வெள்ளி, 31 டிசம்பர், 2021

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை - மேலும் பல முக்கிய கட்டுப்பாடுகள் முதல்வர் அறிவிப்பு

 மாலைமலர் :தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டப்பாடுகளை அதிகரிப்பது, இன்றுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால், 1ம் வகப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மழலையர் பள்ளிகள் செயல்படவும் அனுமதி இல்லை.    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக