சனி, 27 மார்ச், 2021

ஆ.ராசாவை நோக்கி எதிர்காலத்திலும் கூட சதியம்புகள் ஏவப்படலாம்.

திமுக இந்து விரோத கட்சியல்ல. யார் 'இந்து' என்பதில்தான் பிரச்சனை” -ஆ.ராசா  சிறப்பு பேட்டி | The DMK is not an anti Hindu party. The problem is who is  a 'Hindu' A.Rasa Special ...

செல்லபுரம் வள்ளியம்மை : ஆ.ராசாவை ஊடகங்களும் பார்பனீயமும் மீண்டும் மீண்டும் குறிவைத்து தாக்குவதை கவனித்தீர்களா?
ஆரியத்தின் குறி தப்பிய திராவிட இலக்குதான் ஆ.ராசா  .
ஆ.ராசாவை பார்க்கும் பொழுதெல்லாம் தங்களின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகி போனதே ஏக்கம்  அவர்களிடம்.    
ஆ.ராசாவின் மீது அவர்கள் வைத்த குறி திராவிடத்தின் மீது வைத்த குறி
ஆ.ராசா தோற்றால் திராவிடம் தோற்றதாக வரலாற்றில் எழுதப்படும் என்று காத்திருந்தவர்கள் முகத்தில் செருப்பால் அடித்து துரதியவர் ஆ.ராசா
இந்திய வரலாற்றிலேயே ஆ ராசா மீது சுமத்தப்பட்ட சதி அளவுக்கு கனபரிமாணம் கொண்ட சதி வேறு எவர் மீதும் சுமத்தப்பட்டதாக எனக்கு தெரியவில்லை.
ஆ ராசாவின் திராவிட பாரம்பரியம்தான் அதற்கு முக்கிய காரணம் என்று நான் நம்புகிறேன்
ஆ ராசாவின் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும் இந்நேரம் மனமொடிந்து போயிருப்பார்கள் .   என்னென்ன விபரீத முடிவுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
ஆ.ராசா 2 ஜி சதீயில் இருந்து வெறுமனே தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ளவில்லை

இலங்கையில் ஈழப்போர் பற்றிய ஜெர்மன் ஆய்வாளரொருவரின் (Mathias Keittle) கருத்து

May be an image of one or more people, people standing and outdoors
Maniam Shanmugam  : இலங்கையில் ஈழப்போர் பற்றிய ஜெர்மன் ஆய்வாளரொருவரின் (Mathias Keittle) கருத்து
மிகவும் சிக்கலான உலகத் தொடர்புகளுடன் மிகமோசமான பயங்கரவாதக்குழு ஒன்றினை இலங்கை அழித்தபோதிலும் அதற்கான உரிய பலன் இலங்கைக்குக் கிடைக்கவில்லை.
உலகில் வேறெங்கிலும் இல்லாதவாறு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது.
அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உணவளிப்பதற்கு வேண்டி, பட்டினியால் வாடும் குழந்தைகளென இலங்கையில் கிடையாது என்பது கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது.
பெருந்தொகையில் மக்கள் அவலம், தொற்று நோய்கள் மற்றும் பட்டினி போன்றவற்றை இலங்கை தவிர்த்துள்ளது என்பதை மேற்குலகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றது.

அறநிலைய துறைக்கு எதிரான ஈஷா ஜாக்கியின் பிரசாரத்தில் பார்ப்பனர்களே 90% உள்ளார்கள் ( மார்ச்-26)

May be an image of 3 people, people sitting and people standing
சாவித்திரி கண்ணன்  - அறம் இணைய இதழ் : என்னாச்சு இந்த யோகா குருவிற்கு…? அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டக்களமாக ( மார்ச்-26) தமிழகத்தின் பிரபல கோவில்களை மாற்றிவிட்டார் ஜக்கி!
‘’அரசாங்கமே கோவிலில் இருந்து வெளியேறு’’ என்று ஜக்கியின் ஆட்கள் கோஷம் எழுப்பியும், பேசியும் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.
இவர்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது!
ஆன்மீக, யோகா அமைப்பாக இருந்த ஈஷாவில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தின் பின்னணி என்ன?
தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுமையும் லட்சக்கணக்கனக்கான மக்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி என்ற பிரணாயாமம் ஆகியவற்றை பிரசாரம் செய்கிறது ஈஷா யோகா மையம்!
ஆரம்ப காலத்தில் தன்னுடைய யோகா தொண்டுகளின் மூலம் மதங்களைக் கடந்து மனித நேயப் பார்வையோடு இயங்கி வந்தனர்.

கனிமொழி :அமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக இளைஞரை கொன்றது அராஜக அ.தி.மு.க ஆட்சி” - நாகையில் விளாசல்!

அமைச்சர் ஓ எஸ் மணியனை கேள்வி கேட்டார் என்ற காரணத்திற்காக இளைஞர் இளையராஜா கொல்லப்பட்டார் .kalaignarseithigal.com - Vignesh Selvaraj  :   நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் முகம்மது ஷாநவாஸை ஆதரித்து கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய கனிமொழி எம்.பி., "எல்லோராலும் படிக்க முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தவை திராவிடக் கட்சிகள்.
நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் மருத்துக் கல்லூரிகளை கொண்டு வந்த கட்சி தி.மு.க. ஆனால், தற்போது நம் பிள்ளைகளை மருத்துவம் படிக்க விடாமல் நீட் தேர்வை கொண்டு வந்த கட்சி பா.ஜ.க.நீட் தேர்வை ஆதரித்து வாக்களித்த கட்சி அ.தி.மு.க. நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் முதல்வராகி விட்டார் என விமர்சித்த பா.ம.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது அ.தி.மு.க. அ.தி.மு.க கூட்டணி பதவி வெறியால் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி.

'அரசியல் குழந்தையாக ஒப்பிட்டேன்' - நான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் மாற்றி வெளியிட்டுள்ளார்கள். ஆ.ராசா விளக்கம்

நக்கீரன் செய்திப்பிரிவு :    தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், "அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.

பா.ம.கவை எதிர்த்து 23 தொகுதிகளில் பிரசாரம - காடுவெட்டி குரு மகள் அறிவிப்பு

dinasuvadu.com : அதிமுக கூட்டணியில் பாமக வரும் சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை, 23 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். தனது தந்தை இருக்கும்போது இதனை எல்லாத்தையும் பார்த்துக் கொண்டார். இந்தளவுக்கு நாங்கள் தற்போதுய் எறங்கி போகவேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

மனைவியின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை

மனைவியின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை

தினத்தந்தி : டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர்  வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு தனது குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கான தனது மனைவியின் முடிவை ஆதரித்ததற்காக வருண்  மாமியார் மீது வெறுப்படைந்தார்.  
இந்த நிலையில் தாலியம் என்ற வேதிப்பொருளைக் கலந்து தனது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு  கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  
இதானால்  கடந்த ஆண்டு இறந்த தனது தந்தை தனது குழந்தையாக மறுபிறவி எடுப்பார் என்று அவர் நம்பினார்.

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குபதிவு- மாலை 5.30 மணி நிலவரம்

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குபதிவு- மாலை 5.30 மணி நிலவரம்

maalaimalar : வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள்.
கொல்கத்தா
அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கயானா பிரதமர் வீராசாமி நாகமுத்து (தமிழர்) அறிவித்த பொருளாதார கலாசார வாய்ப்புக்களை நழுவ விட்ட அதிமுக அரசு

தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டு பிரதமராக இருந்த The Hon. Moses Veerasammy Nagamootoo MP (Tamil: மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் பற்றிய ஒரு செய்தி
இவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அங்கு பிரதமராக இருந்தார்
அந்த காலக்கட்டங்களில் இவர் தமிழ்நாட்டோடு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருந்தார்
தமிழ் நாட்டோடு கல்வி பொருளாதார கலாசார மொழி தொடர்புகளை பேணுவதற்கு கயானா நாட்டு தமிழ் பிரதமர் வீராசாமி நாகமுத்து அவர்கள் கோரிக்கை விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன .
இந்த வாய்ப்பை பயன்படுத்த இதுவரை யாரும் பெரிதாக முயற்சி செய்ததாக தெரியவில்லை.
அப்போது அமைச்சர் சம்பத் மற்றும் அமைச்சர் வீரமணி ஆகியோரோடு கயானா நாட்டு பிரதமர் திரு வீராசாமி நாகமுத்து அவர்கள் பேசி இருக்கிறார்
தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் கயானா அரசிடம் இருந்து பெற்று தருவதாக தமிழக அரசுக்கு அழைப்பு விடுத்திருந்தார்
எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பும் பொருளாதார அபிவிருத்தியும் தமிழும் தமிழ் கலாச்சார பரிவர்த்தனைக்கு ஒரு அரிய வாய்ப்பாக கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை அதிமுக அரசு நழுவ விட்டுவிட்டது
எங்கே கொள்ளை அடிக்கலாம் என்று மட்டுமே சிந்தித்து செயலாற்றும் அதிமுக அரசு  இழந்த ஒரு அரிய வாய்ப்பாக இதை கருதுகிறேன்
தென் அமெரிக்காவில் உள்ள ஒரே ஒரு ஆங்கில நாடு இதுதான் ..
நல்ல மருத்துவ பல்கலை கழகம் இருக்கிறது .. கற்கலாம்
அவரின் கோரிக்கையை அதிமுக அரசு கண்டு கொள்ளாத நிலையில் ஒரு காணொளி வாயிலாகவும் இதை தெரியப்படுத்தினார் அந்த காணொளிதான் இது

 

பிரியங்கா காந்தி ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகம் வருகிறார்

m

 Shyamsundar - tamil.oneindia.com :  கன்னியாகுமரி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை கன்னியாகுமரி வருகிறார்.
இவருக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்று கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகம் வருகை தரும் பின்னனியில் முக்கிய காரணம் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலோடு சேர்த்து தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார். கொரோனா காலத்தில் மக்களுக்கு இவர் சேவை செய்து நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.
அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்.. மரணம் அடைந்தார்.

மீனவர்கள் படகுகளுடன் விடுவிப்பு ! இலங்கை கடற்படையில் பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினார்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்கள் படகுகளுடன் விடுவிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சொந்த ஊர் திரும்பினர்
.dailythanthi.com : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர். நேற்று மாலை 20 மீனவர்கள் ராமேசுவரம் வந்தடைந்தனர். ராமேசுவரம், ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 54 பேர், எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, இதுகுறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த 20 மீனவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த 20 மீனவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டன.

வெள்ளி, 26 மார்ச், 2021

பங்களாதேஷில் மோடிக்கு எதிர்ப்பு..போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு

tamil.oneindia.com - elmurugan P : டாக்கா: பங்களாதேஷில்  பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் இன்று ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது,
கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார்.
இந்தியாவின் புதிய போயிங் 777 விமானத்தில் பிரதமர் மோடி டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
பங்களாதேசின்  50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக டாக்கா வந்த பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மு.க.அழகிரி எனது அண்ணன்; எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன்: கனிமொழி Exclusive

dmk mp kanimozhi, kanimozhi mp, kanimozhi interview, kanimozhi exclusive interview, திமுக, கனிமொழி, கனிமொழி நேர்காணல், எனது அண்ணன் முக அழகிரி, அதிமுக, திமுக, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், kanimozhi says MK Alagiri will always remain my brother, mk stalin, dmk, tamil nadu assembly election, aiadmk, dmk vs aiadmk
tamil.indianexpress.com மனோஜ் சி ஜி : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தூத்துக்குடி எம்.பி.யும் திமுகவின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார். கேள்வி: தமிழகத்தில் இந்த தேர்தல் எப்படி உருவாகியிருக்கிறது?

இந்த தேர்தல் திமுகவுக்கும் திமுக கூட்டணிக்கும் சாதகமாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது. நிச்சயமாக இது உறுதியான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்தேன். அவர்கள் தற்போதைய அரசின் மீது மிகவும் வருத்தமும் கோபமும் கொண்டுள்ளனர். அவர்கள் நிச்சயமாக மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் திமுக என்று மக்கள் நம்புகிறார்கள். பரவலாக பெரிய அளவில் வேலையின்மை நிலவுவதால் அவர்கள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மாநிலத்தில் எந்த முதலீடும் இல்லை. அடிப்படை உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்யப்படவில்லை. இந்த அரசாங்கம் யாருமே எதிர்த்து போராட முடியாத ஒரு அரசாங்கமாக மாறி வருகிறது. யாரும் கேள்வி கேட்க முடியாத மிகவும் சர்வாதிகாரமாக மாறிவருகிறது.

கலைஞர் உமா மகேஸ்வரனிடம் கூறியது : உங்களை நீங்களே அழித்துக்கொள்கிறீர்களே? ஒரு முன்னாள் போராளியின் வாக்குமூலம்!

May be an image of one or more people, people standing, tree and outdoors

Vetri Chelvan : தமிழ்நாட்டில் விடுதலை இயக்கங்களை ஆதரித்த பெரும்பான்மையான தலைவர்கள் சகோதரப் படுகொலையை கண்டிக்கவில்லை. கலைஞர் கருணாநிதி மட்டுமே கண்டித்தார். எமது செயலதிபர் உமா மகேஸ்வரன கலைஞர் கருணாநிதியே சந்திக்கும்போதெல்லாம் யார் உங்கள் எதிரி, உங்களை நீங்களே எல்லாம் அழித்து கொள்கிறீர்கள்., என்று மனம் நொந்து பலமுறை கூறியுள்ளதாக செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறினார். எமது செயல்பாடுகளால் கலைஞர் கருணாநிதி எங்கள் போராட்டத்தை பின்பு மனப்பூர்வமாக ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை.   புலிகளை ஆதரித்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் பிரபாகரன் இடம் சகோதர படுகொலை பற்றி கண்டித்து கூறியிருந்தால், கட்டாயம் பிரபாகரன் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். காரணம் பிரபாகரன் தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஒரு கதாநாயகனாகவே விளங்கினார். ஆனால் அவரை ஆதரித்த தமிழக தலைவர்கள் விடுதலைப்புலிகள் என்ன தவறு செய்தாலும் ஆதரிப்பதோடு, அவர்கள் யாரைக் கொலை செய்து துரோகி என்றாலும் கொலை செய்யப்பட்டவர் பற்றி தெரியாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களும் ஆமாம் துரோகியை தான் கொன்றார்கள் என்று கூறுவார்கள். எந்தஒரு தமிழ்நாட்டு தலைவரும் எமது ஆயுதப்போராட்ட தலைவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்க வில்லை என்பது கவலைக்குரிய விடயம்.  

Vetri Chelvan : · பகுதி 69 1982 முதல் 1990 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் 

நான் எனக்குத் தெரிந்த உண்மைகளை நேரடி அனுபவங்களை பதிவாக போடும்போது, ஒரு சில அதி புத்திசாலி நண்பர்கள் இந்திய கைக்கூலி என்று என்னை குற்றஞ்சாட்டி கருத்துக்களை கூறுகிறார்கள். இந்திய இலங்கை ஒப்பந்தம் வரை விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து பெரிய இயக்கங்களும் இந்திய மத்திய அரசின் உதவியை பெற எப்படி பாடுபட்டார்கள், டெல்லியில் நடந்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ஒவ்வொரு இயக்கமும் தான் தான் தான் தான் இந்திய விசுவாசி என்று காட்டிக்கொள்ள முயன்றதையும் நான் நேரில் பார்த்தவன். புதுடில்லியில் 87 ஆம் ஆண்டு வரை நடந்த இந்திய அரசுக்கும் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் நடந்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவன் என்ற முறையில், இயக்கங்கள் இந்திய அரசோடு பேசிய முறையும் அதன்பின்பு வெளியில் இயக்கத் தலைவர்கள் விடும் அறிக்கைகளையும் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். 

நாம் தமிழர் கட்சியின் விஷ அரசியலுக்கு செருப்படி ..கருஞ்சட்டைபடையின் காணொளி

 LR Jagadheesan  : ஈழத்தமிழ் தேசியர்களுக்கு, குறிப்பாக இப்படிப்பட்ட நபர்களுக்கெல்லாம் சொந்தக்காசுகொடுத்து கொழுக்கவைத்த வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்.
ஈழத்தமிழர்களுக்கு 90% தமிழ்நாட்டுத்தமிழர்கள் யாரும் எந்த கெடுதலும் செய்ததில்லை. இன்றுவரை ஈழத்தமிழர்கள் மீது இரக்கத்தோடும் அன்போடும் நட்போடுமே இருக்கிறார்கள். ராஜீவ் கொலையால் எழுந்த கோபத்தையும் தாண்டி 90% தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு இன்னமும் ஈழத்தமிழர்கள் மீது ஆதூரமே மிஞ்சி நிற்கிறது.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நிதியை கோடி கோடியாய் கொட்டி அழுதார்கள்? அவர்களால் தமிழ்நாட்டு அரசியல் அடைந்திருக்கும் தீமையின் ஆழ அகலங்கள் என்ன? அதன் பாரதூர பாதிப்புகள் என்ன? என்பதற்கு இந்த காணொளி இன்றைய உதாரணம்.
வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டின் வழியாக; தமிழ்நாட்டுத்தமிழர்களின் உதவியோடு வெளிநாட்டில் குடியேறியவர்கள். அப்படி உங்களுக்கு உற்ற காலத்தில் உதவிய தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கும் அவர்களின் அரசியலுக்கும் நீங்கள் செய்த கைம்மாறு என்ன என்பதை இந்த காணொளி உங்களுக்கு உணர்த்தும். அறிவுநாணயமும் அற உணர்வும் மனிதாபிமானமும் குறைந்தபட்ச நாகரீகமும் உங்களுக்குள் இன்னும் உயிர்பெற்றிருந்தால்.

திமுகவின் கலப்புத் திருமண ஊக்கத்தொகை.. அவதூறு வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை

 Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: கலப்புத் திருமண ஊக்கத்தொகை வாக்குறுதி விவகாரத்தில் திமுக மீது அவதூறு பரப்பி வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன் சமூக ஊடகங்களில் திமுகவின் கலப்புத் திருமண ஊக்கத்தொகை வாக்குறுதி குறித்து பரப்பப்பட்டுள்ள வீடியோக்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமண ஊக்கத்தொகை தொடர்பாக அளித்த வாக்குறுதியை ஒரு பெண் அவதூறாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டார்.
குறிப்பிட்ட பெண்கள் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் குறிப்பிட்ட சில சாதிப் பெண்களை பட்டியலின சாதியினர் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் திமுக வாக்குறுதி அளித்திருப்பதாக அவதூறான விமர்சனங்கள் இருந்தன.

ஆசிரியர் வீரமணி பேசிய கூட்டத்தில்கல்வீச்சு-இளைஞர் அணி செயலாளர் காயம்;மர்ம கும்பலை கைது செய்யக்கோரி தொண்டர்கள் சாலைமறியல்

கோபி அருகே நம்பியூரில் பரபரப்புதி.க. தலைவர் கி.வீரமணி பேசிய கூட்டத்தில்கல்வீச்சு-இளைஞர் அணி செயலாளர் காயம்;மர்ம கும்பலை கைது செய்யக்கோரி தொண்டர்கள் சாலைமறியல்
dailythanthi.com :  கோபி அருகே நம்பியூரில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசிய கூட்டத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் இளைஞர் அணி செயலாளர் காயம் அடைந்ததால் மர்மநபர்களை கைது செய்யக்கோரி தொண்டர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். நம்பியூர் கோபி அருகே நம்பியூரில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசிய கூட்டத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் இளைஞர் அணி செயலாளர் காயம் அடைந்ததால் மர்மநபர்களை கைது செய்யக்கோரி தொண்டர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

வேலு vs வருமான வரித்துறை: வேட்டையாடியது யார்? சோதனை இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.

வேலு vs  வருமான வரித்துறை:  வேட்டையாடியது யார்?

 minnambalam :அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்காக வியூகம் வகுத்துள்ளது போலவே, மத்திய அரசின் வருமான வரித்துறையும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பு வியூகம் அமைத்துள்ளது. இந்தியாவிலேயே தேர்தல் நேரத்தில் பணம் அதிகம் விளையாடும் என்ற ரெக்கார்டு தமிழகத்துக்கு ஏற்கனவே இருக்கிறது,

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், கடந்த நாடாளுன்றத் தேர்தலில் வேலூர் என பணத்தால் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட வரலாறு தமிழகத்துக்கு உள்ளது.   அதனால் இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்த்திருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தலின் போது நடக்கும் பண விளையாட்டைக் கட்டுப்படுத்தவும், கண்டறிந்து தடுக்கவும் இரு சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம். அதில் ஒருவர் வருமான வரித்துறையில் தென்னிந்திய அளவிலான உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன்.

பச்சை தமிழன் நாப்கின் அருணாசலம் முருகானந்தம் ஹிந்திக்காரரா? Pad man திரைப்பட திரிபு

 செல்லபுரம் வள்ளியம்மை : மகளிர் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின் ஏழைகளுக்கு பயன்பட  கூடிய வகையில் மலிவு விலையில் சுயமாக தயாரித்து அதில் பெரும் புரட்சியை படைத்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த  திரு அருணாசலம் முருகானந்தம் அவர்கள்.
இவரின் வாழ்க்கை வரலாற்று படமான pad man இல் இவரை (கதாநாயகனை) ஏன் ஒரு ஹிந்திக்காரனாக காட்டினார்கள்?
அது ஒரு உண்மை கதை . அது ஒரு தமிழ்நாட்டு  மண்ணின் மைந்தனின் வாழ்க்கை அனுபவம்.
அதை ஹிந்திகாரனாக காட்டியது ஒரு மோசடி அல்லவா?
இதுதான் வடநாட்டு மேலாதிக்க சிந்தனை .
கொஞ்சம் கூட நேர்மை உணர்வே அற்ற ஒரு கலாச்சாரம்.
அசல் திருட்டு புத்தி!
ஒரு பிரெஞ்சுகாரனின் வாழ்வில் நடந்த சம்பவம் பற்றிய படத்தை ஆங்கிலத்தில் எடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஒரு பிரெஞ்சுகாரனாகவே காட்டி இருப்பார்கள்

மாதா அமிர்தானந்த மாயி! Net worth: $232 Million கோடிகளில் புரளும் புரட்டு பெண் சாமியார் .

Tamil iniyan  :  மாதா அமிர்தானந்தமயி உடன் சில கணங்கள்...
அம்மாவை நெருங்கினேன்,
அம்மா என்னை எந்த வித உணர்வுகளும் வெளிக்காட்டாமல் என்னைக் கட்டி அணைத்தார் தோளில் என் முகம் பதிய வைத்து எனது காதில் கிசுகிசுப்பாகக் கேட்டார்...
" அம்மையுடெகொச்சு மோனே, தனிக்கு எந்தா வேண்டேன்னு சோதிச்சோளு .... (அம்மாவின் சின்ன மகனே உனக்கு என்ன வேண்டும் என்று கேள்!}
எங்களுக்குள் நடந்த மலையாள சம்பாஷணைகளை இனி தமிழில் தருகிறேன்!
"எனக்கு ஒன்றும் வேண்டாம், காரணம் மனிதர்கள் இறைவனாவது இல்லை"
அம்மா அதிர்ச்சி அடைந்து என்னை தள்ளி விட்டார்... சுற்றிலும் இருந்தவர்கள் இதைப் பார்த்ததும் அம்மாவிடம் பதறிப் போய், "அம்மா என்ன நடந்தது?" என்றனர்
அம்மா அவர்களிடம் 'இவன் ஒரு நாஸ்திகன்" என்றார்....
உடனே நான் மேலே கூறிய அந்த பிரதம சிஷ்யர் என்னை எழுப்பி 'அம்மாவிடம் என்ன கேட்டீர்கள் என்றார்" மலையாளத்தில்...
"இனிமேல்தான் கேட்க வேண்டும்" என்றேன்.
அவர் உடனே அம்மாவின் காதில் என்னவோ சொன்னார். அதற்கு அம்மா சைகையால் என்னவோ காண்பித்தார். அதற்குப் பின் அந்த சீடர் என்னை அம்மாவின் பின்புறம் நின்று தன் வழியாக ஏதாவது கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள் என்றார்.

இந்தியாவிலேயே இலவச சானிட்டரி நாப்கின் திட்டம் தமிழகத்தில்தான் முதலில் .. 2008 இல் திமுக ஆட்சியின்போது ...

 Nandhini Vellaisamy  : அரசு கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின்களை  இலவசமாக வழங்க உள்ளதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே இந்த திட்டத்தை ராஜஸ்தான் முதலில் தொடங்கியுள்ளதாக,  ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருந்தது.
அதற்கு அரசியல் விமர்சகரும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் மருத்துவருமான சுமந்த் சி.ராமன், “2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட  தொலைநோக்கு திட்டம் இது. அம்மாவால் தொடங்கப்பட்டு மற்ற மாநிலங்கள் கடைபிடிக்கும் மற்றுமொரு தொலைநோக்கு திட்டம். அதனால், இந்த திட்டத்தை முதலில் தொடங்குவது ராஜஸ்தான் மாநிலம் அல்ல, திட்டத்திற்கு உரிமை கோரும் முன்னர் உண்மையை சோதிக்க வேண்டும்” என ட்வீட் செய்தார்.

உலகின் 12 வீத கப்பல் போக்குவரத்து சூயஸ் கால்வாய் முடங்கியது .. எவர் கிரீன் கப்பல்..குறுக்கே தரை தட்டியது ..பணியாளர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள்!

 Velmurugan P - /tamil.oneindia.com :  நைரோபி: சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை(Ever green) ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எவர் கிரீன் கப்பல் சிக்கியிருப்பதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் சுயஸ் கால்வாயில் அணிவகுத்து நிற்கின்றன.
சூயஸ் கால்வாய முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், உலகின் பொருளாதாரத்தையே புரட்டி போடும் அளவுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
ஏனெனில் இந்த வழியாகத்தான் உலகின் 12 சதவீதம் வணிகம் நடைபெறுகிறது.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் எகிப்தில் இருக்கிறது.

சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, வருமான வரித்துறை ஆகியவை மூலம் மாநிலத்தில் பரவலாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட பலரும் வருமான வரித்துறையின் சோதனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

கதிகலங்கும் கரூர்  :  தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 487 புகார்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். `இந்தப் புகார்களில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை' எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐந்து மாநில தேர்தல்: லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள்! தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் புதுச்சேரி..

nakkeeran :தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் அடுத்த சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து டைம்ஸ் நவ் ஊடகமும், சி-வோட்டர்ஸும் இணைந்து இம்மாநிலங்களுக்கான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தன. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்தப் புதிய கருத்துக்கணிப்பின்படி, ஒரு மாநிலத்தில் போட்டி அதிகரித்திருக்கிறது. மற்ற மாநிலங்களில், கடந்த கருத்துக்கணிப்பில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்ட கட்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. புதுச்சேரி

டைம்ஸ் நவ் - சி-வோட்டர்ஸின் கடந்த கருத்துக்கணிப்பில், புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கட்சிகள் இணைந்து 18 இடங்களைக் கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 12 இடங்களைப் பெற்று தோல்வியடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக தலைமையிலான கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றியை ஈட்டும் என்றும், காங்கிரஸ் - திமுக கூட்டணி வெறும் 9 இடங்களை மட்டுமே பெறும் எனவும் தெரிவிக்கிறது.

 அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 67 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களையும் வெல்லும் என கடந்த கருத்துக்கணிப்பு கூறிய நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவின்படி, பாஜக கூட்டணி 69 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. காங்கிரஸ் ஒரு இடம் குறைந்து 56 இடங்களைப் பெறவுள்ளது. 

நடிகை ஷகிலாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறை மாநிலப் பொதுச்செயலாளர் பதவி!

நடிகை ஷகிலாவுக்கு மாநிலப் பொதுச்செயலாளர் பதவி! - தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறையில் இணைந்தார்!

நக்கீரன் :நடிகை ஷகிலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஷகிலா தற்போது சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் 'சமையல் நிகழ்ச்சி'யில் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஷகிலா தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநிலப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, அத்துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி: ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய மந்திரி வலியுறுத்தல்

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி: ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய மந்திரி வலியுறுத்தல்
தினத்தந்தி  : மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
மும்பை, மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மும்பை போலீசாரை வற்புறுத்தியதாக இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் மராட்டிய அரசை ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

ஆசியாவின் மிக பெரிய தேர் ஊர்வலம் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்ட விழா

dailythanthi.com : திருவாரூர்,  தமிழகத்தில் மரத்தால் மிகப்பெரிய அளவில் தேர்களை அழகுற அமைத்து அதன் மீது தெய்வ திருவுருவங்களை வைத்து வீதிகளில் பவனி வரச்செய்து பெருவிழாவாக எடுக்கும் மரபு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
சோழ மன்னர்களும், அவர்களுக்கு பிறகு விஜயநகர அரசர்களும் பல தேர்களை செய்து அளித்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
இவ்வாறு சிறப்பு வாய்ந்த தேர்களில் ஒன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர்.
திருவாரூரில் பழங்காலத்தில் இருந்து ஆழித்தேரோட்டம் நடைபெற்றதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
கி.பி. 1748-ம் ஆண்டு கிடைத்த ஆவணத்தின் மூலம் தொடர்ந்து 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் தேர்திருவிழா நடைபெற்ற செய்திகளை அறிய முடிகிறது.

வியாழன், 25 மார்ச், 2021

தமிழ்நாடு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? கலைஞர் சாதித்தது என்னவென்று தெரியுமா?

May be an image of one or more people and people standing



Sharmila Rajasekar : :எங்கயும் கரண்ட் கிடையாது. சிம்னி விளக்கு தான்.. எந்த ஊருக்கும் சாலை வசதி கிடையாது.. நடை தான்.. கவுரவமான வேலை வாய்ப்பெல்லாம் கிடையாது.. அங்கங்க பெரிய பெரிய நிலசுவான்தார்கள் ஜமீன்தார்கள்தான்… பெருவாரியான மக்கள் அவங்க கிட்ட அடிமைகளா இருக்கணும்.. அவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு வேள சோத்துக்கு நாள் பூரா குடும்பமே வேலை செய்யணும்.. தண்ணீர் வசதி கிடையாது. பல மைல் தூரம் குடத்த தூக்கிட்டு நடந்து போகணும்.. பெண்களுக்கான எந்த உரிமையும் கிடையாது.. போகப்பொருளாக மட்டுமே இருக்கணும்.. படிப்பறிவு கிடையாது.. வேட்டை நாய்கள் போல தனக்கு கீழே இருந்த மக்களை பாடாய்படுத்தி வச்சாங்க. அதுவும் மதுரை இராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளெல்லாம் படிப்பறிவென்பது மருந்துக்கும் கிடையாது.. காட்டு மிராண்டிகள் வாழ்க்கை… பற்றி எரிந்து கொண்டே இருந்த நிலப்பரப்பு…காமராஜர் காலத்தில் கூட பள்ளிகள் துவங்கப்பட முடியாத மக்களை கொண்ட பகுதி…     மக்கள் கும்பல் கும்பலாக வட இந்தியா நோக்கி பிழைப்புக்கான போன காலம்..அப்போதெல்லாம் மதராஸி என்ற அடைமொழி.. மதராஸின்னாலே திருடன் பொய் பேசறவன்.. எவனும் மதிக்க மாட்டான். தமிழ் பேச பயப்படணும்…

₹.236 கோடி டெண்டருக்கு ₹.1262 கோடி: அதிமுகவின் இமாலய ஊழல் அம்பலம் -ஆதாரத்துடன் பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி

kalaignarseithigal₹.236 கோடி டெண்டருக்கு ₹.1262 கோடி: அதிமுகவின்  இமாலய ஊழல் அம்பலம் -ஆதாரத்துடன் பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி ! ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்து 58 ரூபாய் கூலி வழங்கியதாக அதிமுக அரசு கணக்கு காட்டியுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.தமிழ்நாடு மின்வாரியத்திற்காக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரியை இறக்க தொழிலாளர்களுக்கு கூலி வழங்கியதில் 1026கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், கணக்குத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையையும் மீறி எந்தவித ஆவணமும் இன்றி டெண்டர் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. நாடாளுமன்றஉறுப்பினர் மூத்த வழக்கறிஞர் என். ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது குறித்துக் குறிப்பிட்டதாவது :-

திமுக வேட்பாளர் எ.வ.வேலுவின் அலுவலகம், கல்லூரி, நிறுவனங்கள் மீது வருமானவரித்துறை சோதனை

E V Velu moved to senji for election campaign with mk stalin

நக்கீரன் : தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் சில நாட்களாக வேட்பாளர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை

maalaimalar : ராமேசுவரம்: தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் கப்பலில் ரோந்து வந்தனர். திடீரென அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் உடனடியாக கரையை நோக்கி விரைந்தனர்.

துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம்.. ராஜ்ய சபாவில் நிறைவேறிய டெல்லி என்சிடி மசோதா.. கெஜ்ரிவால் அதிர்ச்சி

  Shyamsundar - /tamil.oneindia.com :  டெல்லி: டெல்லியில் முதல்வரை விட துணை நிலையில் ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் கடந்த சில வருடங்களாக துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது.
டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பாக இங்கு கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.
NTC Delhi bill passed in Rajya Sabha: Kejriwal says it is a black day in democracy
டெல்லியில் முதல்வரை விட துணை நிலையில் ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக இனி முக்கிய முடிவுகளை எடுக்க துணை நிலை ஆளுநரிடம் முதல்வர் அனுமதி கேட்க வேண்டும்.

நீரில் மூழ்கி ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

நீரில் மூழ்கி ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

minnambalam : தமிழகத்தில் இருவேறு இடங்களில் குளத்துக்கு குளிக்க சென்ற ஐந்து சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கோமஸ்புரம் ராஜீவ்காந்தி நகர் குடியிருப்புப் பகுதியைச் சார்ந்த போஸ் இமானுவேல் என்பவரின் மகள்கள் சஞ்சனா (14) சப்ரினா (10).

இந்த இரு சிறுமிகள் உட்பட 10 பேர் அருகிலுள்ள துப்பாஸ்பட்டி கண்மாய்க்கு புதன்கிழமை குளிக்கச் சென்றனர். அங்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு பெண் துணி துவைத்து கொண்டிருந்த போது, பள்ளி சிறுமிகள் சஞ்சனா, சப்ரினா இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் கடலில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை: 7 கால்பந்து திடல் அளவு பெரியது

மிதக்கும் சூரிய சக்தி

சதீஷ் பார்த்திபன்  -  பிபிசி தமிழுக்காக  : உலகெங்கும் மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடு பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதும், நிலப் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு ஏற்றதாகவும் சூரிய சக்தி உற்பத்தி திட்டங்கள் கருதப்படுகின்றன.
எனவே சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் இத்தகைய திட்டங்கள் பரவலாகச் செயல்படுத்தப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே சூரிய சக்தி உற்பத்தியை சிங்கப்பூர் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையேயான ஜோகூர் நீரிணையில், கடல் மீது மிகப் பெரிய சூரிய சக்தி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

திருமா எடுத்த முடிவு ! . தூது விட்டும் கேட்காத திருமாறன்

விசிகவின் மண்டல அமைப்புச் செயலாளர் சு.திருமாறன் நீக்கம் - திருமாவளவன்  அறிவிப்பு | VCK - YouTube

Shyamsundar -  /tamil.oneindia.com :சென்னை: விசிக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் "மெசேஜ்" அனுப்பும் வகையில் அதன் தலைவர் எம்பி டாக்டர் திருமாவளவன் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக மொத்தம் 6 இடங்களில் போட்டியிடுகிறது. பானை சின்னத்தில் விசிக இந்த தேர்தலை சந்திக்கிறது. முதலில் திமுக கூட்டணியில் 6 இடங்களை மட்டும் பெறுவதில் விசிகவிற்கு விருப்பம் இல்லை. 6 இடங்கள் மிகவும் குறைவு என்று விசிக விவாதம் செய்தது.
தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் விசிகவை சமாதானப்படுத்தி திமுக ஒருவழியாக சம்மதிக்க வைத்தது.
ஆனால் என்ன ஆனால் விசிக நிர்வாகிகள் பலர் வெறும் 6 இடங்கள் மட்டும் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை. அதிக இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் திமுக குறைவாக கொடுத்துவிட்டது. இதனால் தேர்தலில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று உள்ளூர் நிர்வாகிகள் புலம்ப தொடங்கிவிட்டனர்.

புதன், 24 மார்ச், 2021

பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடியை தேர்வு செய்தது ஏன்?

பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடியை தேர்வு செய்தது ஏன்?

மாலைமலர் :ராமேசுவரம்..    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குடியரசு தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா வர சம்மதம் தெரிவித்து இருந்தார்.
அந்த நேரத்தில் இங்கிலாந்தில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் அடைந்ததால் அவரது வருகை ரத்தானது.
இந்தநிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருப்பதாகவும், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சீன அதிபர் ஜின் பிங் தமிழகம் வந்து, மோடியுடன் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது போன்று போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பையும் தமிழகத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தனுஷ்கோடி தமிழகத்திற்கும் இலங்கையின் வடபகுதிக்கு இடையில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்
தனுஷ்கோடிக்கு தலைமன்னாருக்கும் இடையில் சில நூற்றாண்டுகளாக போக்குவரத்தை மேற்கொண்டது ஆங்கிலேயர் ஆட்சிதான் .
இன்றும் கூட ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமானங்கள் இப்போதும் அந்த பகுதியில் உள்ளது.
இருபகுதியில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் தனுஷ்கோடிக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் உள்ளது. தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை நினைவு கூறும் ஒரு நிகழ்வாகவே இங்கிலாந்து பிரதமர் மோடியுடனான பேச்சு வார்த்தைக்கு தனுஷ்கோடியை தெரிவு செய்துள்ளார் என்று தெரிகிறது   .
திரு போரிஸ் ஜான்சன் அவர்கள் ர் முன்பு இலங்கைக்கு வருகை தந்த வடஇலங்கையில் பல இடங்களை பார்வையிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் இடத்தில் ஜாமர் கருவிகள் பொருத்தவேண்டும் தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை

May be an image of text that says '$ அரசியல் கட்சி கூட்டத்தை இந்த வாரமே கூட்ட வேண்டும் -ஐகோர்ட் VVPAT-M3 வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் இடத்தில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும் -திமுக தேர்தல் 2021'

Vivekanadan T  : தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில் ஜாமர் கருவி பொருத்தவேண்டும் , வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியும் என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு திமுகவின் கலாநிதி வீராசாமி கடிதமும் கோரிக்கையும் நேற்று விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று கேள்விகளுடன் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
1.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
2.தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுமா?
3.தேர்தலுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் ஜாமர் கருவிகள் பொறுத்தப்படுமா?

ஸ்டாலின் ராகுல் காந்தி ஒரே மேடையில் 28 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பிரசாரம்

தலைவர் ஸ்டாலின் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோர் வரும் 28 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிகிறது 

நக்கீரன் :  தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக மாநில கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேவேளையில் அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சித் தலைவர்களையும் தமிழகத்திற்கு அழைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்திவருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே தமிழகம் வந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பாஜக டீலிங் இதுதான் ! திரு விழாவில் தொலைந்தோர் பட்டியலில் அதிமுக?

May be an image of 2 people and text that says 'APR 4 2019 09:557M NEWS FEIONE BIGNEWS தமிழ் தெரியாத வட இந்தியர்கள் பலர் தமிழ்மொழி தேர்வில் பங்கேற்று முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்; இது எப்படி சாத்தியமாகிறது? ரமில்வே தேர்வு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் கேள்வி புதிய தலைமுறை உடனுக்கடன் தற்போது மின்வாரியம் உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்டதற்கு அரசே பல்வேறு துறைகளில் தமிழர்கள் தமிழக மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது ஏப்படி? -உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆட்சியை நீ வச்சுக்கோ... வேலைவாய்ப்பை நாங்க வச்சுக்கிறோம் ன்னு சொன்னாங்க... பட், அந்த டலிங் எனக்கு பிடிச்சிருந்தது! அதிமுக தமிழ்நாடு'

பேக்கரி டீலிங் பத்தி கேள்விப்பட்டிருக்கோம். இது செம்ம டீலிங்..  
பாஜகவை 20 சீட்டுக்குள்ள அடக்கிய அதிமுகவின் ஆளுமை பற்றி மூத்த பத்திரிகை ஊடக நண்பர் மூலம் கசிந்த தகவல்.
தாமரை ஒரு இடத்தில் கூட மலராது என்பது அவர்கள் அனைவரும் உணர்ந்ததே. ஆனாலும் இலை தலைமைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்...
கோவை பெண் தலைவர் அல்லது கரூர் IAS ஆஃபீஸர்,   இருவரும் அல்லது குறைந்தபட்சம் ஒருவர் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெறும் இலை சமஉ களில் சரிபாதி எண்ணிக்கை தாமரைக்கு தாவி விட வேண்டும்.
கட்சி தாவல் தடை சட்டத்தை மேலிடம் பார்த்துக்கொள்ளும்.
தாமரைக்கு தாவியவர்கள் கோவை பெண் தலைவரையோ அல்லது IAS ஆபீசரையோ தலைவராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சி தலைவராக ஆக்க வேண்டும்.
இதற்கு கைமாறாக,  இலை தலைமைக்கு அவர்கள் மேலுள்ள வழக்குகள் அனைத்தும் விடுவிக்கப்படும்,
கோடிகளில் செட்டில்மெண்ட்,
நிரந்தர இலை தலைமை பதவி,  மேலும் இலை கட்சிக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள்    என்று பேசப்பட்டுள்ளதாம்.
அதனால் தான் பணிவுக்கு பேர்போன  தேனி கார சேகுவேரா (பன்னீர்) நேற்று கோவை பெண் தலைவருக்கு (வானதி) தாமரை சின்னத்திற்கு பிரச்சாரம் செய்தாராம்.  

இனி வரும் உலகம் – தந்தை பெரியாரின் செல்போன் தீர்க்கதரிசனம் 1943 இல் பெரியார் கூறிய விஞ்ஞான..

கிழக்கையும் மேற்கையும் இணைத்த சூரியன்

1943 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சி யொன்றில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவினை,
பெரியாருடன் அந் நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணா , முழுமையாகக் குறிப்பெடுத்து, பின்னர் தெளிவுடன் எழுதி பெரியாரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்று தமது திராவிடநாடு இதழில்’ ஏட்டில் 21.1.1943, 28.1.1943 ஆகிய தேதிகளில் வெளியிட்டார்.
    போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
    கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
    ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
    உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.
    மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும்.
    உணவுகளுக்குப் பயன்படும்படியான உணவு, சத்துப்பொருள் களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்.
    மனிதனுடைய “ஆயுள் நுாறு’ வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.    இனி வரும் உலகம் – பெரியார்

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை: வடநாட்டவருக்கு தமிழகத்தில் குடியிருப்பு., பள்ளிகளில் தியானம் யோகம் தேவாரம் நீட் தொடரும் கோயில்கள் தனியார்களிடம் ஒப்படைக்கப்படும் ...

May be an image of 2 people and text that says 'TN தேர்தல் 2021 நான் மார்ச் "வெளிமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வீடு, மாட்டிறைச்சிக்குத் தடை, மதமாற்ற தடை சட்டம், நீட் தேர்வு தொடரும், பள்ளி பாடங்களில் ஆன்மீக நூல்கள் சேர்ப்பு..." பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி பார்க்கிறீர்கள்? BBC NEWS தமிழ் bbc.com/tamil'

May be an image of Thagadoor Sampath and text that says 'பிஜேபி தேர்தல் வாக்குறுதி தகஷிண பிரதேஷ் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு எனும் பெயர் தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றப்படும். உப்பு போட்டு சோறு தின்னும் தமிழன் இந்த சங்கி மற்றும் அடிமைகளுக்கு ஓட்டு ஓட்டுபோட போட மாட்டான் என்பது உறுதி!'

BBC :தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை . மார்ச் 22ஆம் தேதியன்று இந்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.
இந்தத் தேர்தல் அறிக்கையை பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையிலான குழுவினர் தயாரித்தனர்.
இந்த தேர்தல் அறிக்கை வெளியான உடனேயே, பலரும் கவனித்த ஒரு அம்சம் தலைப்பில் இடம்பெற்றிருந்த எழுத்துருக்கள்.
தேர்தல் அறிக்கை புத்தகத்தின் தலைப்பிலும் உட்தலைப்புகளிலும் பழைய தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன      பெரியாரால் முன்மொழியப்பட்டு, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்த எழுத்துகள் பயன்படுத்தப்படாமல்,
பழைய பாணி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருந்ததை பலரும் கவனித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இந்த எழுத்துருக்களை பா.ஜ.க பயன்படுத்தியிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
தவிர, இதனைத் தேர்தல் அறிக்கை எனக் குறிப்பிடாமல் "தொலைநோக்குப் பத்திரம்" என்றும் பா.ஜ.க. குறிப்பிட்டது.
இந்த தொலைநோக்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல திட்டங்கள், அக்கட்சியின் நீண்ட காலத் திட்டங்களை, கொள்கைகளைப் பிரதிபலிப்பதாக இருந்தன.

ஸ்டாலின் கைகளில் 'முழு பவர்'.. 'பதறிய' டெல்லி.. 'அவசர' மீட்டிங்.. ரெடியாகும் 'பகீர்' ரிப்போர்ட்

அதிருப்தி

 

dmkAnbarasan Gnanamani -  /tamil.oneindia.com  :  சென்னை: சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளதால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அடுத்தடுத்து செயல்படுத்துவதற்கான பக்கா ரிப்போர்ட் தயாராகி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக, எதிர்வரும் தேர்தலின் முடிவு என்னவாகப் போகிறது என்ற கலக்கத்தில் உள்ளது.
அக்கட்சியின் சீனியர் தலைகளுக்கு, முடிவு முன்னரே தெரியும் என்றாலும், ஒவ்வொரு தொகுதியின் உண்மையான கள நிலவரம் தெரியும் என்றாலும், 'முடிந்த வரை முயற்சி செய்' ஃபார்முலாவில் கவனமாக உள்ளனர்.
ஏனெனில், எந்த தருணத்திலும் தொண்டர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

மெஜாரிட்டி ஆதரவு இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து சமீபத்தில் வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷ்னல் மீடியா முதல் உள்ளூர் மீடியாக்கள் வரை அனைத்து கருத்துக்கணிப்புகளும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே அதிகாரத்தை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான வெற்றி வித்தியாசமும் அதிகமாக இருப்பதால் 'மெஜாரிட்டி' அரசு என்ற அந்தஸ்தோடு திமுக ஆட்சியமைக்கும் என்று கூறப்படுகிறது.

“ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்"- மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்"- மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கலைஞர்செய்தி : "ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்புச் செய்திருப்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய பா.ஜ.க அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.                     ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது   இந்திய அரசு.

பாஜக ஷாக்! அண்மைக் காலமாக ஸ்டாலினின் பிரச்சாரத்தை கவனித்தீர்களா.. அவர் டார்க்கெட்டே வேறு..!

  Velmurugan P - tamil.oneindia.com :   சென்னை: தமிழகத்தில் எந்த தொகுதியிலும் பாஜக வெற்றி பெறப்போவது இல்லை.
ஒருவேளை தமிழகத்தில் எந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றாலும் அது பாஜக வெற்றிபெற்றதாக அர்த்தம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் இப்படி பேசியது ராயபுரத்தில்.. எல்லா இடங்களிலும் அதிமுகவை விடவும் பாஜகவை டார்க்கெட் செய்த ஸ்டாலின் பேசி வருகிறார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுகவைவும், அமைச்சர்களையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மேடைக்கு மேடை கடுமையாக விமர்சித்து வருவது தொடர்கதையான ஒன்று தான்.
ஆனால் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுகவைவிடவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
பாஜக எங்குமே வெற்றி பெறாது என்று உறுதியாக நம்பும் ஸ்டாலின், அதிமுகவை வெற்றி பெற வைத்தால் பாஜக வெற்றி பெற்றதாகவே அர்த்தம் என்று பேசி வருகிறார்

ஸ்டாலின் தாக்கு அதிமுகவை பாஜகதான் மறைமுகமாக இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் ஸ்டாலின், நீட் தேர்வு தொடங்கி, சிஏஏ வரை அதிமுகவின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது, பாஜகவை டார்க்கெட் செய்துதான் பேசி வருகிறார்.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுக்குள் சரமாரி துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழப்பு

 தினமலர் :அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ம நபர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
வாஷிங்டன்,    அமெரிக்காவில் போலீசாரை குறிவைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனாலும் அரசு தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் உள்ள 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.‌

‘கள்’ குறித்து ஏன் கள்ளமெளனம் சாதிக்கின்றன கட்சிகள்?

காட்சன் சாமுவேல் - aramonline.in : டாஸ்மாக் மதுவை எதிர்த்துப் போராடி மக்கள் சோர்வடைந்துவிட்டனர். அந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏதேனும் வாக்குறுதி கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. டாஸ்மாக் மதுவில் ஆல்ஹாகால் 42% உள்ளது. அதில் பத்தில் ஒரு பங்கு தான் கள்ளில் உள்ளது. ஆகவே, டாஸ்மாக்கிற்கு மாற்றாக பனங் கள்ளை பயன்படுத்த அரசியல் கட்சிகள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை எந்த அளவுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்தது என்பதை இந்த கட்டுரையில் அலசுவோம்.

செவ்வாய், 23 மார்ச், 2021

அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் மாரடைப்பால் மரணம்

தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க. எம்.பி முகமது ஜான்  மாரடைப்பால் மரணம்
dailythanthi : சென்னை அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி முகமது ஜான்.2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றதேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது.

வாய்ப்பு இல்லாமல் பிச்சை எடுத்து, ஆட்டோவில் பிணமாகக் கிடந்த நடிகர்

tamil.samayam.com : ஆட்டோவில் இறந்து கிடந்த காதல் படம் புகழ் பாபு

 பட வாய்ப்பு இல்லாமல் பிச்சை எடுத்து வந்தார் இவர்  பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்டோர் நடித்த காதல் படம் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் சந்தியா மட்டும் பிரபலமாகவில்லை பல்லு பாபுவும் பிரபலமானார். காதல் படத்தில் விருச்சககாந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த விருச்சககாந்த் என்கிற பெயர் பட்டிதொட்டி எல்லாம் ரீச்சானது. காதல் படத்திற்கு பிறகு பாபுவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் போக, செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தெருத் தெருவாக பிச்சை எடுத்து சாப்பிட்டிருக்கிறார் பாபு. அவரின் பரிதாப நிலை குறித்து அறிந்த நடிகர்கள் சாய் தீனா, அபி சரவணன் உதவி செய்துள்ளனர்.

நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு - கமல்ஹாசன் பேச்சு

நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு - கமல்ஹாசன் பேச்சு
நக்கீரன் : தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது.
சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.          இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! - புறக்கணித்த இந்தியா!

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

நக்கீரன் செய்திப்பிரிவு  : இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.
அவ்வாக்கெடுப்பில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வங்கதேசம், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
இருப்பினும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
அதேநேரத்தில் இந்தியா, இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை உடனே அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தலை உடனே நடத்தவும் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவுடன் சேர்த்து இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜெயிக்கப் போவது யாரு? இதுதான் திமுக, அதிமுகவின் ‘அரித்மேட்டிக்’ கணக்கு!

ஜெயிக்கப் போவது யாரு? இதுதான் திமுக, அதிமுகவின் ‘அரித்மேட்டிக்’ கணக்கு!

minnambalam : நாட்கள் நெருங்க நெருங்க தமிழகத்தில் தேர்தல் பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கத்தில் கொரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்து விடுவார்களோ என்ற அச்சம் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றி எந்தக் கவலையுமின்றி, தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்து தலைவர்களின் பேச்சைக் கேட்பதைப் பார்க்க முடிகிறது.

யாராவது இரண்டு பேர் ஒன்று கூடினாலே ‘அடுத்து யாரு ஆட்சிங்க வரும்’ என்ற கேள்வியோடுதான் பேச்சைத் துவக்குகிறார்கள். இந்த விவாதம், மக்களுக்குள் மட்டுமில்லை; கட்சிகளை வழி நடத்தும் தலைவர்களுக்குள்ளும் நடந்து கொண்டேயிருக்கிறது. கள நிலவரத்தை அறிந்தே அவர்கள் அடுத்தடுத்த தேர்தல் வியூகங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மலாய் மொழி அகராதியில் இந்தியர்களை அவமதிக்கும் சொற்கள் - மலேசியாவில் சர்ச்சை

மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் தமிழர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். (கோப்புப்படம்)

சதீஷ் பார்த்திபன் - பிபிசி தமிழுக்காக : மலேசியாவிலிருந்து</மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் தமிழர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். 

மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் தமிழர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வரும் மலாய் மொழிக் காப்பகம் (டேவான் பகாசா டான் புஸ்தாகா) வெளியிட்டிருக்கும் ஆன்லைன் அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ள 'கெலிங்' என்ற சொல் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.       
இந்த சொல் தங்களை அவமானப்படுத்தும் நோக்குடன் பயன்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய இந்தியர்கள் கூறுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு சொல்லை அரசு கட்டுப்பாட்டில் உள்ள மலாய் மொழிக் காப்பகம் பயன்படுத்தி இருப்பதை ஏற்க இயலாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பின், இந்தச் சொற்கள் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது மலாய் மொழிக் காப்பகம்.

நக்கீரன் கருத்து கணிப்பு பாஜகவுக்கு 20 சீட்" ஜாஸ்தி.. அதிமுகவுக்கு ஆபத்து.. பாஜகவால் வீழ்ச்சி..

Black வடிவு (@uthira_) | Twitter

Hemavandhana - /tamil.oneindia.com சென்னை: ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்ட பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நக்கீரன் ஒரு சர்வே எடுத்து முடிவை வெளியிட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் நக்கீரன் எடுக்கும் சர்வேக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்..
காரணம், அவற்றில் கூறப்படுவது பெரும்பாலும் நடக்கும் என்பதால்தான்.. அந்த வகையில் தற்போதும் ஒரு சர்வே முடிவை எடுத்து வெளியிட்டுள்ளது
நக்கீரன். இதுதொடர்பாக நக்கீரன் கூறியுள்ளதாவது: "இம்முறை அதிமுக தொண்டர்களை மையப்படுத்தி தமிழகம் தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
பொதுமக்களின் கருத்துகளையும் புறக்கணிக்கவில்லை. இந்த சர்வேயின்போது டெல்டா மாவட்டத்தில் கோப அனல் வீசியது.
வெறுப்பு "நான் அதிமுகவின் ஆதரவாளன். ஆனாலும் எனக்கு ஜெயலலிதா மீது சில வெறுப்புகள் உண்டு. அதே நேரத்தில் அவரது சமுதாயத்தினரை ஆடாமல் அடக்கி வைத்திருந்தார். ஆனால் இன்று சங்கரமடத்தின் கூடாரம் முதல் குடுமி வரை ஆடுகிறது. அதற்கு வழிவிட்டுவிட்டார் எடப்பாடி'' என கொக்கரிக்கிறார்கள் மடாலயங்களுக்கும் கோவில்களுக்கும் பெயர்பெற்ற கும்பகோணம் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

சீமானின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி! ஆண்டு வருவாய் கணக்கில் குளறுபடி

சீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு

tamil.samayam.comசீமானின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ள அரசியல் கட்சிகள், வேட்பாளார்கள் பட்டியலையும் அறிவித்துள்ளன.
இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான பரிசீலனையை முடித்த தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வேட்புமனுவை சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்பு மனுவில், சீமான் தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் சினிமா பெற்ற தேசிய விருதுகள் பட்டியல்! மொத்தம் 7 விருதுகள் யார் யாருக்கு ?

 Kalaimathi  - tamil.filmibeat.com :  சென்னை: சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் எனதேசிய விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது தமிழ் சினிமா. 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட வேண்டிய இந்த விருதுகள் கொரோனா லாக்டவுன் காரணமாக ஓராண்டு தாமதத்திற்கு பிறகு இன்று அறிவிக்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியான போதும், குறிப்பிடத்தக்க சில படங்கள் மக்களின் கவனத்தை பெற்றது.
அசுரன் படத்திற்கு.. இந்நிலையில் அவற்றில் சிறந்த படைப்புகளை மத்திய அரசு தனது உயரிய விருதான தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
அதன்படி சிற்நத தமிழ் படத்திற்கான தேசிய விருதை வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகர் சிறந்த நடிகருக்கான விருதுக்கு அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசை மட்டுமல்ல போராளிகள் தரப்பு உட்பட சகல தரப்பையும் விசாரணை.. யாழ் சிவில் சமூகம்

 annachinews.com : இலங்கை அரசை மட்டுமல்ல போராளிகள் தரப்பு உட்பட சகல தரப்பையும் விசாரணை செய்” யாழில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!!
யாழ் சிவில் சமூக நிலையத்தினால் நல்லூரில் நேற்று ஆரம்பமான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.
இன்றைய தினம் தமது போராட்டம் அமைதியான முறையில் இடம்பெறுவதாக யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவரான அருண் சித்தார்த் கூறுகிறார்.
நீதியான முறையில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும்.  சர்வதேச ரீதியில் குற்ற விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்னிறுத்தி யாழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிப்பு போராட்டம் நடைப்பெறுகிறது.

திங்கள், 22 மார்ச், 2021

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு ! அது ஒரு coding மட்டுமே

 செல்லபுரம் வள்ளியம்மா :  சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .
அப்படி பேசப்படவில்லையென்றால்... “First, solve the problem. Then, write the code.. அது ‘குறியீடு' எனப்படும் . எந்த இயல்பான மொழியும் பேச்சில் முதலில் தொடங்கி பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .
சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும் பேசப்பட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை .
இந்தியாவின் தற்போதைய பிராமணர் ஜனத்தொகை சுமார் 5%என்று சொல்லப்படுகிறது.
இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம் ..
இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால், அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கவேண்டும் .
அப்படியென்றால் , ஏன் தற்போது ஒரு 10 லட்சம் மக்கள் கூட சமஸ்கிருதம் பேசுவதில்லை? . sanskrit-myth-and-truth

சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பால் உயிரிழப்பு

news18.com :விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் வெங்கடேஷ். அதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்திருக்கும் வெங்கடேஷ், சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு தொடரிலும் நடித்திருந்தார்.
கிராமத்து கதை பின்னணியில் ஒளிபரப்பான பெரும்பாலான சீரியல்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி சார்பாகவும் உயிரிழந்த வெங்கடேஷூக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.