புதன், 29 பிப்ரவரி, 2012

வசந்தபாலனின் 'அரவான்' - மார்ச் 2-ல் ரிலீஸ்!


Aravaan Movie

வசந்த பாலன் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உருவாகியுள்ள அரவான் வரும் மார்ச் 2-ம் தேதி முதல் உலகெங்கும் வெளியாகிறது.
அங்காடித் தெரு என்ற அற்புதமான படைப்புக்குப் பின், 18-ம் நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்டு வசந்தபாலன் உருவாக்கியுள்ள படம் அரவான்.
ஆதி, பசுபதி, தன்ஷிகா, அஞ்சலி என முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.
பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
தமிழர் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மரியாதை கலந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை உலகம் முழுக்க இந்தப் படம் வெளியாகிறது.
"இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமானது. வரிப்புலி என்ற பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பின்னோக்கிப் போய், ஒரு சமூகத்தின் வாழ்க்கையை நேரில் பார்த்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைக்கும்", என்று கூறியுள்ளார் படத்தின் ஹீரோவான ஆதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக