வெள்ளி, 26 மார்ச், 2021

உலகின் 12 வீத கப்பல் போக்குவரத்து சூயஸ் கால்வாய் முடங்கியது .. எவர் கிரீன் கப்பல்..குறுக்கே தரை தட்டியது ..பணியாளர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள்!

 Velmurugan P - /tamil.oneindia.com :  நைரோபி: சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை(Ever green) ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எவர் கிரீன் கப்பல் சிக்கியிருப்பதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் சுயஸ் கால்வாயில் அணிவகுத்து நிற்கின்றன.
சூயஸ் கால்வாய முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், உலகின் பொருளாதாரத்தையே புரட்டி போடும் அளவுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
ஏனெனில் இந்த வழியாகத்தான் உலகின் 12 சதவீதம் வணிகம் நடைபெறுகிறது.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் எகிப்தில் இருக்கிறது.


உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையான இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது.
முக்கியமான கால்வாய் முக்கியமான கால்வாய் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடிய இந்த சூயஸ் கால்வாய் தான் இந்த கால்வாய் மட்டும் இல்லை என்றால் ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதனால் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் ஆசியாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு கப்பல்கள் பயணிக்கின்றன.
ஒரு வருடத்திற்கு 15000 கப்பல்கள் சூயஸ் கால்வாயில் பயணிக்கின்றன.
23ம் தேதி நடந்த சம்பவம் 23ம் தேதி நடந்த சம்பவம் சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரை நோக்கி எவர் கிரீன் என்ற பிரம்மாண்டமான கப்பல் புறப்பட்டு சென்றது.
இந்த கப்பல் சுமார் 400 மீட்டர் நீளத்துடன், 59 மீட்டர் அகலம் உடையது.
கப்பல் மலேசியா வழியாக வந்து 22-ம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது.
மார்ச் 23-ம் தேதி காலை 7.45 மணி அளவிலது சூயஸ் கால்வாயில் சென்ற போது அந்த விபரீதம் நடந்தது.
திடீரென ஆவேசத்துடன் எமனாக வந்த ஆவேச புயல் எவர் கிரீன் கப்பலை தள்ளாட வைத்தது. கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கால்வாயின் கால்வாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது. அதாவது கப்பலின் முன்பகுதி கரையின் ஒரு புறத்திலும், கப்பலின் பின் பகுதி கரையின் மறுபுறமும் தொட்டு சாலையின் நடுவே குறுக்காக நிற்கும் லாரியைபோல் கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது எவர் கிரீன்கப்பல்.

எவர் கிரீன் கப்பல் சிக்கி கொண்டதால் அந்த வழியாக இருபுறங்களிலும் 150க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் பயணிக்க முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன.
எவர் கிரீன் கப்பலை ஒட்டி வந்தவர்கள் இந்திய மாலுமிகள் என்பதும் கப்பலில் பயணித்த டீம் மொத்தமும் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கப்பலில் 25 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக, எவர் கிரீன் கப்பலை நிர்வகித்து வரும்பெர்ன்ஹார்ட் ஷுல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

சூயஸ் கால்வாய் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முக்கியமான கடல் இணைப்பாக உள்ளது. இந்த. கால்வாயில் போக்குவரத்து விரைவில் சரியாகாவிட்டால், கப்பல்கள் ஆப்பிரிக்காவின் தெற்கே முனைக்கு சென்று பின்னர் ஐரோப்பாவுக்குச் செல்ல வேண்டும்.
ஏனெனில் வேறு மாற்றுவழி என்பத இல்லை. அப்படி சென்றால், மேலும் இரண்டு வாரங்கங்களுக்கு மேல் ஒவ்வொரு கப்பல்களும் தாமதமாக செல்லும் அபாயம் ஏற்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக