வியாழன், 25 மார்ச், 2021

திருமா எடுத்த முடிவு ! . தூது விட்டும் கேட்காத திருமாறன்

விசிகவின் மண்டல அமைப்புச் செயலாளர் சு.திருமாறன் நீக்கம் - திருமாவளவன்  அறிவிப்பு | VCK - YouTube

Shyamsundar -  /tamil.oneindia.com :சென்னை: விசிக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் "மெசேஜ்" அனுப்பும் வகையில் அதன் தலைவர் எம்பி டாக்டர் திருமாவளவன் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக மொத்தம் 6 இடங்களில் போட்டியிடுகிறது. பானை சின்னத்தில் விசிக இந்த தேர்தலை சந்திக்கிறது. முதலில் திமுக கூட்டணியில் 6 இடங்களை மட்டும் பெறுவதில் விசிகவிற்கு விருப்பம் இல்லை. 6 இடங்கள் மிகவும் குறைவு என்று விசிக விவாதம் செய்தது.
தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் விசிகவை சமாதானப்படுத்தி திமுக ஒருவழியாக சம்மதிக்க வைத்தது.
ஆனால் என்ன ஆனால் விசிக நிர்வாகிகள் பலர் வெறும் 6 இடங்கள் மட்டும் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை. அதிக இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் திமுக குறைவாக கொடுத்துவிட்டது. இதனால் தேர்தலில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று உள்ளூர் நிர்வாகிகள் புலம்ப தொடங்கிவிட்டனர்.


புலம்பல் விசிக இப்படி இறங்கி சென்றதை மூத்த நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் குறைவான தொகுதி பங்கீடு காரணமாக வாய்ப்பை இழந்த விசிக கட்சியின் அமைப்பு செயலாளர் திருமாறன் திட்டக்குடி தொகுதியில் சுயட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணிக்கு எதிராகவே இவர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

வெற்றி வாய்ப்பு எனக்கு இங்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தொகுதியை விசிகவிற்கு திமுக ஒதுக்கவில்லை. அதனால் இங்கு சுயேட்சையாக போட்டியிடுகிறேன்... நான் கண்டிப்பாக இங்கு வெற்றிபெறுவேன் என்று திருமாறன் குறிப்பிட்டு இருந்தார் . இவரை சமாதானப்படுத்த நிறைய முயற்சிகள் நடந்தது. பல மூத்த நிர்வாகிகள் இவரிடம் பேசி பார்த்தனர்.

உறுதி ஆனால் இவர் வேட்புமனுவை வாபஸ் வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருந்துவிட்டார்.இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்ற திருமாவளவன்.. திருமாறனை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார். கட்சி முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி இவரை நீக்கி உள்ளார். இவருடன் யாரும் தொடர்பு வைக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

வார்னிங் இதோடு கட்சியின் முடிவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 6 இடத்தில்தான் போட்டியிட முடியும். அனைத்திலும் வெற்றிபெறுவோம். மற்ற விஷயங்களை பின்பு பார்க்கலாம். தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுங்கள் என்று திருமா அறிவுரை வழங்கி உள்ளாராம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக