புதன், 24 மார்ச், 2021

ஸ்டாலின் கைகளில் 'முழு பவர்'.. 'பதறிய' டெல்லி.. 'அவசர' மீட்டிங்.. ரெடியாகும் 'பகீர்' ரிப்போர்ட்

அதிருப்தி

 

dmkAnbarasan Gnanamani -  /tamil.oneindia.com  :  சென்னை: சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளதால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அடுத்தடுத்து செயல்படுத்துவதற்கான பக்கா ரிப்போர்ட் தயாராகி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக, எதிர்வரும் தேர்தலின் முடிவு என்னவாகப் போகிறது என்ற கலக்கத்தில் உள்ளது.
அக்கட்சியின் சீனியர் தலைகளுக்கு, முடிவு முன்னரே தெரியும் என்றாலும், ஒவ்வொரு தொகுதியின் உண்மையான கள நிலவரம் தெரியும் என்றாலும், 'முடிந்த வரை முயற்சி செய்' ஃபார்முலாவில் கவனமாக உள்ளனர்.
ஏனெனில், எந்த தருணத்திலும் தொண்டர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

மெஜாரிட்டி ஆதரவு இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து சமீபத்தில் வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷ்னல் மீடியா முதல் உள்ளூர் மீடியாக்கள் வரை அனைத்து கருத்துக்கணிப்புகளும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே அதிகாரத்தை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான வெற்றி வித்தியாசமும் அதிகமாக இருப்பதால் 'மெஜாரிட்டி' அரசு என்ற அந்தஸ்தோடு திமுக ஆட்சியமைக்கும் என்று கூறப்படுகிறது.

அதிருப்தி அதேசமயம், தமிழகத்தில் திமுக ஆட்சியமைப்பதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதையே டாப் மோஸ்ட் டார்கெட்டாக கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ள பாஜக, இந்த கருத்துக்கணிப்புகளை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும், திமுக - அதிமுக இடையே உள்ள வெற்றி வித்தியாசம் டெல்லி தரப்பை ரொம்பவே அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாம்.

ஸ்டாலின் கைகளில் அதிகாரம் இது தொடர்பான அனைத்து ஆவணங்களோடு, அடுத்து என்ன செய்யலாம் என்ற கான்செப்ட்டில் சமீபத்தில் ஒரு அவசர மீட்டிங் நடைபெற, இதில் முக்கிய தலைகள் அனைவரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதில், மு.க.ஸ்டாலின் கைக்கு பவர் சென்றுவிட்டால், அதுவும் பெரும்பான்மை பலத்தோடு சென்றுவிட்டால், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காக செலவு செய்த பணம், உழைப்பு, வியூகம் என அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாம்

புதுச்சேரி வியூகம் குறிப்பாக, திமுக பவருக்கு வருவதில் பிரச்சனையில்லை..
ஆனால், மக்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியாக வந்தால், 'மிஷன் தமிழ்நாடு' எந்த விஷனும் இல்லாமல் காணாமல் போய்விடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கவனித்த தலைமை, 'புதுச்சேரி' வியூகத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது பற்றிய ரிப்போர்ட்டை ரெடி செய்ய உத்தரவிட்டுள்ளதாம்

எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வராக பதவி வகித்த நாராயணசாமிக்கு 'கிரண் பேடி' ரூபத்தில் வந்து போட்டுத் தாக்கியது பாஜக. அவரை ஆளுனராக நியமித்து, நாராயணசாமிக்கு பாதி நேரம் கிரண் பேடி பஞ்சாயத்தை கவனிப்பதையே முழு நேர வேலையாக மாற்றியது. இறுதியில், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததை வரலாறு அறியும். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், 'பாஜக இதுபோன்ற வேலைகளை நிச்சயம் செய்யும். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் செயல்களிலும் ஈடுபடும். நாங்கள் அனைத்துக்கும் தயாராகவே உள்ளோம்' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக