சனி, 27 மார்ச், 2021

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குபதிவு- மாலை 5.30 மணி நிலவரம்

அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குபதிவு- மாலை 5.30 மணி நிலவரம்

maalaimalar : வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள்.
கொல்கத்தா
அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 மேற்கு வங்க மாநிலத்தில் முதல் 3 மணிநேரத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இன்று காலை 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 24.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அசாமில் 24.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியானது.


அதனை தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 40.73 சதவீத வாக்குகளும், அசாமில் 37.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி முறையே 47.10% மற்றும் 55.27% வாக்குகள் பதிவாகி உள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

மாலை 5:30 மணி வரை, மேற்கு வங்காளத்தில் 79.79 சதவீத வாக்குகளும், அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் 72.16 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கிழக்கு மிட்னாபூர் - 70.38 சதவீதம்
மேற்கு மிட்னாபூர் - 68.76 சதவீதம்
ஜர்கிராம் - 72.10 சதவீதம்
புருலியா - 69.24 சதவீதம்
பாங்குரா - 68.03 சதவீதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக