வியாழன், 30 டிசம்பர், 2021

"Inclusive Growth" ! பொருளாதாரம் என்ற என்ஜினை தொடங்கி (Start) வைத்த கலைஞர் .. கந்தசாமி மாரியப்பன்


 Kandasamy Mariyappan 
: அது என்ன Inclusive Growth.!?
Inclusive Growthக்கும் திராவிட இயக்கங்களுக்கும் என்ன சம்பந்தம்.!?
விவசாயம், வங்கி, போக்குவரத்து போன்ற தொழிலில்கள் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் பொழுது அது எல்லோருக்குமான வளர்ச்சியை கொடுக்காது.!
ஆயிரம் வேலி நிலங்களை வைத்திருக்கும் ஒருவர், அதிக விவசாயக் கூலிகளை மட்டுமே வைத்திருக்க முடியும்.!
பேருந்துகள் வைத்திருக்கும் ஒருவர் லாபம் வரும் பகுதிகளில் மட்டுமே பேருந்தை இயக்குவார்.!  
வங்கித் தொழில் செய்பவர் லாபம் வரும் இடத்தில் மட்டுமே வங்கிகளை வைத்திருப்பார்.!
விவசாய வேலை வருடத்தில் 60 நாட்கள் இருந்தால் பெரிது.! அந்த 60 நாட்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருடம் முழுவதும் பசியாற வேண்டும்..!!
ஒரு விவசாய குத்தகைதாரராக இருப்பவர் அறுவடை செய்யும் 20 மூட்டையில்  15 மூட்டையை நிலக்கிழாரிடம் கொடுத்து விட்டு மீதமுள்ள 5 மூட்டை நெல்லை வைத்து வருடம் முழுவதும் பசியாற வேண்டும்.!
இவர்களால் உடை, வீடு, வீட்டு உபயோகப் பொருட்களைப் பற்றி சிந்திக்க முடியாது.!
தற்பொழுது அந்த ஆயிரம் வேலி நிலங்களை பிரித்து, குத்தகைதிரர்களிடம் கொடுத்து விடுவதால்..,
ஒவ்வொரு குத்தகை விவசாயிகளும் அந்த 20 மூட்டை நெல்லையும் தனதாக்கி கொள்கிறார்கள்.!
ஒரு விவசாயிக்கு 20 மூட்டை நெல் கிடைத்ததால், அவரது உணவு தேவை நிறைவடைகிறது. எனவே, தனது விவசாய தொழிலாளிக்கும் சற்று கூடுதலாக கூலி கொடுக்கிறார்.!
ஒரு விவசாயி தனக்கு 20 மூட்டை நெல் கிடைத்ததால் அருகில் உள்ள நகரத்திற்கு பேருந்தில் சென்று தனது குடும்பத்திற்கு தேவையான உடைகளை வாங்குகிறார்.!
ஒரு விவசாயி தனக்கு 20 மூட்டை நெல் கிடைத்ததால் அருகில் உள்ள நகரத்திற்கு தனது பிள்ளைகளை பேருந்தில் அனுப்பி படிக்க வைக்கிறார்.!
ஒரு விவசாயி தனக்கு 20 மூட்டை நெல் கிடைத்ததால் தனது இடத்தில் ஓரு வீடு கட்டுகிறார்.!
ஒரு விவசாயிக்கு 20 மூட்டை நெல் கிடைத்ததால்..,
ஒரு விவசாய தொழிலாளி.,
ஒரு பேருந்து ஓட்டுனர்,  நடத்துனர் மற்றும் பேருந்து முதலாளி..,
ஒரு துணிக்கடை தொழிலாளிகள் மற்றும் முதலாளி,
பள்ளி ஆசிரியர்கள்,
கட்டிட தொழிலாளிகள், கட்டுமானப் பொருட்களை விற்கும் முதலாளி மற்றும் தொழிலாளிகளிடத்தில் பொருளாதார மாற்றம் ஏற்படுகிறது.!
இவர்கள் அனைவரும் உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குகின்றனர்.!
உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் தேவைகள் அதிகரிப்பதால் அவைகளின் உற்பத்தி அதிகரிக்கிறது.!
உற்பத்தி நிலையங்களில் நிறைய தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதால் அவர்களுக்குத் தேவையான உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாகனங்களை வாங்குகிறார்கள்.!
உடைகள், வீட்டு உபயோகப் பொருட்களோடு வாகன உற்பத்தியும் அதிகரிக்கிறது.!
வீட்டு உபயோகப் பொருட்கள் வாகனங்கள் அதிகமாக விற்கப்படுவதால் அதிக விற்பனை நிலையங்கள், பழுது பார்க்கும் நிலையங்கள் அதிகரிக்கிறது.!
அங்கே பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.!
இவர்கள் எல்லோருடைய பொருளாதாரம் உயர்வதால், எல்லோரும் வீடு கட்டுகிறார்கள் அதனால் கட்டுமானத் தொழில் விரிவாக்கம் அடைகிறது. அங்கேயும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இவர்கள் அனைவரும் உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குகின்றனர்.!
அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்குகின்றனர், வங்கித் தொழில் விரிவடைகிறது.
அங்கேயும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இவர்கள் அனைவரும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து  துறை விரிவடைகிறது.
அங்கேயும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
தற்போது நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது.
நாட்டின் பொருளாதாரம் உயர்வதால் கல்வி, மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து துறைகளின் உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்கிறது.!
5 மூட்டை நெல் கிடைத்த விவசாயிடம் 20 மூட்டை நெல் கிடைத்ததால் ஒரு நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை சிந்தித்து பாருங்கள்.!
ஒருவரிடமிருந்த 1000 வேலி (7000 ஏக்கர்) நிலங்களை 500 விவசாயிகளிடம் பிரித்துக் கொடுத்ததால், ஒரு நாட்டில் ஏற்பட்ட மாற்றம் இது.!
இதைத்தான் கலைஞர் அவர்கள்..,
70களில் நில உச்ச வரம்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த இடத்திற்கு பட்டா வழங்கி, வீடு கட்டி கொடுத்து, TNPSC மற்றும் வாரியங்கள் மூலமாக அனைத்து தரப்பினருக்கும் அரசு வேலை வழங்கி...
தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற என்ஜினை தொடங்கி (Start) வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக