செவ்வாய், 28 டிசம்பர், 2021

அமைச்சர் K.S.மஸ்தான் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் சந்திப்பு

File video
May be an image of 1 person and text that says 'மாண்புமிகு அமைச்சர். செஞ்சி மஸ்தான் அவர்கள் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இலங்கை தமிழர் மறுவாழ்வுத்துறை இலங்கை தமிழர் முகாம் மக்களுடன் இணைய வழி கலந்துரையாடல் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நாள்: 26.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) ாலை 5:00 PM இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு: முகாம் தன்னார்வலர்கள்'

ந. சரவணன் :  மன நிறைவான கலந்துரையாடலாக அமைந்தது.
இந்நிகழ்விற்கு அழைத்தபோது இன்முகத்துடன் வரவேற்று நிகழ்விற்கு இசைவு தந்ததுடன், சுமார் ஒருமணி நேரம் பொறுமையாக இருந்து எமது முகாம் மக்களுடன் கலந்துரையாடிய சிறுபான்மை நலத்துறை, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் அகதிகள் பிரிவு அமைச்சர் மாண்புமிகு K.S.மஸ்தான் அவர்களுக்கு
எமது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றியினையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த சில மாதங்களாகவே இடையறாது பணி செய்து முகாம் மக்கள் குறித்த பல்வேறு விபரதிரட்டுகளை சேகரித்து அரசின் திட்டங்களுக்கு பெரும் உதவியாக இருந்ததுடன் எப்போதும் கரிசனையுடன் நடந்துக்கொள்ளும் மறுவாழ்வு துறையினர் சார்பாக  மறுவாழ்வு துறை துனை ஆனையூர் உயர்திரு. இரமேஷ் கிருஷ்ணன் அவர்களும் ஆரம்பம் முதல் இறுதிவரை இருந்து மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்ததுடன் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக பேசியது மிகுந்த மகிழ்வையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

தொடர்ந்து மக்களுக்காக பல்வேறு வகையில் உறுதுணையாகவும் வழிகாட்டிகளாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும்  ஆளுமைகள் பலரும், குறிப்பாக மறுவாழ்வு முகாம் மக்கள் நலன் ஆலோசனை குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய பேராசிரியர் பாரிவேலன் திரு. கோவி.லெனின் திரு. இளம்பரிதி அவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு அவரவர் பார்வையையும் கருத்துக்களையும் முன் வைத்ததுடன் எங்களது நிலைமையை மாற்ற செய்ய வேண்டுவன பற்றியும் அரசு சார்பில் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றையும் பரிந்துரை செய்து சிறப்பித்தனர். அதே போல் இலங்கையிலிருந்து திரு.நடேசலிங்கம், தாயகம் திரும்பியவரான திரு.மு.க. சி. கந்தையா புலம்பெயர் தமிழர் சார்பாக திரு.ஈழன் சுந்தரமூர்த்தி, பத்திரிக்கையாளர் திரு. சண்முகநாதன் அவர்கள் ஆகியோரும் தங்களது பார்வையை சிறப்பாக பதிவு செய்தனர்.
வழக்கறிஞர் ரோமியோ ராய் ஆல்பர்ட் அவர்கள் சட்டம்  தொடர்பாக இருக்கும் சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் விளக்கமளித்ததுடன் சட்டம் மறுவாழ்வு முகாம் மக்களை அனுக வேண்டிய விதம் குறித்தும் சிறப்பாக பதிவு செய்யதார்.
நிகழ்வு நடக்க உறுதுணையாக இருந்ததுடன் கொரோனா காலங்களில் தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு பனிகளை செய்து, மறுவாழ்வு முகாம் மக்களுக்காகவும் உதவிகள் செய்து வரும் ஜெர்மன் நாட்டில் வசிக்கும் திருமதி. ஜோசப்பின் ரம்யா அவர்களும் மகளிர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு சம்மந்தமாக கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்து சிறப்பித்தார். இக்கலந்துரையாடலின் முக்கிய பங்கேற்பாளர்களாக முகாம் மக்கள் சார்பாக சிறப்பான கருத்துக்களை முன்வைத்தனர் எமது தோழமைகள், திரு.அனோஜன், மாணவி சாரதி, திருமதி.அனுசுபோ திருமதி.புஷ்பலதா, திருமதி. அனிதா, மாணவி சதூர்ஷா, திரு.அருள், மாணவி. நிரஞ்சனா, திரு.அசோக் குமார்,திருமதி.புனிதமலர் திரு.வினோதன், திரு.அருள். தேவராஜ் மற்றும் சில தன்னார்வலர்கள்.
நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உதவியாளர்கள் திரு.ரிஷ்வான், திரு.ஸ்மாயில் என அனைவருக்கும் எங்கள் முகாம் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
உடனிருந்து ஒத்துழைப்பை நல்கிய அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து பயணப்படுவோம் செயல்படுவோம்....
#ministerksmasthan
#TNGovt
#refugees
#wewantindiancitizenship
#tnrehabilitationdeptforsrilankantamils
#tncm_mkstalin
#welfareshemeforsrilankantamils
#CM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக