சனி, 27 மார்ச், 2021

பிரியங்கா காந்தி ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகம் வருகிறார்

m

 Shyamsundar - tamil.oneindia.com :  கன்னியாகுமரி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை கன்னியாகுமரி வருகிறார்.
இவருக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்று கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகம் வருகை தரும் பின்னனியில் முக்கிய காரணம் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலோடு சேர்த்து தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார். கொரோனா காலத்தில் மக்களுக்கு இவர் சேவை செய்து நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.
அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்.. மரணம் அடைந்தார்.


போட்டி இதனால் தற்போது கன்னியாகுமரி தொகுதிக்கு லோக்சபா இடைத்தேர்தல் வருகிறது.
இந்த தொகுதியில் பாஜக சார்பாக மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்படுகிறார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக விஜய் வசந்த் நிறுத்தப்பட்டுள்ளார்..
இவரின் தேர்வு கன்னியாகுமரி அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சட்டசபை தேர்தல் நடப்பதால் பெரிய அளவில் இந்த இடைத்தேர்தல் மீது திமுக கூட்டணி கவனம் செலுத்தவில்லை. திமுக கூட்டணி தலைவர்கள் யாரும் இங்கு பெரிதாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. விஜய் வசந்த் மட்டுமே இங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டசபை தேர்தல் முக்கியம் என்பதால் இதில் நிர்வாகிகள் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் பாஜகவோ இங்கு எப்படியாவது வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது. தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒரு பாஜக எம்பியை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக மீண்டும் பொன். ராதாகிருஷ்ணனை களமிறக்கி உள்ளது. இவர் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் பாஜக தேசிய தலைமை உறுதியாக இருக்கிறது. இதனால்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே இங்கு நேரடியாக வந்து பிரச்சாரங்களை மேற்கொண்டார்

ஆனால் விஜய் வசந்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தேசிய தலைவர்கள் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. கன்னியாகுமரி காங்கிரசில் நிறைய உட்கட்சி பூசல்களும் உள்ளன. இதை எல்லாம் சரிகட்டும் வகையிலும், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையிலும் நாளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி லோக்சபா வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

குமரியில் நிலவும் கோஷ்டி மோதலை சரி செய்து , கடைசி 10 நாட்கள் நன்றாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரியங்கா காந்திக்கு மேலிடம் கொடுத்து இருக்கும் அசைன்மென்ட் என்கிறார்கள். மறைந்த எம்பி வசந்த் காங்கிரசில் அதிகம் மதிக்கப்பட்ட தலைவர். சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் விருப்பமான தலைவராகவும் இருந்தார்.

இந்த நிலையில் அவரின் மகன் விஜயின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது . முக்கியமாக பொன்னாரை வெற்றிபெற விட கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதனால் குமரி கோஷ்டி மோதல்களை சரி செய்யும் வகையிலும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் பிரியங்கா காந்தி நாளை தமிழகம் வருகிறார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக