நக்கீரன் :நடிகை ஷகிலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஷகிலா தற்போது சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் 'சமையல் நிகழ்ச்சி'யில் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஷகிலா தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநிலப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, அத்துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக