Chinniah Kasi : சாத்தான்குளம் விவகாரத்தை கட்டுரை மூலம் அமபலப்படுத்திய பத்திரிகையாளர் பிரபாகருக்கு ரெட் இங்க் விருது...
29 December 2021 தீக்கதிர் மும்பை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி காவல்துறை விசாரணையில் இருவரும் உயிரிழந்தனர். இருவரும் தந்தை - மகன்கள் என்பதால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக அளவிலும் சில பத்திரிகைகள் காவல்துறையின் இந்த கொடூரத்தை செய்தியை வெளியிட்டு சாத்தான்குளம் சம்பவத்தை உரக்கச் சொன்னது.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? விடிய விடிய காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகள்? நிர்வாணமாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொடூரமாக தாக்கப்பட்டதையும், அதற்கான நேரடி சாட்சியையும் தன்னுடைய கட்டுரையாக எழுத, அக்கட்டுரை ”The Federal" பத்திரிகையில் வெளியாகியது.
இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தை மிக உன்னிப்பாக கவனித்து கட்டுரை வெளியிட்ட சிறப்பு புலனாய்வு செய்தி பத்திரிகையாளர் பிரபாகர் தமிழரசுக்கு மனித உரிமைகள் பிரிவில் சிறந்த பத்திரிகையாளர் (ரெட் இங்க்) விருதை மும்பை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்துள்ளது.
இந்த விருதுக்கு ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், மும்பை உயர் நீதிமனத்தில் சீனியர் கவுன்சில் அஸ்பி சினாய், மூத்த பத்திரிகையாளர் அனுராக் சதுர்வேதி, பத்திரிகையாளர்கள் பிரபாகர், குமார் சம்பவ் உட்பட 5 பேர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், இருவருக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மற்றொருவர் குமார் சம்பவ் என்ற பத்திரிகையாளர் மோடி அரசின் துறை ரீதியான புள்ளி விவரங்கள் அடங்கிய கட்டுரையை ஹஃப்ஸ்பாட்டில் வெளியிட்டு இருந்தார்.
ரெட் இங்க் விருது வென்ற தமிழநாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரபாகருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை பத்திரிகையாளர் மன்றம் ரெட் இங்க் விருதை இந்திய பத்திரிகையாளர்களை கவுரப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக