tamil.abplive.com - க.சே.ரமணி பிரபா தேவி | : Wikipedia | விக்கிப்பீடியாவின் என்சைக்ளோபீடியா... மகத்தான சாதனை படைத்த தமிழர் மூர்த்தி
இணையத்தில் தொடர்ந்து வாசிப்பவரா நீங்கள்? உங்களுக்கு மூர்த்தியைத் தெரியாது. ஆனால் அவரது எழுத்துகளை வாசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள்.
இணையத்தில் தொடர்ந்து வாசிப்பவரா நீங்கள்? உங்களுக்கு மூர்த்தியைத் தெரியாது. ஆனால் அவரது எழுத்துகளை வாசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். விக்கிபீடியாவில் இருக்கும் அறிவியல் தமிழ் கட்டுரைகளில் பெரும்பான்மையானவை இவரது பங்களிப்புதான்.
இணையத்தில் இருக்கும் மிக முக்கியமான தகவல் கலைக் களஞ்சியம் விக்கிப்பீடியா. உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விக்கிப்பீடியா தமிழில் தற்போதுவரை 1.43 லட்சம் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
வெள்ளி, 31 டிசம்பர், 2021
விக்கிப்பீடியாவின் என்சைக்ளோபீடியா... சாதனை தமிழர் மூர்த்தி
மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் தர்ஷிகா தணிகாசலம் சாதனை
BBC - யூ.எல். மப்றூக் - பிபிசி தமிழுக்காக : கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே இந்த வியப்பு மிகுந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் முதன்நிலைப் பல்கலைக்கழகம் என தரப்படுத்தப்பட்டுள்ள, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர் தர்ஷிகா.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இம்மாதம் நடைபெற்றபோது, தனது பட்டத்துடன் 13 தங்கப் பதக்கங்களையும் தர்ஷிகா பெற்றுக் கொண்டார்.
உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்'.. வேகமாக ஓடிவந்து ஸ்டாலினிடம் கூறிய பெண்.. சென்னையில் ..
'' உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார். நீங்க செமையா பண்ணிட்டு இருக்கீங்க. இளைஞர்களுக்கு நீங்க பயங்கர மோட்டிவேஷனா இருக்கிறீங்க. மிக்க நன்றி சார்"
Rayar A - Oneindia Tamil : சென்னை மக்களை நேற்று கனமழை மீண்டும் பாடாய்படுத்தியது. கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம் என நகரின் முக்கியமான பகுதிகளிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டியது.
சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது.
சென்னை சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.
கூட்டணியால் காங்கிரசுக்கு ஒரு பயனும் இல்லை: கே.எஸ். அழகிரி
மின்னம்பலம் :காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்ற முழக்கத்தை நாங்கள் கைவிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் வங்கதேச விடுதலைப் பொன்விழாவும், அன்னை இந்திரா காந்தியும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டிசம்பர் 30 இரவு நாமக்கல்லில் நடந்தது.
இந்தக் கருத்தரங்கத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, “ நானும் தலைவர் அழகிரி அவர்களும் சென்னையிலிருந்து காரில் நாமக்கல் வரும்போது வழி நெடுக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தொழிற்கூடங்கள், பள்ளிச்சாலைகள், கல்லூரிகள், அணைக்கட்டு என்று காலத்தால் அழிக்க முடியாத அடையாள சின்னங்களை பார்த்துக்கொண்டே வந்தோம்.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை - மேலும் பல முக்கிய கட்டுப்பாடுகள் முதல்வர் அறிவிப்பு
மாலைமலர் :தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டப்பாடுகளை அதிகரிப்பது, இன்றுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால், 1ம் வகப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மழலையர் பள்ளிகள் செயல்படவும் அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்திய குடியுரிமை வேண்டாம்! வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..!
Prasanna Venkatesh - GoodReturns : இந்தியாவில் இருந்து கடந்த 5 வருடத்தில் சுமார் 6 லட்சம் பேர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.
அப்படிக் குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள இந்திய மக்களில் சுமார் 40 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தாக ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
வர்த்தகம், சிறப்பான வாழ்க்கைத் தரம், கல்வி, பிள்ளைகளின் எதிர்காலம், குறைவான வரி, கொண்டாட்டம் எனப் பல காரணத்திற்காக இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளுக்குக் குடியுரிமை பெற்று வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்த விழா தேவையா என்று யோசித்தேன் முதல்வர் ஸ்டாலின்! தஞ்சாவூரில் நலத்திட்ட உதவி விழா
கலைஞர் செய்திகள் : "இந்த நேரத்தில் இந்த விழா தேவைதானா என்றார்கள்.. ஆனால்..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில், இப்படியான விழா தேவைதானா என நானும் யோசித்தேன்.." எனப் பேசினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில், இப்படியான விழா தேவைதானா என நானும் யோசித்தேன்.." எனப் பேசினார்.
தமிழ்நாட்டில் ஊரடங்கு! : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
மின்னம்பலம் : கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் சமீப நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதோடு, ஓமிக்ரான் பரவலும் வேகமெடுத்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ,ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசும் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம்"..அனைத்து அரசு நிறுவனத்திலும் கண்காணிப்போம்
தந்தி டிவி : சமூக நீதி கண்காணிப்பு குழுவின் பணி இன்று முதல் தொடங்கிவிட்டதாக அக்குழுவின் தலைவர் சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார். அண்மையில், அமைத்த குழுவின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தின் இன்று நடைபெற்றது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட குழுவின் 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சமூக நீதி அளவுகோல், சட்டப்படி முறையாக, முழுமையாக பின்பற்றப்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் எதுவாயினும் சமூக நீதி பின்பற்றல் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் என்றும் திட்டவட்டமாக அவர் கூறினார்.
672 ஆதார் கார்டுகளை வைத்து 672 தடவைகள் கடன் .. திருவண்ணாமலையில் ரத்தன் லால் (ராஜஸ்தானி) கைவரிசை
Raja Rajendran Tamilnadu : பஞ்சம் பொழைக்க வந்த ஒரு ராஜஸ்தானி ரத்தன்லால், எளியோர்களின் 672 ஆதார்கார்டுகளைப் பெற்று, ஒவ்வோர் ஆதார் அட்டைக்கும் ஐந்து சவரனுக்கு கொஞ்சம் குறைவா நகைகளை வைத்து கடன் பெற்றிருக்கிறானாம் !
இது திருவண்ணாமலையில் நடந்த ஒரு சாம்பிள்.
கூட்டுறவு சங்க வங்கிகளில் ஐந்து சவரனுக்கு குறைவான நகைகளை அடமானம் வைத்தோருக்கு கடன் தள்ளுபடி என்கிற அறிவிப்பை முன்கூட்டியே அறிந்து, இதைச் செய்திருக்கிறான் அந்த மார்வாடி !
இதை இந்த மார்வாடி மட்டும் செய்யாமல் ஏகப்பட்ட ஒட்டுண்ணிகள் செய்திருக்கின்றன, வாடிக்கையாக செய்தவண்ணமுமுள்ளன !
இதை துல்லியமாக ஆடிட் செய்து இவர்களைப் போன்றோருக்கு தள்ளுபடி இல்லை என்றதும், அதையே தள்ளுபடி ரத்து என்று மடைமாற்றுகிறார்கள் சங்கிகள் & ர ரக்கள் !
ரத்தன்லால் ஊழலை பகிரங்கமாக சபையில் சொன்னது அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் !
வியாழன், 30 டிசம்பர், 2021
ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு எதிராக கோவையில் தபெதிக-வினர் கோவை ராமகிருஷ்ணன் உட்பட கைது!
veerasamy sivadevan - .toptamilnews.com : கோவையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் உள்ள பள்ளிகளில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சாகா பயிற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை விளாங்குறிச்சி சாலை உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி நடைபெற்றது.
"Inclusive Growth" ! பொருளாதாரம் என்ற என்ஜினை தொடங்கி (Start) வைத்த கலைஞர் .. கந்தசாமி மாரியப்பன்
Kandasamy Mariyappan : அது என்ன Inclusive Growth.!?
Inclusive Growthக்கும் திராவிட இயக்கங்களுக்கும் என்ன சம்பந்தம்.!?
விவசாயம், வங்கி, போக்குவரத்து போன்ற தொழிலில்கள் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் பொழுது அது எல்லோருக்குமான வளர்ச்சியை கொடுக்காது.!
ஆயிரம் வேலி நிலங்களை வைத்திருக்கும் ஒருவர், அதிக விவசாயக் கூலிகளை மட்டுமே வைத்திருக்க முடியும்.!
பேருந்துகள் வைத்திருக்கும் ஒருவர் லாபம் வரும் பகுதிகளில் மட்டுமே பேருந்தை இயக்குவார்.!
வங்கித் தொழில் செய்பவர் லாபம் வரும் இடத்தில் மட்டுமே வங்கிகளை வைத்திருப்பார்.!
விவசாய வேலை வருடத்தில் 60 நாட்கள் இருந்தால் பெரிது.! அந்த 60 நாட்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருடம் முழுவதும் பசியாற வேண்டும்..!!
கட்டப்பஞ்சாயத்து தடுப்பு .. என்கவுண்டர் எஸ் பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை!
மின்னம்பலம் : சென்னை புறநகர்ப் பகுதிகளில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளைத் தடுக்கக் கூடுதல் எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண காவல்துறையும் நீதிமன்றங்களும் இருந்தாலும் கட்டப்பஞ்சாயத்துகளும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
சமீப நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ரவுடிகள் இடையே நடைபெறும் மோதல் மற்றும் கொலை காரணமாக நிம்மதியாக வெளியில் சென்று வர முடியவில்லை என்று பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
Chennai Rain:சென்னையில் கனமழை! .. செம்பரப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது
tamil.asianetnews.com - Thanalakshmi V : தமிழகத்தில் அடுத்த 2
நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய
கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை
தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
பெருநகரில் முற்பகல் முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில்
சென்னைக்கு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
11 சிறுவன் தலையை துளைத்த துப்பாக்கி குண்டு! புதுக்கோட்டை மாவட்டம் துப்பாக்கி பயிற்சி...
நக்கீரன் -பகத்சிங் : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி
நார்த்தாமலை, அம்மாசத்திரம் மலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கி சுடும்
பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய துப்பாக்கி குண்டு புகழேந்தி என்ற 11
வயது சிறுவனின் தலையில் பாய்ந்து மண்டை ஓட்டை உடைத்துக்கொண்டு மூளையில்
தங்கியது.
சுருண்டு விழுந்த சிறுவனை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சையளித்து மேல்சிகிச்சைக்காக
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ராகுல் வெளிநாட்டு பயணம்! காங்கிரஸ் பஞ்சாப் பேரணி ரத்து .. இந்த நேரத்தில் தேவையா? தொண்டர்கள் கேள்வி,
மின்னம்பலம் : காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பிரதமர்
வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல் காந்தி நேற்று (டிசம்பர் 29)
வெளிநாட்டுக்கு பயணம் செய்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.
வருகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் நாட்டின்
முக்கிய சட்டமன்றத் தேர்தல்களான உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப்,
கோவா ஆகியவை வரும் நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது தாய் சோனியா
காந்தியின் பிறந்த நாடான இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கலைஞரை தொடர்ந்து துரத்திய ஜாதி பேய்கள் .. பழைய பேட்டி ...
பெரியார் நேசன் : ஏன் தொடர்ச்சியாக தலைவர் கலைஞர் தாக்கப்பட்டார், நிராகரிக்கப்பட்டார், பழி வாங்கப்பட்டார், பலி கொடுக்கப்பட்டார்.. இன்றும் அவை ஏன் திமுக,விற்கு தொடர்ந்து செய்யப்படுகின்றது என யோசித்தால் கலைஞரின் பழைய பேட்டி ஒன்று ஞாபகம் வந்தது..
கேள்வி :- “எதிலும் இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
கலைஞர் :- “அம்மா, அப்பா… அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள்”
கேள்வி :- இன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா? எப்படிச் சொல்கிறீர்கள்? 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள்.,கிட்டத் தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்களெல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும்கூட சாதியரீதியிலான பார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா?
திருகோணமலை பெட்ரோலியம் டாங்கிகள் இந்திய இலங்கை கூட்டு ஒப்பந்தம் ... விரைவில் கைச்சாத்து
Vigneshkumar - Oneindia Tamil : டெல்லி: சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் இலங்கைக்குச் செல்லவுள்ள நிலையில்,
திருகோணமலை எண்ணெய் கிடங்கு கூட்டு வளர்ச்சி பணிக்காக இந்தியா பக்கம் திரும்பியுள்ளது இலங்கை.
லங்கை கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இதனால் அங்கு விலைவாசிகள் அனைத்தும் விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
திவால் ஆவதில் இருந்து தப்ப இலங்கை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.
இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிடமும் உதவிகளைக் கேட்டுள்ளது.
உறவு இதற்கிடையே சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஜனவரி 7-9 நாட்களில் இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தான்குளம் போலீஸ் கொலைகளை அம்பலப்படுத்திய பிரபாகருக்கு மும்பாய் உயரிய ரெட் விருது
Chinniah Kasi : சாத்தான்குளம் விவகாரத்தை கட்டுரை மூலம் அமபலப்படுத்திய பத்திரிகையாளர் பிரபாகருக்கு ரெட் இங்க் விருது...
29 December 2021 தீக்கதிர் மும்பை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி காவல்துறை விசாரணையில் இருவரும் உயிரிழந்தனர். இருவரும் தந்தை - மகன்கள் என்பதால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக அளவிலும் சில பத்திரிகைகள் காவல்துறையின் இந்த கொடூரத்தை செய்தியை வெளியிட்டு சாத்தான்குளம் சம்பவத்தை உரக்கச் சொன்னது.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? விடிய விடிய காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகள்? நிர்வாணமாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொடூரமாக தாக்கப்பட்டதையும், அதற்கான நேரடி சாட்சியையும் தன்னுடைய கட்டுரையாக எழுத, அக்கட்டுரை ”The Federal" பத்திரிகையில் வெளியாகியது.
மலேசியாவில் தமிழ் சீன மொழி பள்ளிக்கூடங்கள் தொடர தடையில்லை! கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி
anegun.com -குமரன் KumaraN தமிழ் – சீனப்பள்ளிகள் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை அல்ல ! தொடர்ந்து இயங்கலாம் ! – கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு !
கோலாலம்பூர் தாய்மொழ்ப் பள்ளிகளுக்கு எதிராக மலாய் அமைப்புகல் தொடுத்திருந்த வழக்கில் அப்பள்ளிகள் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை அல்ல எனவும் அவை தொடர்ந்து இயங்கலாம் எனவும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது, மேலும், அந்த வழக்கை தள்ளுபடியும் செய்துள்ளது.
தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறன்பானவை என அறிவிக்க Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS), Majlis Pembangunan Pendidikan Islam Malaysia (Mappim) dan Gabungan Penulis Nasional (Gapena) ஆகிய அமைப்புகள் வழக்கு தொடுத்திருந்தன.
ரைட்டர் வெறும் எழுத்தர் அல்ல, எளியவர்களின் 'ரைட்ஸ்'களுக்காக போராடும் லெஃப்டர்
Vini Sharpana : 'ரைட்டர்' பார்த்தேன்...
காவல்நிலையத்திற்குள் சிசிடிவி பொருத்தவேண்டும் என்ற உத்தரவை போலீஸார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ ‘ரைட்டர்’ இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் தனது சினிமா கேமராவை சிசிடிவி கேமராபோல் வைத்து காவல்நிலையங்களில் நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
'ஆறு பவுன் செயின் காணாம போயிடுச்சுன்னு கம்பளைண்ட் கொடுத்தீங்கல்ல?
மூணு பவுன் செயின் ஒண்ணு இருக்கு, எழுதிக்கொடுத்துட்டு எடுத்துட்டு போங்க'...
'டிவிஎஸ் ஃபிஃப்டி காணாம போயிடுச்சுன்னு ஒருத்தன் கம்ப்ளைண்ட் கொடுத்தான்.
இந்த டி.வி.எஸ் சேம்பை கொடுத்துவிட்டு கம்பளைண்ட்டை க்ளோஸ் பண்ணு'...
புதன், 29 டிசம்பர், 2021
இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொலை செய்து விபத்து என நாடகமாடிய மகன்.. ராஜஸ்தானில் பயங்கரம்!
கலைஞர் செய்திகள் - லெனின் : காப்பீட்டுத் தொகைக்காக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொலை செய்து விபத்து என நாடகமாடிய மகன்.. ராஜஸ்தானில்
ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகாம் சிங். இவர் தனது பெயரில் நான்கு காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தார்.
இந்நிலையில், மோகாம் சிங், கோசியா என்ற பகுதியில் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் விபத்தில் உயிரிழந்துள்ளார் என போலிஸார் நினைத்துள்ளனர்.
பின்னர், மோகாம் சிங் உடல் இருந்த கோசியா பகுதியிலேயே அவரது மகன் ராஜேஷ் சிங் மற்றும் அவரது நண்பர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
சாமியாரிணி அன்னபூரணி சென்னை காவல் அலுவலகத்தில் ... மர்மமான முறையில் உயிரிழந்த கணவர்!
.hindutamil.in : சென்னை: ஆன்மிகப் பணி செய்ய வந்த என்னைப் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டிருகிறார்கள் என்று பக்தர்களுக்கு அருள்வாக்கு தருபவராக அறியப்படும் அன்னபூரணி பேட்டிளித்துள்ளார்.
சில தினங்களாகவே ''அன்னபூரணி அரசு அம்மா'' என்ற பெயர் ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பரபரப்பாக பவனி வந்துகொண்டிருக்கிறது. அந்த பரபரப்புக்குச் சொந்தக்காரரான அன்னபூரணி தன்னைக் கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு அருள்வாக்குகளைக் கூறிவந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரைப் பற்றிய பல்வேறு வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒன்று, அவருக்கு பக்தர்கள் பூஜை செய்யும் காட்சி. அதில் அவர் வெல்வெட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க தோழியர்கள் சாமரம் வீச பக்தர்கள் அவர் காலில் விழுந்து வணங்குகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்து வைரலானது.
அன்னபூரணி
குடிசை மாற்று வாரிய 24 குடும்பங்களின் உயிரைக் காப்பாற்றிய தி.மு.க வட்டச் செயலாளர் தனியரசு! ஸ்டாலின், கனிமொழி பாராட்டு
tamil.indianexpress.com : 24 குடும்பங்கள் உயிரைக் காப்பாற்றிய தி.மு.க வட்டச் செயலாளர்: ஸ்டாலின், கனிமொழி பாராட்டு
திமுக வட்ட செயலாளரின் வீரமான செயல் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1993-ம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ,இரண்டு நாட்களுக்கு முன் தரைமட்டமாக இடிந்து விழுந்தது. முதலில் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில் திங்கள் கிழமை காலை மொத்தமாக கட்டிடம் இடிந்துள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. கட்டிடம் விழுவதற்கு முன்பு அனைத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மக்களை சரியான நேரத்தில் வெளியேற்றி 24 குடும்பங்களின் உயிரை காப்பாற்றியது திமுக வட்ட செயலாளர் தனியரசு என்பவர் தான்.
பழம்பெரும் நடிகை கே டி ருக்மணியின் சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மன்சூர் அலிகான் மீது புகார்
News18 Tamil : மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக சொத்தாட்சியர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியுமான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து, தமிழக அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்படி கே.டி.ருக்மணி அம்மாளுக்கு சொந்தமாக தியாகராய நகர் பத்மநாபன் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார்.
'நீட்' தேர்வில் விலக்கு கேட்டு.. அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு.. பரபர தகவல்!
Rayar A - Oneindia Tamil : டெல்லி: தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது. தமிழக்தில் நீட் தேர்வு காரணமாக ஏராளமான மாணவ-மாணவிகள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட நீலகிரியில் ஒரு மாணவி தற்கொலை அரங்கேறியது.
ரிஜிஸ்டர் செய்யுங்கள் ரூ.1000 மதிப்பிலான அமேசான் வவுச்சர் வென்றிடுங்கள்
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
நீட்: விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு-மோடி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமோ?நீட்: விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு-மோடி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமோ?
ஆ.ராசா: வன உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்
மின்னம்பலம் : “வன உரிமைச் சட்டம் 2006 முழுமையாக நடைமுறைக்கு வரும். வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் களையப்படும்” என்று நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா உறுதியளித்துள்ளார்.
பழங்குடி மக்களுக்கு வனத்தின் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என பழங்குடி மக்களும், பழங்குடி மக்கள் நலன் செயற்பாட்டாளர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
செவ்வாய், 28 டிசம்பர், 2021
அமைச்சர் K.S.மஸ்தான் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் சந்திப்பு
ந. சரவணன் : மன நிறைவான கலந்துரையாடலாக அமைந்தது.
இந்நிகழ்விற்கு அழைத்தபோது இன்முகத்துடன் வரவேற்று நிகழ்விற்கு இசைவு தந்ததுடன், சுமார் ஒருமணி நேரம் பொறுமையாக இருந்து எமது முகாம் மக்களுடன் கலந்துரையாடிய சிறுபான்மை நலத்துறை, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் அகதிகள் பிரிவு அமைச்சர் மாண்புமிகு K.S.மஸ்தான் அவர்களுக்கு
எமது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றியினையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த சில மாதங்களாகவே இடையறாது பணி செய்து முகாம் மக்கள் குறித்த பல்வேறு விபரதிரட்டுகளை சேகரித்து அரசின் திட்டங்களுக்கு பெரும் உதவியாக இருந்ததுடன் எப்போதும் கரிசனையுடன் நடந்துக்கொள்ளும் மறுவாழ்வு துறையினர் சார்பாக மறுவாழ்வு துறை துனை ஆனையூர் உயர்திரு. இரமேஷ் கிருஷ்ணன் அவர்களும் ஆரம்பம் முதல் இறுதிவரை இருந்து மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்ததுடன் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக பேசியது மிகுந்த மகிழ்வையும் நம்பிக்கையையும் கொடுத்தது.
மோடியின் பாதுகாப்புக்கு அதி விலையுர்ந்த கார் 15 கிலோ வெடிகுண்டாலும் தகர்க்க முடியாது!
மாலைமலர் : இந்த கார்கள் பிரதமரின் பயன்பாட்டிற்காக டெல்லியில் உள்ள ஐதராபாத் விருந்தினர் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
புதுடெல்லி: பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் வாங்கப்பட்டு உள்ளது.
இந்த காரில் வி.ஆர்.10 லெவல் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன.பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கார்கள் வாங்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகள் இது ன்ற 2 கார்களை வாங்கி உள்ளனர். ஒரு காரின் விலை ரு.12 கோடியாகும்.
வெறும் வயிற்றில் உண்ணக்கூடாதவையும் அருந்த கூடாதவையும் . முக்கிய குறிப்புக்கள்
ZeeHindustanTamil : நாம் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது. உணவால் மட்டுமே நாம் உயிர் வாழ்கிறோம். ஆனால் ஆரோக்கியமாக இருக்க சரியான உணவை சாப்பிடுவது அவசியம்.
Avoid these foods in empty stomach: நாம் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது. உணவால் மட்டுமே உயிர் வாழ்கிறோம். ஆரோக்கியமாக இருக்க சரியான உணவை சாப்பிடுவது அவசியம். இது தவிர, சில உணவுகள் உள்ளன, அவை சரியான நேரத்தில் உட்கொள்ளப்படாவிட்டால் நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற பல உணவுகள் உள்ளன, நீங்கள் காலையில் உட்கொண்டால், அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். உண்மையில், நாம் வெறும் வயிற்றில் இருக்கும் போது, நமது குடலில் உள்ள எண்ணற்ற பாக்டீரியாக்கள் இத்தகைய இரசாயனங்களை உருவாக்குகின்றன, இதன் காரணமாக வெறும் வயிற்றில் உள்ள அமிலம் செயல்படாது. ஆனால் இந்த பாக்டீரியாவை அழிக்கும் சில விஷயங்கள் உள்ளன. எனவே, வெறும் வயிற்றில் எதைச் சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். எனவே எந்தெந்த பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
உத்தர பிரதேசம் - 16 லாக்கர்கள், 500 சாவிகள். பாதாள அறைகள்.. ரெயிடில் சிக்கிய வடநாட்டு ஜெயினின் சாம்ராஜ்யம்
மின்னம்பலம் ஐந்து நாள்கள் தொடர் ரெய்டு, நீண்ட விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்து வாசனை திரவிய வியாபாரி பியூஷ் ஜெயின் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் என்பவர், ஓடோகெம் என்கிற வாசனைதிரவிய நிறுவனத்தை நடத்திவருகிறார். இவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சிலரும் இதில் பங்குதாரர்களாக இருந்துவருகின்றனர்.
ஜிஎஸ்டி துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்ககம் ஐந்து நாள்களுக்கு முன்னர், கான்பூரில் உள்ள பியூசின் தொழிற்சாலையில் தேடுதல்சோதனையில் ஈடுபட்டது. சோதனையிடச் சென்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்படியாக அங்கே கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது.
சென்னையில் களைகட்டும் 'மார்கழியில் மக்களிசை'! மக்களின் இசையை மேடை ஏற்றவே மார்கழியில்.... இயக்குனர் பா.ரஞ்சித்
நக்கீரன் செய்திப்பிரிவு : இயக்குநர் ப.ரஞ்சித் கலையை ஜனநாயகம் படுத்தும் நோக்கோடு ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் காலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிராமிய இசை கலைஞர்கள் தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் என தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டிற்கான மார்கழியில் மக்கள் இசை 2021 நிகழ்ச்சி கடந்த 18 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பறையடித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கூட பராமரிக்காமல் விட்ட பராரிகள் அதிமுகவினர் !
Raja Rajendran Tamilnadu : குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, எளியோர்களுக்கு, நிறைவான வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தவர் கலைஞர் என்பது நம் அனைவருக்கும் தெரியும் !
1975 - 1976 அன்று எங்களுடைய பார்த்தசாரதி நகர் குடியிருப்பை முதல்வராயிருந்த கலைஞர் தன் அமைச்சரவை புடைசூழ திறந்துவைத்தார் !
மொத்தம் 120 வீடுகள். ஐந்து கட்டிடங்கள். தரைத்தளத்தோடு சேர்த்து ஒவ்வொரு கட்டிடத்திலும் நான்கு மாடிகள். கிட்டத்தட்ட 600 + மக்கள் அதில் குடியிருந்தனர் !
99% மக்கள் வேறெங்கும் சொந்த வீடுகளல்லாத உண்மையாகவே எளியோர்கள். அந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு அட்டாச்டு பாத்ரூமோடு வீடு வாய்த்தது கிட்டத்தட்ட வரம் !
அந்தக் கட்டிடம் அதன் பின் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் திடமாக இருந்தது. அதாவது கட்டிடங்கள் உறுதியாக இருந்தன !
ஆனால் பத்து பதினைந்து வருடங்களுக்குள் மர ஜன்னல், கதவு போன்றவைகள் பெரும்பாலும் உளுத்து அல்லது கரையான் அரித்து, வீணாய் போனது. இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியால், அதை சரிசெய்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு வாழ்வில் பெரும்பாலோர், முன்னேறியிருந்தனர் !
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் : தற்போது 17 சதவிகிதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவிகிதமாக வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை பிறப்பிட்டுள்ளார்.
தற்போது 17 சதவிகிதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவிகிதமாக வழங்கப்படவுள்ளது.
முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -1 -2 -3.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான கலகக் குரல்..
மின்னம்பலம் - செவ்வாய் 19 டிச 2017 : முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -12017-12-19T13:30:02+5:30
சந்திப்பு: தமயந்தி
(ஷர்மிளா ஸெய்யித்.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான சமகாலப் படைப்பாளர்களில் முக்கியமானவர். அவரது கலகக் குரல் பெண் புனைவு மையத்தைக் கலைத்துப் போட்டு பின் அதில் நீந்தும் வண்ணங்களோடு வேறொரு சாயம் கலங்காத வானத்தைப் பரிந்துரை செய்கிறது.
இதனாலே எண்ணிலடங்கா எதிர்ப்புகளைச் சந்திக்கும் ஷர்மிளாவுடான இந்த உரையாடல் நிலப் போர் சூழலையும் மனப் போர் இறுக்கத்தையும் மதப் போர் அடக்குமுறைகளையும் முழுதாக வரைய முற்படுகிறது.)
உங்கள் குழந்தைப் பருவம், வீடு, சூழல் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும்போது… ?
மாநில அளவில் போதாது.. தேசிய அளவில் பாடம் புகட்ட வேண்டும் .. 'பாஜகவுக்கு' எதிராக முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்
Rajkumar R - Oneindia Tamil : சென்னை: பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்ட கூடிய தேர்தலாக கடந்த சட்டமன்ற தேர்தல் இருக்கும் என கூறினேன்,
பாடத்தை தமிழக மக்கள் புகட்டிவிட்டனர்,
ஆனாலும் இந்திய அளவில் யாருக்கு பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு புகட்ட அனைவரும் உறுதியேற்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தா.பாண்டியன் அவர்களின் திரு உருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார்.
சென்னை: குடிசை மாற்று வாரிய குடியுருப்பு இடிந்தது 24 வீடுகள் தரைமட்டம் . உயிர்ச்சேதம் இல்லை
தினத்தந்தி : சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த
திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த டி பிளாக்கில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். மேலும் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திங்கள், 27 டிசம்பர், 2021
திருமண போர்வையில் இலங்கைக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகள்.” – வெளிநாட்டவர் திருமணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு கட்டுப்பாடு
thesamnet.co.uk - அருண்மொழி : சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ஏன் கோரப்பட்டது என சமூக ஊடகங்களில் பெருகிய விமர்சனங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சக்திதான் என்னை இயக்குகிறது: திடீர் சாமியார் அன்னபூரணி ஆவேசம்!
மின்னம்பலம் : கடந்த மூன்று தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அன்னபூரணி. இன்னொருவரின் கணவருக்காக லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி விவாதத்தில் சண்டை போட்ட இவர் இன்று அருள்வாக்குத் தரும் அன்னபூரணியாம்.
இவரது சில வீடியோக்கள் பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உள்ளது. நித்தி தன்னை ஆதிபரமேஸ்வரன் என கூறிக்கொள்ளும் நிலையில், அன்னபூரணி தன்னை ஆதிபராசக்தி என்று சொல்கிறார்.
அன்னபூரணியின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ஜனவரி 1ஆம் தேதி அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்குச் செங்கல்பட்டு போலீசார் தடை விதித்ததாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
நிதி ஆயோக் சுகாதார தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம் ! - உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
கலைஞர் செய்திகள் : “இதுதான் நீங்க சொன்ன வளர்ச்சியா?”: கடைசி இடத்தில் உத்தர பிரதேசம்- வெட்டவெளிச்சமாக்கிய நிதி ஆயோக் அறிக்கை!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2ஆம் இடம் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பை ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டும். 2014ஆம் ஆண்டு முதல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
"ஆதிபராசக்தி அம்மா" அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை.. அன்னபூரணியை தேடும் போலீஸ்
Vishnupriya R - Oneindia Tami : சென்னை: தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அன்னபூரணி செங்கல்பட்டில் ஒரு திருமண மண்டபத்தில் அருள்வாக்கு கூற ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர் சமூகவலைதளங்களிலும் வைரலானது.
ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அவருக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகின. இவரது பேஸ்புக் வீடியோக்களில் இவருக்காக பாடல்கள் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.
தாயி மகமாயி வேதபுர காளி என ஒலிக்கிறது.
கூடாரங்களில் வாழ்ந்தவர்களா அல்லது கோட்டைகளில் வாழ்ந்தவர்களா தொன்மையானவர்கள்? பேராசிரியர். கருணானந்தம்
ராதா மனோகர் : கூடாரங்களில் வாழ்ந்தவர்களா அல்லது கோட்டைகளில் வாழ்ந்தவர்களா தொன்மையானவர்கள்? பேராசிரியர். கருணானந்தம்
Mr Justice என்று அமெரிக்காவில் அழைப்பார்கள் .. இங்கே நாம் மை லார்ட் என்கிறோம் .. வழக்காடுபவர்கள் பிச்சை எடுப்பவர்கள் போலவும் .. தீர்ப்பை கொடுப்பவர் பிச்சை அளிப்பவர் போலவும் ஒரு ஜனநாயக நாட்டில் .. நீதிக்கு உகந்ததுதானா?
தன்வழக்கு என்று வந்தால் தானே தீர்ப்பு அளிப்பதுவும் .. அடுத்தவர் வழக்கென்று வந்தால் பெரிய சம்பிரதாயங்களை பார்ப்பதுவும் ..
சில சமயத்தில் விபத்துக்களை போல நல்ல தீர்ப்புக்கள் வருவதுண்டு .
இந்த கீழடியில் அகழாய்வை தொடரவேண்டும் என்பது கூட அப்படி ஒரு விபத்து போல வந்த நல்ல தீர்ப்பு.
உயர்பதவிகளில் இருக்கின்ற தகுதி பிராமணர்களுக்கே உண்டு என்று சொல்கின்ற நீதிபதி.. இப்போதும் நீதிமன்றத்தில் இருக்கின்றார் .உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவே இல்லை.
பாரத தேசம் வேதங்களின் நாடு . CP(M) சங்கரன் நம்பூதிரி சீடர்களின் ஆய்வுகள்
சிவசங்கரன் சுந்தரராசன் : சமூகம் சாதி – மதம் போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
வினவு
இதுவரை ”புதிய கலாச்சாரம்” வாசகர் களுக்கு ”அறிவுச் சோதனைப் போட்டி” எதையும் நாம் நடத்தியதில்லை. இப்போது ஒரு சிறு ஆவல். அதையும் செய்து பார்த்து விடுவோமே! கீழே தரப்படும் மேற்கோள்கள் யாருடையது என்று வாசகர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பார்ப்போம்!
வேத கலாச்சாரம்
”பல்வேறு மன்னர்கள் ஆட்சி நடத்திய நாடுகளாகத் தான் இந்திய உபகண்டம் இருந்தது. ஆனால், இந்த உபகண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கிடையே ஏதோ ஒருவிதமான இணைப்பும் – பிணைப்பும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
" தேத்தண்ணி " "தே கஹட்ட " என்ற சிங்கள நாவலின் மொழிபெயர்ப்பு
Shadagopan Ramiah : " தேத்தண்ணி " நாவலை பெற்றுக்கொள்ள.....
அடுத்து வெளிவரவிருக்கும் எனது மொழிபெயர்ப்பு நாவலான தேத்தண்ணி அச்சுக்கு போயிருக்கிறது . இந்த நாவல் உப்பாலி லீலாரட்னவின் "தே கஹட்ட " என்ற சிங்கள நாவலின் மொழிபெயர்ப்பாகும் .1965 --1970... பின்னரான மலையக மக்களின் தொழிற்சங்க வரலாற்றையும் போராட்டங்களையும் எடுத்துக் கூறும் நாவல் இது. இந்த நாவல் இன்னும் சில தினங்களில் கைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன் .
இந்த சந்தர்ப்பத்தில் ஆர்வமுள்ள வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
408 அழகிய நீண்ட பக்கங்களுடன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு படத்தை தாங்கி 94 அத்தியாயங்களுக்கு 94 படங்களுடன் மிகக் கனதியாக வெளிவந்திருக்கும் இந்த நாவலின் விலை ரூ. 1250/= .
ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக் கூடாது தாலிபான்கள் கட்டளை
செல்லபுரம் வள்ளியம்மை : தாலிபான்களின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரித்து பேச்சு. மனித உரிமைகளும் பெண் உரிமைகளும் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியான விடயமாகும்
நகரங்களின் கலாச்சாரமும் கிராமங்களின் கலாச்சாரமும் வேறு வேறு
பழமைவாத சமூக குழுக்களின் கலாச்சாரங்களை உணராமல் போனால் .. பிளா பிளா பிளா பிளா
மனித உரிமைகளையும் பெண் உரிமை பற்றியும் பேசும்போது நாம் கவனமாக இருக்கவேண்டும்
அதாகப்பட்டது இதுவரையில் இம்ரான் கான் போர்த்தி வந்த ஜனநாயக பண்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அசல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குரலாக ஒலிக்கிறார் ..இதுதான் பாகிஸ்தானிய அரசியல்வாதிகள்
உள்ளே பச்சை சங்கித்தனம் வெளியே ஜனநாயக மதசார்பற்ற நடுவு நிலைமை
NEET இதுதான் வலதுசாரிகளின் வெற்றி.! இதுதான் தமிழ்நாட்டு மக்களின் தோல்வி.!
Kandasamy Mariyappan : NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப் படவேண்டும் என்றால்..,
வலதுசாரி கும்பல்கள், திமுகவினர் உருவாக்கியுள்ள மருத்துவ கல்லூரிகள் மூலம் கொள்ளையடிப்பதற்காக NEET வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று, தொடர்ந்து திமுக மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துக்கொண்டே வருகின்றனர்.!
பொதுமக்களுக்கும் இது உண்மையோ என்ற எண்ணம் வரும்.!
ஆனால் கீழே உள்ள மருத்துவ கல்லூரிகளை பாருங்கள்.!
1. ACS Medical College (BJP)
2. SRM Chennai (BJP)
3. SRM Trichy (BJP)
4. Deenadayal Medical College (BJP) ×
5. Sathya sai Medical College (BJP)
6. Chettinadu Medical College (BJP)
7. Meenakshi Medical College (ADMK)
8. Muthukumaran Medical College (ADMK)
திரு. நெல்லை கண்ணன் கண்ணீர் ... பெரும்பான்மை ஜாதிகளிடம் இருந்து சிறுபான்மை ஜாதிகளை காப்பாற்றுங்கள்
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சாதிகளிடத்திலிருந்து, சிறுபான்மை சாதியினரை காப்பாற்றுங்கள் என்பதுதான் அவரது அழுகை.
எத்தனைக்கொடுமைகளை அனுபவிக்கிறோமென இங்கே கேலிபேசும் நபர்கள் அறியமாட்டார்கள்.
தமிழகத்தின் தேவர், நாடார், வன்னியர், கவுண்டர், பறையர், பள்ளர் தவிர்த்த சிறுபான்மை சாதிகள், இந்த பெரும்பான்மை சாதியர்களின் அடாவடிகளால் பாதிக்கப்படுவதை யாரும் பேசமாட்டேன்கிறார்கள்.
அதைத்தான், நெல்லைக்கண்ணனாரின் ஆதரவற்ற நிலையும், ஆதாரத்திற்காக தோள்தேடும் நிலையையும் அம்மேடையில் பிரதிபலித்தது.
நெல்லை ஜெபமணியை அவனது கேவலமான பேச்சிற்காக நீங்கள் தொட்டுவிட முடியுமா...!?
ஞாயிறு, 26 டிசம்பர், 2021
பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்.. பின்னணி பாடல்களை தாண்டி நடிப்பிலும் அசத்தியவர்
Mari S - tamil.filmibeat.com : சென்னை: பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78. சியான் விக்ரமின் தில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் மாணிக்க விநாயகம்.
திருடா திருடி படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மாணிக்க விநாயகம் பல படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.
திரு .மாணிக்க விநாயகம் அவர்கள் இன்று மாலை அவரது இல்லத்தில் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 78. சியான் விக்ரமின் தில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் மாணிக்க விநாயகம்.
விடுமுறை தர மறுத்ததால் 4 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்
மாலைமலர் : இலங்கையில் விடுமுறை தர மறுத்ததால் 4 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் இருந்து கிழக்கே 336 கிலோமீட்டர் தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி இரவு 11.40 மணிக்கு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ஒருவரே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியுள்ளார். துப்பாக்கியால் 4 பேரை சுட்டுக்கொன்றதும் அந்த போலீஸ்காரர் மற்றொரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
திமுக மகளிரணி Vs இளைஞரணி ! புதிய உறுப்பினர் சேர்ப்பில் ஏற்பட்ட முரண்பாடு! பின்னணி என்ன?
திமுக இளைஞரணியில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்க உதயநிதி ஸ்டாலின் முயற்சித்து வரும் வேளையில், கனிமொழியும் மகளிரணியில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்க தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
இதனால் இந்த விவகாரம் தான் திமுக மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் சாமியார் அன்னபூரணி - வேறொரு பெண்ணின் கணவரை தட்டி பறித்து சொல்வதெல்லாம் உண்மை flashback
இவர்கள் யார்? என்ற முழு விவரத்தைத் தெரிந்துகொள்ளாமல் மக்கள் அவர்களிடம்
சென்று காலில் விழுவதும், பணத்தைக் கொட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அப்படியாகத்தான் திடீரென சாமியார் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அன்னபூரணி. “அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் பக்கத்தில் இவரது வீடியோக்கள் பல பதிவிடப்பட்டுள்ளன.
கோவை KMCH பள்ளி வளாகத்தில் ஆர் எஸ் எஸ் ஆயுத பயிற்சி .. மாணவர்கள் மனதில் வன்முறை விதைப்பு
Chinniah Kasi : *அனுப்புநர்* கு.இராமகிருட்டிணன் மற்றும் அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகள், கோயம்புத்தூர்.
*பெறுநர்*
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம். *மதிப்பிற்கு உரியவர்களுக்கு,*
*பொருள்:* ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற மதவாத அமைப்பின் பயிற்சி முகாம் கோயம்புத்தூரில் நடைபெறுவதை தடுத்து நிறுத்திட வேண்டி....
வணக்கம்,
ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற இந்துத்வா மதவெறி அமைப்பின் பயிற்சி முகாமானது வருகிற 31.12.2021 முதல் 02.01.2022 வரை கோயம்புத்தூர் கே.எம்.சி.எச். பள்ளி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மகாத்மா காந்தி கொலை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட காரணத்தினால் இந்திய அரசினால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இன்னும் ஆர்.எஸ்.எஸ். மதவெறி கலவர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அத்தகைய அமைப்பின் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பும் ஒரு மதவெறி பாசிச அமைப்பாகும்.
நாவலர் இரா நெடுஞ்செழியனுக்கு சிலை ! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கலைஞர் செய்திகள் : நாவலர் இரா.நெடுஞ்செழியன் சிலையினை திறந்து வைத்து, நாட்டு உடமையாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் இரா.நெடுஞ்செழியன் சிலையினை நாளை (26.12.2021) காலை 10.00 மணியளவில் திறந்து வைத்து, நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கீழவெண்மணியில் சீமான் அஞ்சலி, தகராறு!
மின்னம்பலம் : நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்துக்கொள்ளப்பட்டதன் 53ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிபிஎம் கட்சியானது புதுப்பித்துள்ளது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று காலையில் இதைத் திறந்துவைத்தார். அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் முதலிய பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தியாகிகள் நினைவு ஜோதிப் பயணம் உள்பட பல நிகழ்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கீழவெண்மணி நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திச்சென்றனர்.
ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்
ஹென்றிச் ஹிம்லர் .. மிகவும் அமைதியானவன் . அசாத்திய திறமைசாலி . ஹிட்லர் அரங்கேற்றிய இன அழிப்புக்களின் முக்கிய சூத்திரதாரியே இவன்தான்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும் எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்1900 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் 7 ஆம் தேதி ஒரு பள்ளிக்கூட உதவி தலைமை ஆசிரியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான்
படிக்கும் காலத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் கவனமாக படித்து கெட்டிக்கார மாணவன் என்ற பெயரை எடுத்திருந்தால்
கிறிஸ்தவ தேவாலய நிகழ்வுகளில் பக்தியோடு பங்கெடுத்து கொண்டான் .
நான் எப்பொழுதும் கடவுளுக்கு விசுவாசமாகவே இருப்பேன் கடவுளை விரும்புகிறேன் என்று தனது டயரியில் எழுதியிருந்தான்
ஆனால் பிற்காலத்தில் தேவாலய பாதிரிகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான்
சனி, 25 டிசம்பர், 2021
மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை .. புத்தக திருவிழாவில் தொடங்கிய புள்ளி
மின்னம்பலம் : மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை!
அரசுத் தலைவரான முதலமைச்சரால் நேற்று (டிசம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மஞ்சள் பை இயக்கம், எங்கு, யார் யாரால் விதையாக இடப்பட்டது என்பதை உறுதிபடச் சொல்லமுடியாது என்றாலும், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய துணிப்பை இயக்கம் இதன் முன்னோடி எனக் கூறலாம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைப் புத்தகக் காட்சியில், ‘மழை மண் மரம் மானுடம்’ என்கிற குழுவினர், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் மிகப்பெரிய திருவிழாவான சென்னைப்
புத்தகக் காட்சியில் தொடங்கினால் நிச்சயமாக நல்ல பலன் தரும் என அந்தக்
குழுவினர் நம்பிக்கையுடன் தொடங்கினார்கள்.
உத்தராகண்ட்: தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
தலித் பெண் சுனிதா தேவி |
வட்டார உறுப்பினர் தீபா ஜோஷி |
உத்தராகண்ட் மாநிலம், சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், சமையலர் பணியில் இருக்கும் தலித் பெண்மணி சமைத்த உணவை ஆதிக்க சாதிக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சாப்பிட மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, உணவு சமைத்த பெண்மணியை பணியிலிருந்து நீக்கியது மட்டுமின்றி, இந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமனம் செய்வதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறக்கூடும் என்று பிபிசி இந்தியின் கள நிலவர ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சம்பாவத்தில் உள்ள சுக்கிடாங் இண்டர் காலேஜில் மொத்தம் உள்ள 230 மாணவர்களில், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 66 மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு நிம்மதி.. தமிழக அரசு எடுத்த ஆக்ஷன்!
உயிர் பயத்தால் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்: 9-வது முறையாக ஏமாற்ற முயன்றபோது கைது ... பெங்களூர்
file pictue |
மாலைமலர் : ஒரு டோஸ் தடுப்பூசி போடவே பலர் பயந்து வரும் நிலையில் உயிர் பயத்தில் போலி ஆவணங்கள் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர் போலீசில் சிக்கிய சம்பவம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு: கொரோனா என்ற கொடிய அரக்கன் இந்தியாவில் காலூன்றி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் அதன் தாக்கம் இன்னும் இருந்து வருகிறது. இதற்கிடையே ஒமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் மக்களை காக்க மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. ஒரு நபர் 2 டோஸ் தடுப்பூசி போட அரசு அனுமதி உள்ளது. அத்துடன் ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.