செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பத்மாலட்சுமி மகளுக்கு பல்லாயிரம் கோடி சொத்துக்களை எழுதி வைத்த மறைந்த யு.எஸ். தொழிலதிபர்


Padma Lakshmi and Forstmannலண்டன்: இளவரசி டயானா மற்றும் பிரபல மாடல் பத்மலட்சுமி ஆகியோருடன் காதலில் ஈடுபட்டு சில காலம் குடும்பமும் நடத்திய, ரூ. 9,000 கோடிக்கு அதிபதியான தியோடர் டெட்டி பார்ஸ்ட்மேன் தனது சொத்துக்களை பத்மலட்சுமியின் மகள் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
இத்தனைக்கும் பத்மலட்சுமியின் மகள் கிருஷ்ணாவுக்கு இவர் தந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்மலட்சுமி (41) அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபல மாடலான இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மணந்தார். ஆனால், சல்மான் ருஷ்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்தார்.இதையடுத்து டெல் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் மைக்கேலின் சகோதரர் ஆடம் டெல் என்பவரை காதலித்தார். அதே காலகட்டத்தில் அமெரிக்க தொழிலதிபரான டெட்டி பார்ஸ்ட்மேன் (71) என்பவரையும் காதலித்தார். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருந்தாலும், பெரும் பணத்துக்கு ஆசைப்பட்டு டெட்டி பார்ஸ்ட்மேனை பத்மலட்சுமி காதலிப்பதாக தகவல்கள் வெளியாயின.

கிருஷ்ணா பிறக்கும்போதும் டெட்டி பார்ஸ்ட்மேனும் பத்மலட்சுமியும் காதலித்து வந்தனர். ஆனால், கிருஷ்ணாவுக்கு டெட்டி பார்ட்மேன் தந்தையல்ல என்பதும், ஆடம் டெல் மூலம் பத்மலட்சுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இருப்பினும் கிருஷ்ணா பிறந்த பின், அந்தக் குழந்தையை தனது குழந்தை போல பராமரித்து வந்தார் டெட்டி பார்ட்ஸ்மேன்.

பத்மலட்சுமியை காதலிப்பதற்கு முன் இளவரசி டயானாவும் டெட்டி பார்ஸ்ட்மேனும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் டெட்டி பார்ஸ்ட்மேன் மரணடைந்தார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ. 9,000 கோடியாகும்.

இந் நிலையில், நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டெட்டி பார்ட்மேனின் உயில் சமர்பிக்கப்பட்டிருந்தது. அந்த உயில் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. அதில், தனது சொத்துக்களை பத்மலட்சுமியின் மகள் கிருஷ்ணா பெயரிலான அறக்கட்டளைக்கு எழுதி வைத்துள்ளார் டெட்டி பார்ஸ்ட்மேன்.

ஆனால், எவ்வளவு பணத்தை அவர் கிருஷ்ணா பெயருக்கு எழுதினார் என்பது தெரிவிக்கப்படவில்லை. மேலும் பத்மலட்சுமிக்கு தான் வழங்கிய கடன் அனைத்தையும் ரத்து செய்வதாகவும், பத்மலட்சுமி தனக்கு பணம் ஏதும் திருப்பித் தர வேண்டியதில்லை என்றும் அதில் டெட்டி பார்ஸ்ட்மேன் தெரிவித்துள்ளார்.

டெட்டி பார்ஸ்ட்மேன் ஐஎம்ஜி என்ற சர்வதேச விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஆவார். மேலும் உலகின் முன்னணி விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபல மாடல்களுக்கு விளம்பர ஒப்பந்தம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தியும், வாங்கி பெரும் லாபத்துக்கு விற்றும் உள்ளார்.

திருமணமே செய்து கொள்ளாத டெட்டி பார்ட்மேன் நடிகை எலிசபெத் டெய்லர் உள்பட பல்வேறு பிரபலங்களுடன் சில காலம் சேர்ந்து வாழ்ந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

தனது சொத்தில் ஒரு பகுதியை இவர்களுக்கும் அவர் பிரித்துத் தந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக