வெள்ளி, 31 டிசம்பர், 2021

உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்'.. வேகமாக ஓடிவந்து ஸ்டாலினிடம் கூறிய பெண்.. சென்னையில் ..

  '' உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார். நீங்க செமையா பண்ணிட்டு இருக்கீங்க. இளைஞர்களுக்கு நீங்க பயங்கர மோட்டிவேஷனா இருக்கிறீங்க. மிக்க நன்றி சார்"
Rayar A  -   Oneindia Tamil :   சென்னை மக்களை நேற்று கனமழை மீண்டும் பாடாய்படுத்தியது. கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம் என நகரின் முக்கியமான பகுதிகளிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டியது.
சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது.
சென்னை சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.

மாலையில் திருச்சி; இரவில் சென்னை மாலையில் திருச்சி; இரவில் சென்னை குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் வீடுகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்து விட்டதால் பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நேற்று மாலை திருச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இரவே சென்னை திரும்பி உடனடியாக சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு நிலவரம், மழைநீரை அகற்றும் பணி குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் அளித்த புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும், மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடுக்கி விடும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

வேகமாக ஓடி வந்த பெண் இதனை தொடர்ந்து இன்று காலை சென்னையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளநீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் வெள்ளநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பிறகு வேறு பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முதல்வர் காரை நோக்கி வேகமாக ஒரு பெண் ஓடி வந்தார். 'வேற லெவல் சார் நீங்க' 'வேற லெவல் சார் நீங்க' இதனை கண்டதும் ஸ்டாலின் சென்ற கார் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஸ்டாலின் பக்கம் ஓடி வந்த பெண், '' உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார். நீங்க செமையா பண்ணிட்டு இருக்கீங்க. இளைஞர்களுக்கு நீங்க பயங்கர மோட்டிவேஷனா இருக்கிறீங்க. மிக்க நன்றி சார்'' என்று அந்த பெண் முதல்வர் ஸ்டாலினிடம் மூச்சிரைக்க பேசினார். இதனை தொடர்ந்து ''வாங்க போட்டோ எடுத்துக்கலாம்'' என்று முதல்வர் ஸ்டாலினே அந்த பெண்ணிடம் கூறி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் இதன் பின்னர் அந்த பெண் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பெண்ணுடன் முதல்வர் ஸ்டாலின் போட்டோ எடுத்துக் கொண்டார். ஸ்டாலின் அவர்களிடம் நீங்கள் எந்த ஊர்? என்று கேட்க முதல்வரிடம் பேசிய பெண் தனது பெயர் பார்கவி பட்டுக்கோட்டை என்றும் மற்றொரு பெண் சொந்த ஊர் திருவாரூர்என்றும் கூறினார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். முதல்வர் ஸ்டாலினிடம் இந்த பெண்கள் பேசும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக