வெள்ளி, 26 மார்ச், 2021

நாம் தமிழர் கட்சியின் விஷ அரசியலுக்கு செருப்படி ..கருஞ்சட்டைபடையின் காணொளி

 LR Jagadheesan  : ஈழத்தமிழ் தேசியர்களுக்கு, குறிப்பாக இப்படிப்பட்ட நபர்களுக்கெல்லாம் சொந்தக்காசுகொடுத்து கொழுக்கவைத்த வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்.
ஈழத்தமிழர்களுக்கு 90% தமிழ்நாட்டுத்தமிழர்கள் யாரும் எந்த கெடுதலும் செய்ததில்லை. இன்றுவரை ஈழத்தமிழர்கள் மீது இரக்கத்தோடும் அன்போடும் நட்போடுமே இருக்கிறார்கள். ராஜீவ் கொலையால் எழுந்த கோபத்தையும் தாண்டி 90% தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு இன்னமும் ஈழத்தமிழர்கள் மீது ஆதூரமே மிஞ்சி நிற்கிறது.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நிதியை கோடி கோடியாய் கொட்டி அழுதார்கள்? அவர்களால் தமிழ்நாட்டு அரசியல் அடைந்திருக்கும் தீமையின் ஆழ அகலங்கள் என்ன? அதன் பாரதூர பாதிப்புகள் என்ன? என்பதற்கு இந்த காணொளி இன்றைய உதாரணம்.
வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டின் வழியாக; தமிழ்நாட்டுத்தமிழர்களின் உதவியோடு வெளிநாட்டில் குடியேறியவர்கள். அப்படி உங்களுக்கு உற்ற காலத்தில் உதவிய தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கும் அவர்களின் அரசியலுக்கும் நீங்கள் செய்த கைம்மாறு என்ன என்பதை இந்த காணொளி உங்களுக்கு உணர்த்தும். அறிவுநாணயமும் அற உணர்வும் மனிதாபிமானமும் குறைந்தபட்ச நாகரீகமும் உங்களுக்குள் இன்னும் உயிர்பெற்றிருந்தால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக