புதன், 24 மார்ச், 2021

ஸ்டாலின் ராகுல் காந்தி ஒரே மேடையில் 28 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பிரசாரம்

தலைவர் ஸ்டாலின் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோர் வரும் 28 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிகிறது 

நக்கீரன் :  தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக மாநில கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேவேளையில் அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சித் தலைவர்களையும் தமிழகத்திற்கு அழைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்திவருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே தமிழகம் வந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம், சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக