செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கலைஞர் :ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் வருவார்கள்

சென்னையில் திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் கலைஞர்,  பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ம.நன்னன், சுப.வீரபாண்டியன்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கலைஞர்,’தந்தை பெரியார், அறிஞர் அண்ணாத்துரை காட்டிய வழியில் பகுத்தறிவுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.அவர் மேலும், இன்றைய தினம் நமக்கு பயமுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன.
அவைகளைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நம்முடைய வழியில், தந்தை பெரியார் அமைத்துக்கொடுத்த பாதையில், அறிஞர் அண்ணா அமைத்துக்கொடுத்த வழியில் நாம் இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
இங்கே பேசியவர்கள் எல்லாம் சொன்னார்கள்; தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்திவருவதற்கு நீங்கள் முன்வரவேண்டும். அதற்கு இன்றுள்ள கட்சியினுடைய காவலர்கள் உடனடியாக தொண்டாற்ற தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
தொடங்கிவிட்டோம் தோழர்களே தொடங்கிவிட்டோம்.தொடர் போராட்டத்தை தொடங்கிவிட்டோம்.   13 வயிதிலே  இந்தியை எதிர்ப்பதற்காக கொடிபிடித்து,  தெருக்களிலே ஊர்வலம் நடத்தியவன்  கருணாநிதி.;

இன்றைக்கு அந்த கருணாநிதியுடைய பரம்பரை,  கருணாநிதியுடைய வழித் தோன்றல்கள்  இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, வருவார்கள்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக