திங்கள், 27 பிப்ரவரி, 2012

மகள் குத்திக் கொலை: தந்தை வெறிச்செயல்


நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சிக்கவலம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி(65). திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் கம்பவுன்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஞானாம்பாள், பிஎஸ்என்எல்லில் பணியாற்றி வந்த இவர், 25 வருடத்துக்கு முன் இறந்துவிட்டார்.

இவர்களுக்கு விமலா, திலகவதி, மகேஸ்வரி, புவனேஸ்வரி, சந்திரா ஆகிய மகள்களும், சபரிநாதன் என்ற மகனும் உள்ளனர். இதில் மகேஸ்வரி கடந்த 5 வருடத்துக்கு முன் தீ விபத்தில் இறந்துவிட்டார். விமலா, திலக வதி, சந்திரா ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது. சபரிநாதனுக்கும், புவனேஸ்வரிக் கும்(32) இன்னும் திரும ணம் ஆகவில்லை. சபரிநாதன் திருச்சியில் பொக் ளின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் வீட்டில் செல்வமணியும், புவனேஸ்வரியும் மட்டும் வசித்து வந்தனர். செல்வமணி குடிப்பழக்கம் உள்ளவர். புவனேஸ்வரி, ஆண்கள் யாருடனாவது சிரித்து பேசிக் கொண்டிருந்தால், செல்வமணி சந்தேகப்பட்டு அவரை திட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் புவனேஸ்வரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதை யில் அங்கு வந்த செல்வமணி, மகளை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக மகளுக்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செல்வமணி, கத்தியை எடுத்து புவனேஸ்வரியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள், காரில் நாகை அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு சென்றனர்.
அப்போது நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவு பெற்று, கட்சியினர் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் புவனேஸ்வரியை அழைத்துச் சென்ற வாகனமும் இந்த நெரிச லில் சிக்கிக் கொண்டது.
சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்துக்கு பின் புவனேஸ்வரியை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு நுழையும்போதே புவனேஸ்வரி இறந்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள், அவரது சடலத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல், ஊருக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பக்கிரிசாமி, கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன் மற்றும் போலீ சார் அங்கு சென்று புவ னேஸ்வரியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து செல்வமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக