உள்ள காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, நான் முன்பு இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டேன்.

K.Bhakiyaraj:வேற கட்சில சேர்றதா இருந்தா நானே கூப்பிட்டு சொல்வேனே!


Bhagyaraj
சென்னை: திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேரப்போவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கே பாக்யராஜ்.
தமிழ் திரையுலகில் 1970, 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் பாக்யராஜ். ஏராளமான படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார்.
1989-ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் குதித்தார். ஆனால் அரசியல், சினிமா இரண்டிலுமே அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

த்ரிஷா?: சிம்பு ஒரு நடிகர் அவ்வளவு தான்.

சிம்புவுடன் நடிக்க வேண்டாம் - த்ரிஷா?
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தான் வடசென்னை.இது வெற்றிமாறன் படம் தான். சிம்பு படம் இல்லை.ட்விட்டரில் இது சிம்பு படமா என ஒருவர் கேட்டதற்கு ”படத்தில் சிம்பு ஒரு நடிகர் அவ்வளவு தான்.ஹீரோவாக நடித்தால் படம் அவருடையதாகாது” என்று அந்தமனிதரை ஆட்டிவிட்டார் ஆடுகள இயக்குனர்.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராணா நடிக்கவிருந்தார். த்ரிஷா இந்த படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வேகமாக பரவியதும்,ராணா இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி அதிவேகமாக பரவியது. இந்த செய்தியை வெற்றிமாறன் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
இந்த இணைதலுக்கும் விலகலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று தெலுங்கு பட உலகின் நண்பர்களிடம் கேட்டால் ராணாவும் த்ரிஷாவும் நெருக்கமான(!) நண்பர்கள் என்கிறார்கள். 
இந்த படத்தில் ராணா நடிக்காமல் போனதற்கு இந்த நட்பும் ஒரு காரணமாக இருக்குமோ? என நம்மிடமே கேள்விக் குறி வைக்கிறார்கள்

சங்கரராமன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை, பிப். 27- காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சைபர் கிரைம் காவல்துறையினரைக் கொண்டு விசாரிக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் சம்பந்தப்பட்ட சங்கராச்சாரி ஜெயேந்திரர்  சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு பிணையில் வெளிவந்த சங்கராச்சாரியார்,
தமிழகத்தில் இவ்வழக்கு நடைபெற்றால் ஒரு சார்பாக நடைபெறும் என்று தெரிவித்ததால், புதுவை மாநிலத்தில் இக்கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கிற்கு நீதிபதியாக இருக்கும் இராமசாமியோடு ஜெயேந்திரர் தொலைப்பேசியில் உரையாடியது வெளிவந்து மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

கலைஞர் :ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் வருவார்கள்

சென்னையில் திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் கலைஞர்,  பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ம.நன்னன், சுப.வீரபாண்டியன்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கலைஞர்,’தந்தை பெரியார், அறிஞர் அண்ணாத்துரை காட்டிய வழியில் பகுத்தறிவுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.அவர் மேலும், இன்றைய தினம் நமக்கு பயமுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன.

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி !அரசியலை அக்குவேறு ஆணிவேராகப் அலசிக் கொண்டிருப்பவரிடம் போய் நீங்கென்ன கட்சி சார்? என்றால், ”அட நீங்க வேற…. நான் சோத்துக் கட்சி சார்”, என்று நகைச்சுவையாக நழுவிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். அதுவெறும் நகைச்சுவை இல்லை. சாப்பிடுவதற்கென்றே ஒரு கட்சி கட்டியது போல சிலர் ‘சோத்துக்கட்சியாகவே’ களத்தில் இருக்கிறார்கள்.
உங்கள் ஊர் உயரதர உணவு விடுதிகளை ஒரு முறை வலம் வந்து பாருங்கள், அங்கு மேசையில் செங்கிஸ்கான் படையெடுப்பால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட பிரதேசம் போல, மிச்சம் மீதம் கிடக்கும் உணவுத் துண்டங்களையும், குவிந்து கிடக்கும் தட்டுக்களையும் பார்த்து உங்களாலும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
பசிக்காகச் சாப்பிடுவது ஒரு வகை, ருசிக்காகச் சாப்பிடுவது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையினரைக் குறி வைத்து உணவுத் தொழில் உற்பத்தியாளர்கள் ‘ஆவி’ பறக்கப் புதுப்புது அயிட்டங்களை அவிழ்த்து விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சும்மாவா, ”பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும், இவை நாலும் கலந்து தருவதாகப்” பகவானுக்கே மெனுகார்டு போட்ட மண்ணாயிற்றே.

கமீலாவை பிரிகிறார் இளவரசர் சார்லஸ்

லண்டன்:இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி டயானா பிரிந்த பின்னர் கமீலாவை மணமுடித்து அரண்மனையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் தனிமையிலேயே வாழ்க்கை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. 63 வயதான இளவரசி கமீலா அரண்மைனயில் இருப்பது சுமையாக இருப்பதாக உணரப்படுவ‌‌தால் தனது சொந்த நாட்டில் உள்ள அரன்மனையான ரே மில் ஹவுஸ்க்கு சென்று வருவதாகவும் 10 நாளுக்கு ஒரு முறை ‌அங்கு கமீலா சென்றுவிடுவ‌தாக குறிப்பிடப்படுகிறது.

Tamilnadu வட மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு: போலீஸ் உஷார்

சென்னையில் நடந்த வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தங்கியுள்ள, வட மாநில தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கடந்த 20ம் தேதியும், பெருங்குடி பரோடா வங்கியில், கடந்த மாதம் 23ம் தேதியும் துப்பாக்கி முனையில், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள், பிஹாரை சேர்ந்த வினோத்குமார், சரிகரே, வினய்பிரசாத், அபய்குமார், அரிஷ்குமார் என்பது தெரிய வந்தது. கடந்த, 22ம் தேதி இரவு, வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேரையும், போலீசார் சுட்டுக் கொன்றனர். வேலைவாய்ப்புக்காக, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக முகாமிட்டுள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால், தமிழகத்தைச் சேர்ந்த கான்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள், புரோக்கர்கள் மூலம், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

நதிகள் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி: நதிகள் இணைப்பு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் வழிகாட்டவும் உயர்நிலைக் குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நீர்ப்பாசனம், குடிநீர் பிரச்சினைகள் உள்ளன. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைத்து விட்டால் நீர்ப்பாசன பிரச்சினைக்கும், குடிநீர் வினியோகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கும் பெரிய அளவில் தீர்வு கண்டு விட முடியும். நாட்டில் வறட்சியால் தவிக்கிற மாநிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியும். எனவே நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும்படி உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நடராஜன் ஆவேசம் இதை நான் சும்மா விட மாட்டேன்

சசிகலாவின் கணவர் நடராஜன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது பாதுகாப்பு கருதி தீவிரவாதிகள், தூக்கு தண்டனை கைதிகள் போன்ற பெரிய அளவிலான குற்றம் புரிந்தோரை அடைத்து வைக்கும் உயர் பாதுகாப்பு தொகுதி&1வது கட்டிடத்தின் 7வது அறையில் நடராஜனை சிறை நிர்வாகத்தினர் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி சிறை சூப்பிரண்ட் சுந்தர்ராஜ், மற்றும் எஸ்பிசிஐடி எஸ்.ஐ.டேனியல் என்பவரும் உயர் பாதுகாப்பு தொகுதி 1ல் ரோந்து சென்றனர்.
நடராஜன் அடைக்கப்பட்டுள்ள அறையை, இருவரும் வெளியில் நின்றபடி பார்வையிட்டுள்ளார். அப்போது சூப்பிரண்ட் சுந்தர்ராஜ் நடராஜனிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது அருகில் வெள்ளை பேண்ட், சட்டை அணிந்திருந்த எஸ்.ஐ.யை பார்த்து ‘இவர் யார்?‘ என சிறை அதிகாரியிடம் நடராஜன் கேட்டுள்ளார். அதற்கு ‘எஸ்பிசிஐடி எஸ்ஐ‘ என பதில் சிறை அதிகாரி கூறியுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த நடராஜன், ‘எஸ்பிசிஐடி போலீசை சிறைக்குள் எப்படி அனுமதித்தீர்கள். ஏடிஜிபி அனுமதியின்றி அந்நியர் யாரும் உள்ளே வரக்கூடாது என்பது தானே சிறை விதி. என்னை உளவு பார்க்க சிறைக்குள்ளேயே தனி ஆளை நியமித்துள்ளார்களா? இதை நான் சும்மா விட மாட்டேன்.
ஐகோர்ட்டில் வழக்கு தொடர போகிறேன்‘ என ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் பயந்துபோன சிறை அதிகாரி, ‘நாங்கள் உளவு பார்க்கவோ, ஆய்வு செய்யவோ வரவில்லை. வழக்கம்போல ரோந்துக்கு தான் வந்தோம்.
இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்‘ என நடராஜனிடம் நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்தபின் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நடராஜனை பார்க்க வந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் மகேந்திரவர்மனிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்பிசிஐடி எஸ்.ஐ என குறிப்பிடப்பட்ட அந்த நபர் குறித்து வக்கீல் விசாரித்தபோது தான், அந்த எஸ்.ஐ கரூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருவதும், கடந்த சில மாதங்களாக சிறை வளாகத்தில் எஸ்பிசிஐடிக்கு உளவு பார்க்கும் சிறப்பு பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிறை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடரும் முயற்சியில் நடராஜன் தரப்பினர் இறங்கியுள்ள சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திங்கள், 27 பிப்ரவரி, 2012

என்கவுண்டர் அரசியல் – ஐந்து கொலைகள் போதுமா?

தேர்தலில் ஜெயித்த பிறகு ஆட்சி நடத்த போலீஸ் மட்டுமே போதும் எனும் எண்ணத்தில் இருக்கும் ஜெயலலிதா. எதிர்க்கும் துணிவில்லாத மனிதர்களை மட்டும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் தாக்குவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறை. செய்திகளில்கூட சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள். வெற்றிகரமான என்கவுண்டர், சுட்டு வீழ்த்தப்பட்ட கொள்ளையர்கள் என்பன போன்ற வர்ணனைகளை கொடுக்கும் பாக்கெட் நாவல் தரத்திலான ஊடகங்கள். இந்தக் கூட்டணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள் தொடர்கதையாகவே இருக்கும்.
அரசாங்கத்தின் தேவைக்காக என்கவுண்டர் செய்யும் பழக்கத்தை வீரப்பன் கொலை மூலம் ஆரம்பித்து வைத்தவர் ஜெயலலிதாதான். அதன் பிறகு இது ஒரு தொடர் நிகழ்வாகிவிட்டது. அதிகமாக ஜெய்சங்கர் படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறதா அல்லது அப்பிராமணர்கள் சொம்பு திருடியதற்காக கொல்லப்பட்டாலும் அதனை ஆதரிக்கும் சோ ராமசாமியை நண்பனாக கொண்டிருக்கும் பழக்கதோஷமா தெரியவில்லை, படுகொலைகள் வாயிலாகவே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இயலும் என நம்புபவர் ஜெயா. அவரது ஆட்சியில் என்கவுண்டர்கள் அதிகமாக நடக்கும்.  எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று அவர் பெருமிதம் கொள்வதும் நடக்கும்.
இந்தத் தருணத்தில் நாம் அச்சமடைய வேண்டியது ஜெயலலிதா பற்றியோ அல்லது போலீஸ் பற்றியோ அல்ல. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதிகாரமிருக்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் “இப்படி சுட்டாத்தான் அடுத்து கொள்ளையடிக்கனும்னு நினைக்கிறவனுக்கு பயம் வரும்” எனும் வாசகங்களோடு இதை ஆதரிக்கும் பொதுமக்கள்தான் அதி அபாயகரமானவர்களாக தெரிகிறார்கள். இவர்களில் பலர் எவன் தாலியறுந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கூடங்குளம் மின்சாரம் வேண்டும் என்று சொல்பவர்கள்.

அழகிரி நெசமாகவே ரெடியாகிறார்!


Viruvirupuமு.க.அழகிரி, “தி.மு.க.-வின் தலைமைப் பதவி கொடுத்தால், வாங்கிக்கொள்ள தயார்” என்று கூறியது, தி.மு.க.வுக்குள் இப்போது மற்றொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரி கூறியது, “சும்மா அந்த நேரத்தில் ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டதுதான்” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டிருந்த ஸ்டாலின் தரப்பு, அதை இப்போது வேறு விதமாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

ஏய், 'பிராம்ப்டிங்' பண்ணாதே: நயன்

பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்களும், நடிகர்களும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் துவங்கியுள்ளனர்.
நயன்தாராவுக்கு யாராவது பிராம்ப்ட் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. அதாவது வசனத்தை அப்பப்போ எடுத்துக் கொடுத்து உதவுவது பிடிக்காது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதன்படி பேசி நடிப்பார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த நயன் தமிழில் நன்றாகப் பேசுவார்.
பேசினால் மட்டும் போதாது என்று நினைத்த அவர் தற்போது தமிழில் எழுதப், படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார்.

மாறன் பிரதர்ஸ் வளர்ந்த கதை! Part one

 கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்கள் எப்படி மிகப் பெரிய தீய சக்தியாக ஆக முடியும் ?
யார் இந்த கலாநிதி மாறன். சென்னை டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, லயோலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அமேரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.
இந்திய டுடே நிறுவனம், அப்போது வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, ந்யூஸ் ட்ராக் என்ற வீடியோ பத்திரிக்கையை தொடங்கியது. இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட். இதில் தற்போது, இந்த வார உலகம் என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா ? அதைப் போலவே, தொடங்கப் பட்டது.
ஆனால், இந்த பூமாலைக்குப் பின்னால், கருணாநிதியின் பின்புலம் செயல்பட்டது.   இந்தியா டுடேவின் ந்யூஸ் ட்ராக் போல, சந்தாதாரர்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள அத்தனை வீடியோ கடைகளும், மிரட்டப் பட்டன.

சங்கரன்கோவிலுக்கு மின்வெட்டு சலுகை தருவதா? தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், சங்கரன்கோவில் தொகுதிக்கு மின்வெட்டு சலுகை தரப்படுகிறதா என, விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் சார்பில், மின்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில், மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலுக்கு வந்துள்ளதால், அரசின் சார்பிலோ அல்லது அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் சார்பிலோ, எந்த விதமான சலுகையும், அந்த தொகுதிக்கு அளிக்கப்பட கூடாது என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி புகார் இந்நிலையில், சங்கரன்கோவில் தொகுதிக்கு மட்டும், மின்வெட்டில் சலுகை அளிக்கப்படுவதாக, அரசியல் கட்சிகள் புகார் கூறியுள்ளன. மற்ற மாவட்டங்களில், 8 மணிநேரம் முதல், 10 மணி நேரம் வரை, ின்வெட்டுஅமலாகும்நிலையில், சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும், மூன்று மணி நேர மின்வெட்டு அமலாவதாகவும், ஓட்டு வங்கிக்காக, ஆளுங்கட்சி சார்பில் இச்சலுகை அளிப்பதாகவும், புகார்கள் எழுந்தன.இதுதொடர்பாக, சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரியிடமும், மாவட்ட கலெக்டரிடமும், எதிர்க்கட்சினர் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, தேர்தல் கமிஷன் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தமிழக மின்துறைக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.
>உடனடியாக பதில்... :அதில், "சங்கரன்கோவில் தொகுதிக்கு சலுகை காட்டுவது, தேர்தல் நடத்தைவிதிமீறல். எனவே, சங்கரன்கோவில் தொகுதியில், எத்தனை மணி நேரம் மின்வெட்டு அமலாகிறது

மகள் குத்திக் கொலை: தந்தை வெறிச்செயல்


நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சிக்கவலம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி(65). திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் கம்பவுன்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஞானாம்பாள், பிஎஸ்என்எல்லில் பணியாற்றி வந்த இவர், 25 வருடத்துக்கு முன் இறந்துவிட்டார்.

இவர்களுக்கு விமலா, திலகவதி, மகேஸ்வரி, புவனேஸ்வரி, சந்திரா ஆகிய மகள்களும், சபரிநாதன் என்ற மகனும் உள்ளனர். இதில் மகேஸ்வரி கடந்த 5 வருடத்துக்கு முன் தீ விபத்தில் இறந்துவிட்டார். விமலா, திலக வதி, சந்திரா ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது. சபரிநாதனுக்கும், புவனேஸ்வரிக் கும்(32) இன்னும் திரும ணம் ஆகவில்லை. சபரிநாதன் திருச்சியில் பொக் ளின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் வீட்டில் செல்வமணியும், புவனேஸ்வரியும் மட்டும் வசித்து வந்தனர். செல்வமணி குடிப்பழக்கம் உள்ளவர். புவனேஸ்வரி, ஆண்கள் யாருடனாவது சிரித்து பேசிக் கொண்டிருந்தால், செல்வமணி சந்தேகப்பட்டு அவரை திட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் புவனேஸ்வரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதை யில் அங்கு வந்த செல்வமணி, மகளை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக மகளுக்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செல்வமணி, கத்தியை எடுத்து புவனேஸ்வரியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள், காரில் நாகை அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு சென்றனர்.
அப்போது நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவு பெற்று, கட்சியினர் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் புவனேஸ்வரியை அழைத்துச் சென்ற வாகனமும் இந்த நெரிச லில் சிக்கிக் கொண்டது.
சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்துக்கு பின் புவனேஸ்வரியை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு நுழையும்போதே புவனேஸ்வரி இறந்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள், அவரது சடலத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல், ஊருக்கு கொண்டு சென்றனர்.

அமெரிக்க படைகள் குவிப்பு-ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால் தாக்க திட்டம்

டெக்ரான்: ஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா தனது படைகளை வெகுவேகமாக குவித்து வருகிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டமானது ஆக்கப்பூர்வமானதற்கு அல்ல.. அணு ஆயுத தயாரிப்புக்குத்தான் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன.
ஈரான் அணுசக்தித் திட்டங்களைப் பார்வையிட்ட சர்வதேச அணுசக்தி கழகத்தினரும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்க முனைப்புக் காட்டி வந்த இஸ்ரேல், தற்போது வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இஸ்ரேலைவிட ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுப்பதே வெற்றிக்கு சாத்தியமாகும் என நேச நாடுகள் கருதும் நிலையில் பாரசீக வளைகுடா மற்றும் ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் : நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் நடிகர் வடிவேலு.    அத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது முதல் நடிகர் வடிவேலும் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.   இத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வீர்களா? என்று வடிவேலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,‘’வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள்.

குற்றவாளிகளின் மனித உரிமைகளை மட்டுமே காப்பாற்றுவர்.உங்களின் உரிமையை அல்ல

சென்னையில் அடுத்தடுத்து நடந்த வங்கிக் கொள்ளை, திருப்பூரில் நகைக் கடைக் கொள்ளை என்பவை, வெறும், "திருட்டு' என்ற வகையைச் சேர்ந்தவை அல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்டவை. அரசு, மெத்தனமாக இருந்தால், அது நிர்வாகக் குறைபாடு, ஆள்பவர்களின் பொறுப்பின்மை என்று குறை கூறப்படுகிறது. இந்தக் குறைகூறல் நியாயம் தான். ஆனால், உடனடி, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், மனித உரிமைகள் பறிபோகின்றன என்ற கோணத்தில், அதுவும் குறைகூறப்படுகிறதே.

கொள்ளையை விட அதிகமாக வருத்தம் தருவது, இந்தக் கூப்பாடு தான். ஒவ்வொரு, "என்கவுன்டர்' போதும், இறந்தவர்களின் உறவினர்களை விடவும், சோகமாக ஒப்பாரி வைப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் தான். இதுபோன்ற சம்பவங்களில், விரைவில் துப்பு துலக்கிய காவல்துறைக்கு சம்பிரதாயமான பாராட்டுக் கூடக் கிடைப்பதில்லை; கண்டனக் குரல்கள் உடனே எழுகின்றன.

திடீர் கோடீஸ்வரரான பள்ளி ஆசிரியர்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கோரபுட்(ஒதிஷா): கோரபுட் மாவட்டத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திடீர் கோடீஸ்வர ஆசிரியர் வீட்டில் ஒதிஷா மாநில லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
கோரபுட் நகரில் பார்வையற்றோர் பள்ளிக்கூடம் ஒன்றில் "உதவி ஆசிரியராக" பணிபுரிபவர் நிரஞ்சன் சமந்த்ராய். விஷால் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவியும் கோரபுட் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போதும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இருவருமே ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் திடீரென நிறுவனங்களும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மாடி வீடுகளும் எப்படி சாத்தியமாயின? என்ற கேள்விக்கான விடைதான் லஞ்ச ஒழிப்பு போலீஸ்.
கோடீஸ்வர ஆசிரியர்களின் வீடுகளில் நடத்திய சோதனையின் முடிவில் இவர்களுக்கு எப்படி திடீர் சொத்து கிடைத்தது என்பது பற்றி தெரியவரும்