சனி, 27 மார்ச், 2021

பா.ம.கவை எதிர்த்து 23 தொகுதிகளில் பிரசாரம - காடுவெட்டி குரு மகள் அறிவிப்பு

dinasuvadu.com : அதிமுக கூட்டணியில் பாமக வரும் சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை, 23 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். தனது தந்தை இருக்கும்போது இதனை எல்லாத்தையும் பார்த்துக் கொண்டார். இந்தளவுக்கு நாங்கள் தற்போதுய் எறங்கி போகவேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

மேலும், தனது தந்தை காடுவெட்டி குரு மறைவுக்கு பின் எங்கள் குடும்பத்தை மிகவும்  கொடுமைப்படுத்தினார்கள். அப்போது என்ன நடந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை என கூறி, பாமக வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக