சனி, 3 மார்ச், 2012

பாரதிராஜா மகன் மனோஜ் வில்லன் ஆகிறார்!

Manoj Bharathirajas son becomes a villain
காதல் தீவு படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் வில்லனாக நடிக்கிறார். அரும்பு மீசை குறும்பு பார்வை’ படத்தில் டைரக்டு செய்தவர், வெற்றிவீரன். இவர் அடுத்து, காதல் தீவு’ என்ற படத்தின் கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். அழகி’ படத்தில் சிறு வயது பார்த்திபனாக அறிமுகமான ராம்சரண், இந்த படத்தின் கதை நாயகன் ஆகிறார். ஆஸ்கார் விருதுகளை அள்ளிய “ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் சிறு வயது நாயகியாக நடித்த தானவிலோகர், இந்த படத்தின் கதை நாயகி ஆகிறார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி, இந்த படத்தின் மூலம் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.
கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில், சுஜா வாருணி நடிக்கிறார். மாஸ்டர் கனல் கண்ணன், உதயாராஜ், “நர்த்தகி’ நாயகன் அஸ்வின், “நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள். மிதுன் ஈஸ்வர் இசையமைக்க, பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். யு.எம். இந்திரஜித், ரவி கதிரேசன் ஆகிய இருவரும் வசனம் எழுதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக