சனி, 27 மார்ச், 2021

ஆ.ராசாவை நோக்கி எதிர்காலத்திலும் கூட சதியம்புகள் ஏவப்படலாம்.

திமுக இந்து விரோத கட்சியல்ல. யார் 'இந்து' என்பதில்தான் பிரச்சனை” -ஆ.ராசா  சிறப்பு பேட்டி | The DMK is not an anti Hindu party. The problem is who is  a 'Hindu' A.Rasa Special ...

செல்லபுரம் வள்ளியம்மை : ஆ.ராசாவை ஊடகங்களும் பார்பனீயமும் மீண்டும் மீண்டும் குறிவைத்து தாக்குவதை கவனித்தீர்களா?
ஆரியத்தின் குறி தப்பிய திராவிட இலக்குதான் ஆ.ராசா  .
ஆ.ராசாவை பார்க்கும் பொழுதெல்லாம் தங்களின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகி போனதே ஏக்கம்  அவர்களிடம்.    
ஆ.ராசாவின் மீது அவர்கள் வைத்த குறி திராவிடத்தின் மீது வைத்த குறி
ஆ.ராசா தோற்றால் திராவிடம் தோற்றதாக வரலாற்றில் எழுதப்படும் என்று காத்திருந்தவர்கள் முகத்தில் செருப்பால் அடித்து துரதியவர் ஆ.ராசா
இந்திய வரலாற்றிலேயே ஆ ராசா மீது சுமத்தப்பட்ட சதி அளவுக்கு கனபரிமாணம் கொண்ட சதி வேறு எவர் மீதும் சுமத்தப்பட்டதாக எனக்கு தெரியவில்லை.
ஆ ராசாவின் திராவிட பாரம்பரியம்தான் அதற்கு முக்கிய காரணம் என்று நான் நம்புகிறேன்
ஆ ராசாவின் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும் இந்நேரம் மனமொடிந்து போயிருப்பார்கள் .   என்னென்ன விபரீத முடிவுகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
ஆ.ராசா 2 ஜி சதீயில் இருந்து வெறுமனே தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ளவில்லை


அவர் காப்பாற்றியது திராவிடம் .  திராவிடம் அவரை காப்பாற்றியது.
ஆ.ராசா மீது இப்போது எறியப்படும் அம்புகளையும் கூட இந்த பாரம்பரியத்தில் இருந்துதான் நோக்க வேண்டி உள்ளது
ஆ.ராசாவை நோக்கி எதிர்காலத்திலும் கூட சதியம்புகள் ஏவப்படலாம்.
அப்போதும் நாம் தயாராகவே இருக்கவேண்டும் ..
தேவை ஏற்படின் அதற்காக ஒரு preemptive தாக்குதல்களை கூட மேற்கொள்ளலாம் தவறில்லை    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக