ஞாயிறு, 26 டிசம்பர், 2021

விடுமுறை தர மறுத்ததால் 4 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்

 மாலைமலர் : இலங்கையில் விடுமுறை தர மறுத்ததால் 4 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் இருந்து கிழக்கே 336 கிலோமீட்டர் தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி இரவு 11.40 மணிக்கு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ஒருவரே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியுள்ளார். துப்பாக்கியால் 4 பேரை சுட்டுக்கொன்றதும் அந்த போலீஸ்காரர் மற்றொரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் இருந்து டி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் 3 போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியும் அடங்குவார். விடுமுறை கேட்டு கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த அதிகாரிகள் தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த திருக்கோவிலில் போலீஸ் நிலையம் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் இடையே போர் நடைபெற்ற மண்டபத்தில் அமைந்துள்ளது. இங்கு 2009-ம் ஆண்டு போர் முடிவுற்றது. அதன்பிறகு இந்த பகுதி அமைதியாகவே காணப்பட்டது. இப்போது 4 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதால் இந்த பகுதி பரபரப்படைந்துள்ள 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக