Vivekanadan T : தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில் ஜாமர் கருவி பொருத்தவேண்டும் , வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியும் என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு திமுகவின் கலாநிதி வீராசாமி கடிதமும் கோரிக்கையும் நேற்று விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று கேள்விகளுடன் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
1.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
2.தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுமா?
3.தேர்தலுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் ஜாமர் கருவிகள் பொறுத்தப்படுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக