திங்கள், 27 டிசம்பர், 2021

ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக் கூடாது தாலிபான்கள் கட்டளை

 செல்லபுரம் வள்ளியம்மை  :  தாலிபான்களின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரித்து பேச்சு. மனித உரிமைகளும் பெண் உரிமைகளும் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியான விடயமாகும்
நகரங்களின் கலாச்சாரமும் கிராமங்களின் கலாச்சாரமும் வேறு வேறு
பழமைவாத சமூக குழுக்களின் கலாச்சாரங்களை உணராமல் போனால் .. பிளா பிளா பிளா பிளா
மனித உரிமைகளையும் பெண் உரிமை பற்றியும் பேசும்போது நாம் கவனமாக இருக்கவேண்டும்
அதாகப்பட்டது இதுவரையில் இம்ரான் கான் போர்த்தி வந்த ஜனநாயக பண்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அசல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குரலாக ஒலிக்கிறார் ..இதுதான் பாகிஸ்தானிய அரசியல்வாதிகள்
உள்ளே பச்சை சங்கித்தனம் வெளியே ஜனநாயக மதசார்பற்ற நடுவு நிலைமை

 மின்னம்பலம் : ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண்களுக்குத்தான் அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நன்னடத்தை மேம்பாடு மற்றும் குற்றத்தடுப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாதிக் அகிப், “பெண்கள் அதிக தூரம் குறிப்பாக 75 கிலோமீட்டருக்கு அதிகமாகப் பயணம் செய்வதாக இருந்தால் நெருங்கிய ஆண் உறவினர் ஒருவரின் துணையோடுதான் செல்ல வேண்டும்.
அதோடு வாகன உரிமையாளர்கள் பெண்களை முஸ்லிம்களின் ஆடையான பர்தா அணிந்து வந்தால் மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். வாகனங்களில் இசை ஒலிக்கக் கூடாது. பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ள வேண்டும்" என்று அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, பெண்கள் டி.வி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று தாலிபன்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலான பெண்கள் பர்தா அணிந்தபடியே வெளியில் வருகின்றனர். அவர்களின் உரிமைகள் தற்போது அதிக அளவில் பறிக்கப்பட்டிருக்கிறது. 1990ஆம் ஆண்டில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த போது பெண்களுக்கு இருந்த உரிமைகள்கூட இப்போது இல்லாமல் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக