வியாழன், 25 மார்ச், 2021

தமிழ்நாடு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? கலைஞர் சாதித்தது என்னவென்று தெரியுமா?

May be an image of one or more people and people standing



Sharmila Rajasekar : :எங்கயும் கரண்ட் கிடையாது. சிம்னி விளக்கு தான்.. எந்த ஊருக்கும் சாலை வசதி கிடையாது.. நடை தான்.. கவுரவமான வேலை வாய்ப்பெல்லாம் கிடையாது.. அங்கங்க பெரிய பெரிய நிலசுவான்தார்கள் ஜமீன்தார்கள்தான்… பெருவாரியான மக்கள் அவங்க கிட்ட அடிமைகளா இருக்கணும்.. அவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு வேள சோத்துக்கு நாள் பூரா குடும்பமே வேலை செய்யணும்.. தண்ணீர் வசதி கிடையாது. பல மைல் தூரம் குடத்த தூக்கிட்டு நடந்து போகணும்.. பெண்களுக்கான எந்த உரிமையும் கிடையாது.. போகப்பொருளாக மட்டுமே இருக்கணும்.. படிப்பறிவு கிடையாது.. வேட்டை நாய்கள் போல தனக்கு கீழே இருந்த மக்களை பாடாய்படுத்தி வச்சாங்க. அதுவும் மதுரை இராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளெல்லாம் படிப்பறிவென்பது மருந்துக்கும் கிடையாது.. காட்டு மிராண்டிகள் வாழ்க்கை… பற்றி எரிந்து கொண்டே இருந்த நிலப்பரப்பு…காமராஜர் காலத்தில் கூட பள்ளிகள் துவங்கப்பட முடியாத மக்களை கொண்ட பகுதி…     மக்கள் கும்பல் கும்பலாக வட இந்தியா நோக்கி பிழைப்புக்கான போன காலம்..அப்போதெல்லாம் மதராஸி என்ற அடைமொழி.. மதராஸின்னாலே திருடன் பொய் பேசறவன்.. எவனும் மதிக்க மாட்டான். தமிழ் பேச பயப்படணும்…

இது தான் தலைவர் கலைஞர் ஆட்சி ஏற்ற போது அவர் கையில் தரப்பட்ட தமிழ் நாடு..!
. தலைவர் கலைஞர் பதவிக்கு வந்த பிறகு 1972 க்குள் தமிழ்நாடு அப்படியே தலைகீழாக திருப்பி போடப்பட்டது..May be an image of text that says 'KINEMASTER KINE E INDIAN KATHIPARA FLYOVER'

நுகர்பொருள் வாணிப கழகம் அமைக்கப்பட்டு மக்கள் பசி போக்கப்பட்டது.. சோத்துக்கு பஞ்சம் இல்லா நிலை ஏற்படுத்தப்பட்டது..

தமிழக கிராமப்புறங்கள் அத்தனையும் சாலை வசதி கொண்டு வரப்பட்டது. நெடுந்தொலைவு கிராமங்களுக்கும் மின்சாரம் தரப்பட்டது.. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தரப்பட்டது..

நிலசுவான்தார் முறை ஒழிக்கப்பட்டது. அடிமைமுறையின் மக்கள் மீட்டெடுக்கப்பட்டனர். பெண் கல்வி ஊக்கப்படுத்தப்பட்டது.. ‘தமிழக பாடநூல் கழகம்’ அமைக்கப்பட்டு இலவச புத்தகங்கள் வழக்கப்பட்டது..
இத்தனையையும் அத்தனை எளிமையாய் கொண்டு வந்திட முடியாது..

அதன் இன்றைய வெர்ஷன் தான் நிலசுவாந்தார் முறை ஒழிக்கப்பட்டது… (நிலத்த புடுங்கிட்டாங்க..)
சாதி அடக்குமுறை ஒடுக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் கல்வி கொடுக்கப்பட்டு மனிதர்களாய் மாற்றப்பட்டது … ( இவனுங்க வந்தா அடாவடியாக இருக்கும்)

May be an image of skyscraper, sky and text

புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது.. (இட ஒதுக்கீடு குடுத்து நாசமாக்கிட்டாங்க)

இன்று தமிழகம் கெளரவமான இடத்தில இருப்பதும் அனைவருக்கும் உள்ள இத்தனை வசதிகளுக்கும் காரணம் “#தலைவர்கலைஞர் என்ற ஒற்றை மனிதனும் திமுக இயக்கத்தினாலேயும் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக