சனி, 27 மார்ச், 2021

மனைவியின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை

மனைவியின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை

தினத்தந்தி : டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர்  வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு தனது குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கான தனது மனைவியின் முடிவை ஆதரித்ததற்காக வருண்  மாமியார் மீது வெறுப்படைந்தார்.  
இந்த நிலையில் தாலியம் என்ற வேதிப்பொருளைக் கலந்து தனது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு  கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  
இதானால்  கடந்த ஆண்டு இறந்த தனது தந்தை தனது குழந்தையாக மறுபிறவி எடுப்பார் என்று அவர் நம்பினார்.
வயதான வருண்  மாமியார் அனிதா தேவி சர்மா( 62) மற்றும் அவரது இளைய மகள் பிரியங்கா (27) ஆகியோர் இரண்டு மாத காலப்பகுதியில் மருத்துவமனையில் இறந்தனர்,
அதே நேரத்தில் அவரது மனைவி திவ்யா, 35, கோமாவில் உள்ளார்.போலீசார் விசாரணையில் அரோராவின் மாமியார் உடம்பில் தாலியம் என்ற ரசாயனத்தின் தடயங்கள் இருந்ததாகவும், மனைவியின் சகோதரியும் இதன் காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இறந்தவர்கள் மட்டுமின்றி, அவரது மனைவி, மனைவியின் தந்தை மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஆகிய அனைவரின் உடலிலும் நச்சுத்தன்மையின் தடயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அரோராவிடம் கேட்டபோது, மனைவியின் குடும்பத்தினர் தன்னை அவமதித்ததால் அவர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார். இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவருடைய வீட்டை ஆய்வு செய்தபோது, தாலியம் கண்டெடுக்கப்பட்டதாகவும், மொபைலிலும் தாலியம் வாங்கியதற்கான தகவல் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் கூறும் போது  திவ்யா விவரிக்கப்படாத நரம்பியல் அறிகுறிகளுடன் வந்தார், தற்போது வென்டிலேட்டர் உதவியுடன்  ஐசியுவில் இருக்கிறார்.

வருண் மனைவியின் தாயும் அவரது சகோதரியும் அறியப்படாத நோய் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு  இறந்தனர். இது விஷம் என்ற சந்தேகத்திற்கு வழிவகுத்தது,

எங்கள் சோதனைகளில் அதிக அளவு தாலியம் இருப்பது தெரியவந்தது. நாங்கள் போலீசாருய்க்கு மேலும் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தேசிய பெண்கள் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்லோம் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக