டெல்லியில்
நடந்த ஆம் ஆத்மி செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி அரவிந்த்
கெஜ்ரிவால், ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார். இதில் காங்கிரஸ்
துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி
உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த
பட்டியலில் தனது பெயரை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிதின்
கட்காரி, இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
கூறி அவருக்கு மானநஷ்ட நோட்டீசு அனுப்பினார்.
ஆனால்,
இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆம் ஆத்மி
செய்தி தொடர்பாளர் அசுதோஷ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்
கூறுகையில், கட்காரியின் ஊழலை பா.ஜனதாவே நம்பியதால் தான், அவருக்கு 2-வது
முறையாக தலைவர் பதவி வழங்கவில்லை. எனவே அவர் பா.ஜனதா மீது தான் மானநஷ்ட
வழக்கு தொடர வேண்டும் என்றார்
சனி, 1 பிப்ரவரி, 2014
தற்காப்புக்காக கொலை செய்த கல்லூரி மாணவி விடுதலை ! பலாத்காரம் செய்ய முயன்ற அக்காள் கணவனை கொன்றார்
சென்னையில் பாலத்காரம் செய்ய முயன்ற அக்காள் கணவரை தற்காப்புக்காக கொலை செய்த கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாமல் காவல்துறையினர் விடுவித்தனர் சென்னையை அடுத்த மாதவரம் டெலிபோன் காலனியில் வசித்தவர் மேத் இவர் ஹேமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் இல்லாததால் ஹேமாவின் தங்கை ஹரிப்பிரியா, அவருடனே வசிதது வந்தார். அக்காள் கணவன் மேத்யூ, ஹரிப்பிரியாவிற்கு கடந்த 7ஆண்டுகளாக அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் ஹரிப்பிரியா மிகுற்த மனஉளைச்சலில் இருந்தார். வியாழக்கிழமையன்று அதிகமாக மது அருந்திய மேத்யூ, போதையின் உச்சத்தில் தனது மனைவி ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்துள்ளார். பின்னர் வெளியே தள்ளி கதவை பூட்டிய அவர். ஹரிப்பிரியாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
MGR., சோபன்பாபு, சசிகலா பற்றி ஜெயலலிதா கூறியதை நாங்கள் பேச அனுமதிப்பார்களா? மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழக
சட்டப்பேரவைக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள்
புறக்கணித்துள்ளனர். சனிக்கிழமை மற்றும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும்
கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக பொருளாளரும், திமுக சட்டமன்ற கட்சித்
தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரவையில்
திமுக தலைவர் கலைஞர் பற்றி ஆளும் கட்சியினர் அவதூறாக பேசுவதற்கு அனுமதி
அளித்ததோடு, அவை குறிப்பிலும் இடம்பெற்றிருப்பதாக கூறிய அவர், கலைஞரை
பற்றிய அவதூறு கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கும்படி
துரைமுருகன் பேசியதை ஏற்காததோடு, அவரது பேச்சை அவை குறிப்பில்
சேர்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
/> சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சை அவை குறிப்பிலே பதிவு செய்யக் கூடிய சூழ்நிலையில் சட்டமன்றம் நடக்கும் என்று சொன்னால், இன்றைக்கு முதல் அமைச்சராக இருக்கக் கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய உடன்பிறவா சகோதரியாக இருக்கக் கூடிய சசிகலா அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தார்களையும் பலமுறை கட்சியை விட்டு நீக்கி, அவர்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை, என் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழ்நிலையில் அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கிறது என்று முதலமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்களே பட்டவர்த்தனமாக, பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். முதல்ல ஸ்டாலின் அவர்களே உங்கள் பேச்சில் இலக்கணப்பிழை தாராளமாக இருக்கிறது , அதென்ன இருக்கக்கூடிய இருக்கக்கூடிய ? முதலமைச்சராக இருக்கும் என்று சொல்லவேண்டிய இடங்களில் எல்லாம் இருக்க கூடிய ? சகோதரியாக இருக்க கூடிய ! யாராவது ஸ்டாலினுக்கு அடிப்படை தமிழ் இலக்கணத்தை சொல்லி கொடுங்களேன்
/> சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சை அவை குறிப்பிலே பதிவு செய்யக் கூடிய சூழ்நிலையில் சட்டமன்றம் நடக்கும் என்று சொன்னால், இன்றைக்கு முதல் அமைச்சராக இருக்கக் கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய உடன்பிறவா சகோதரியாக இருக்கக் கூடிய சசிகலா அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தார்களையும் பலமுறை கட்சியை விட்டு நீக்கி, அவர்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை, என் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழ்நிலையில் அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கிறது என்று முதலமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்களே பட்டவர்த்தனமாக, பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். முதல்ல ஸ்டாலின் அவர்களே உங்கள் பேச்சில் இலக்கணப்பிழை தாராளமாக இருக்கிறது , அதென்ன இருக்கக்கூடிய இருக்கக்கூடிய ? முதலமைச்சராக இருக்கும் என்று சொல்லவேண்டிய இடங்களில் எல்லாம் இருக்க கூடிய ? சகோதரியாக இருக்க கூடிய ! யாராவது ஸ்டாலினுக்கு அடிப்படை தமிழ் இலக்கணத்தை சொல்லி கொடுங்களேன்
வட கொரிய ஜனாதிபதி உத்தரவில் மாமா குடும்பத்தில் 100 பேர் -இரு தூதர்கள் உட்பட- சுட்டு கொலை!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தமது மாமாவின் குடும்பத்தை சேர்ந்த
அனைவரையும் – பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100 பேர் – கொன்றுவிட
உத்தரவிட்டதாகவும், அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் எனவும், தென்கொரியாவின்
யொன்ஹாப் நியூஸ் ஏஜென்சி பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
மாமாவின் உறவினர்கள் என சுட்டு கொல்லப்பட்டவர்களில், வட கொரியாவின் வெளிநாட்டு தூதர்களாக இருந்த இருவரும் அடக்கம்!
கடந்த டிசெம்பரில் வட கொரிய இளம் ஜனாதிபதி கிம் ஜொங் உத்தரவுப்படி, ஆலோசனைக் கூட்டம் ஒன்றின் இடைநடுவே அவரது மாமா ஜாங் சொங்-தீக் காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரத்தில், அவரை சுட்டுக் கொல்லும்படி ஜனாதிபதியின் உத்தரவு வந்தது.மாமாவுக்கு மரணதண்டனை உத்தரவை பிறப்பித்தபோது, ஜனாதிபதி கிம் ஜொங் ‘தலை தூக்க முடியாத அளவில்’ போதையில் இருந்தார் எனவும், தகவல் வெளியானது.
மாமாவின் உறவினர்கள் என சுட்டு கொல்லப்பட்டவர்களில், வட கொரியாவின் வெளிநாட்டு தூதர்களாக இருந்த இருவரும் அடக்கம்!
கடந்த டிசெம்பரில் வட கொரிய இளம் ஜனாதிபதி கிம் ஜொங் உத்தரவுப்படி, ஆலோசனைக் கூட்டம் ஒன்றின் இடைநடுவே அவரது மாமா ஜாங் சொங்-தீக் காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரத்தில், அவரை சுட்டுக் கொல்லும்படி ஜனாதிபதியின் உத்தரவு வந்தது.மாமாவுக்கு மரணதண்டனை உத்தரவை பிறப்பித்தபோது, ஜனாதிபதி கிம் ஜொங் ‘தலை தூக்க முடியாத அளவில்’ போதையில் இருந்தார் எனவும், தகவல் வெளியானது.
காங்கிரஸ் தலைமைக்கு திமுக தகவல் : தேமுதிக இல்லாமலேயே ஜெயித்துவிடலாம்
காங்கிரஸையும் அழைத்து வந்தால் திமுக கூட்டணிக்கு தயார் என
யோசனை சொல்கிறார் விஜயகாந்த். ஆனால், காங்கிரஸோடு கூட்டணி வைப்பது
காங்கிரஸையும் திமுக-வையும் சேர்த்தே குழியில் தள்ளிவிடும் என திமுக
தரப்பிலிருந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பக்குவமாக தகவல் சொல்லி அனுப்பப்
பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின்
குலாம்நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது
மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து குலாம் நபி பேச்செடுத்தபோது,
’அதற்கு இப்போது வாய்ப்பில்லை. தேர்தலில் போட்டியிட்டு பாஜக-வைவிட கூடுதலான
இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறட்டும் அப்போது நாங்கள் காங்கிரஸை
ஆதரிக்கிறோம்’ என்று கருணாநிதி சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
(Lone Survivor) ஹாலிவுட் ஷோ: எதிரி மண்ணில் கருணை மனிதர்கள்
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானை
முகாமிட்ட அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப் படையினரால் பின்லேடனை அங்கு
வைத்துப் பிடிக்க முடியவில்லை. கடைசியில் பாகிஸ்தானில் ராணுவக்
கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகிலேயே ஒரு மாளிகையில் குடும்பத்துடன்
வசித்துவந்த பின்லேடனை அமெரிக்காவின் கடற்படையின் சிறப்புப் பிரிவான நேவி
சீல் வீரர்கள் சுட்டு கொன்றனர். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக
’பயங்கரவாதத்துக்கு எதிரான’ அமெரிக்கப் படைகளின் போரும் பதிலுக்குத்
தாலிபன்கள் அனுதினம் நடத்திக்கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளும் ஆப்கன்
மக்களின் வாழ்வில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த ஆண்டின் இறுதியில் ஆப்கனை விட்டு அமெரிக்கப் படைகள்
வெளியேறவுள்ள நிலையில், தாலிபன் தலைவரைப் பிடிக்கச் சென்று எதிர்பாராத
விதமாக மாட்டிக்கொண்ட ஒரு சீல் குழுவைப் பற்றிய உண்மைக் கதையை
அடிப்படையாகக் கொண்ட படமான ‘லோன் சர்வைவர்’ (Lone Survivor) வரும் 31ஆம்
தேதி இந்தியாவில் வெளியாகிறது.
ஒன்றரை வயது குழந்தை சாவு: இந்திய பெற்றோர் கைது
அமெரிக்காவில் பணிப்பெண் தாக்கியதால் ஒன்றரை வயது
குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், முன்னெச்சரிக்கையை மீறி அந்தப்
பணிப்பெண்ணிடம் குழந்தையை விட்டுச் சென்ற இந்தியப் பெற்றோரை போலீஸார் கைது
செய்துள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றி வரும் மணி சிவகுமார் (33) மற்றும் தேன்மொழி (24) ஆகியார், தங்கள் குழந்தை அதியனை கவனித்துக்கொள்ள கிஞ்சால் படேல் (27) என்பவரை பணியமர்த்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி குழந்தை அதியன் முகத்தில் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்ததையடுத்து அவனை கிஞ்சாலிடம் விடவேண்டாம் என பெற்றோரிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், ஜனவரி 16}ஆம் தேதி தலையில் பலத்த காயம் பட்ட குழந்தை அதியன் 19-ஆம் தேதி உயிரிழந்தான். அவன் மீது ஆத்திரத்தில் தாக்கியதாகவும், அப்போது தலையில் அடிபட்டதாகவும் கைது செய்யப்பட்ட கிஞ்சால் படேல் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, எச்சரிக்கையையும் மீறி குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக மணி மற்றும் தேன்மொழியை போலீஸார் கைது செய்தனர்.dinamani.com/
அமெரிக்காவில் பணியாற்றி வரும் மணி சிவகுமார் (33) மற்றும் தேன்மொழி (24) ஆகியார், தங்கள் குழந்தை அதியனை கவனித்துக்கொள்ள கிஞ்சால் படேல் (27) என்பவரை பணியமர்த்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி குழந்தை அதியன் முகத்தில் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்ததையடுத்து அவனை கிஞ்சாலிடம் விடவேண்டாம் என பெற்றோரிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், ஜனவரி 16}ஆம் தேதி தலையில் பலத்த காயம் பட்ட குழந்தை அதியன் 19-ஆம் தேதி உயிரிழந்தான். அவன் மீது ஆத்திரத்தில் தாக்கியதாகவும், அப்போது தலையில் அடிபட்டதாகவும் கைது செய்யப்பட்ட கிஞ்சால் படேல் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, எச்சரிக்கையையும் மீறி குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக மணி மற்றும் தேன்மொழியை போலீஸார் கைது செய்தனர்.dinamani.com/
அழகிரியின் பிறந்த நாள், 50 ஆயிரம் பேர் வரை திரண்டதால், கட்சித் தலைமை அதிர்ச்சி
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, தென்மண்டல
அமைப்புச் செயலர், அழகிரியின் பிறந்த நாள் விழாவுக்கு, 50 ஆயிரம் பேர் வரை
திரண்டதால், கட்சித் தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால், அழகிரியை
சமாதானப்படுத்துவதற்கான, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன. முதல்
ஆளாக, கருணாநிதியின் மகள் செல்வி, அழகிரியுடன் பேசியுள்ளார்.
ஆதரவாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்து, கட்சித் தலைவரும், தந்தையுமான, கருணாநிதியுடன் ஆவேச வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதனால், தானும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்டான, அழகிரி, நேற்று முன்தினம், மதுரையில், தன், 63வது பிறந்த நாளை கொண்டாடினார்.வழக்கமாக கொண்டாடப்படும் பிறந்த நாளை விட, இந்த பிறந்த நாளை, வேண்டுமென்றே, அவரின் ஆதரவாளர்கள் விமரிசையாக கொண்டாடினர். பிறந்த நாள் விழாவுக்கு, மூன்று எம்.பி.,க்கள் உட்பட, 50 ஆயிரம் பேர் வரை திரண்டனர்.மேலும், பிறந்த நாள் கொண்டாடிய அழகிரிக்கு, எதிர்பாராத சிலர் தரப்பிலிருந்தும், வாழ்த்துக்கள் வந்ததால், படுகுஷியானார்.
ஆதரவாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்து, கட்சித் தலைவரும், தந்தையுமான, கருணாநிதியுடன் ஆவேச வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதனால், தானும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்டான, அழகிரி, நேற்று முன்தினம், மதுரையில், தன், 63வது பிறந்த நாளை கொண்டாடினார்.வழக்கமாக கொண்டாடப்படும் பிறந்த நாளை விட, இந்த பிறந்த நாளை, வேண்டுமென்றே, அவரின் ஆதரவாளர்கள் விமரிசையாக கொண்டாடினர். பிறந்த நாள் விழாவுக்கு, மூன்று எம்.பி.,க்கள் உட்பட, 50 ஆயிரம் பேர் வரை திரண்டனர்.மேலும், பிறந்த நாள் கொண்டாடிய அழகிரிக்கு, எதிர்பாராத சிலர் தரப்பிலிருந்தும், வாழ்த்துக்கள் வந்ததால், படுகுஷியானார்.
அ.தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் : பா.ம.க., ராமதாஸ் ஆவேச பேச்சு
தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாகவிளங்குகிறது,” என, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
சேலத்தில், பா.ம.க., சார்பில், மது ஒழிப்பு குறித்த பெண்கள் மாநாட்டுக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது:குழந்தைகளுக்கு ஓட்டுகள் இல்லை. ஆனால், அவர்களே, இன்று ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என, தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிப்பது, எங்களின் எதிர்காலத்தை விற்பனை செய்யாதீர்கள் என்பதே.கோடி, கோடியாக கொட்டி வைத்துள்ள ஊழல், லஞ்ச கறுப்பு பணம் மூலம், ஓட்டுகள், 2,000, 3,000 ரூபாய்க்கு, தேர்தல் நேரங்களில், விலை பேசப்படுகின்றன. கள்ளப் பணத்தில் இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது.'ஆம் ஆத்மி' கட்சி, ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஓட்டுகளையும் விலைக்கு வாங்கவில்லை.
சேலத்தில், பா.ம.க., சார்பில், மது ஒழிப்பு குறித்த பெண்கள் மாநாட்டுக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது:குழந்தைகளுக்கு ஓட்டுகள் இல்லை. ஆனால், அவர்களே, இன்று ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என, தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிப்பது, எங்களின் எதிர்காலத்தை விற்பனை செய்யாதீர்கள் என்பதே.கோடி, கோடியாக கொட்டி வைத்துள்ள ஊழல், லஞ்ச கறுப்பு பணம் மூலம், ஓட்டுகள், 2,000, 3,000 ரூபாய்க்கு, தேர்தல் நேரங்களில், விலை பேசப்படுகின்றன. கள்ளப் பணத்தில் இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது.'ஆம் ஆத்மி' கட்சி, ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஓட்டுகளையும் விலைக்கு வாங்கவில்லை.
வெள்ளி, 31 ஜனவரி, 2014
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு ! ஜூனியர் விகடனின் மோடித்துடிப்பு அயோக்கியத்தனம்.
டாடா இன்னபிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மைய
அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்று பர்கா தத்தும், நீரா ராடியாவும்
‘ஆத்மார்த்த’மாக உரையாடுவதைப் பார்க்கும் தமிழக ஊடக ஆசாமிகளுக்கும் அந்த
ஆசை வராமலா இருக்கும்? இதனால் அதிமுக அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும்
என்று இவர்கள் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ‘அம்மா’வை
சும்மா என்று எழுதினாலே சுளுக்கும், வழக்கும் உறுதி என்பதால் இவர்கள்
பார்க்கும் தரகு வேலையில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வும், பாதுகாப்பு
ஏற்பாடுகளும் அதாவது அடிமைத்தனம் கண்டிப்பாக இருக்கும்.
ஜூனியர் விகடனின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான ப.திருமாவேலன் தமிழ்நாட்டின் பர்கா தத்தாக படியேறுவதற்கு ஒரு தரம் தாழ்ந்த வேலையில் இறங்கியிருக்கிறார். தமிழகத்தில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளான பாஜகவை ஆளாக்குவதற்கு காவி போதையில் திளைக்கும் கண்றாவி காந்தியவாதி தமிழருவி மணியன் மாமா வேலை பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில் மீடியா பார்ட்டனர்களாக தினமலர், தினமணி, புதிய தலைமுறை, துக்ளக், குமுதம் இன்னபிற ஊடகங்கள் தீவிரமாக கதை எழுதி வருகின்றன. எனினும் மோடி பிரதமர் ஆக முடியவில்லை என்றால் ஜெயா பிரதமராக பாஜக உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் சோ போன்றவர்கள் பாஜகவை ஆதரிப்பது போன்று மற்ற பத்திரிகைகளும் அதிமுகவையும் விட்டுக் கொடுக்காமல் செய்திகளை படைத்து வருகின்றன.
இதில் மோடிக்கு பக்க மேளம் வாசிக்கும் கார்ப்பரேட் தமிழ் ஊடங்களையெல்லாம் விஞ்சும் தலைமைப் பார்ட்டனராக ஜூவியின் திருமாவேலன் அல்லும் பகலும் பொய்யும் புனைவுமாக பாடுபாட்டு வருகிறார். மோடிதான் அடுத்த பிரதமர் என்று பாஜக கும்பல், கார்ப்பரேட் மற்றும் ஊடக, இணைய விளம்பர நிறுவனங்களோடு கிளப்பி விட்ட புகையின் போதே திருமாவேலனும் ஜூவியை அதற்கு கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். முத்தாய்ப்பாக “எந்தக் கூட்டணி ஜெயிக்கும்…. அடுத்த பிரதமர் யார்? ஜூ.வி மெகா சர்வே ரிசல்ட்” என்ற தலைப்பில் 19.01.14 தேதியிட்ட இதழில் ஒரு அட்டைப்பட செட்டப் கட்டுரை வந்திருக்கிறது.
ஜூனியர் விகடனின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான ப.திருமாவேலன் தமிழ்நாட்டின் பர்கா தத்தாக படியேறுவதற்கு ஒரு தரம் தாழ்ந்த வேலையில் இறங்கியிருக்கிறார். தமிழகத்தில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளான பாஜகவை ஆளாக்குவதற்கு காவி போதையில் திளைக்கும் கண்றாவி காந்தியவாதி தமிழருவி மணியன் மாமா வேலை பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில் மீடியா பார்ட்டனர்களாக தினமலர், தினமணி, புதிய தலைமுறை, துக்ளக், குமுதம் இன்னபிற ஊடகங்கள் தீவிரமாக கதை எழுதி வருகின்றன. எனினும் மோடி பிரதமர் ஆக முடியவில்லை என்றால் ஜெயா பிரதமராக பாஜக உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் சோ போன்றவர்கள் பாஜகவை ஆதரிப்பது போன்று மற்ற பத்திரிகைகளும் அதிமுகவையும் விட்டுக் கொடுக்காமல் செய்திகளை படைத்து வருகின்றன.
இதில் மோடிக்கு பக்க மேளம் வாசிக்கும் கார்ப்பரேட் தமிழ் ஊடங்களையெல்லாம் விஞ்சும் தலைமைப் பார்ட்டனராக ஜூவியின் திருமாவேலன் அல்லும் பகலும் பொய்யும் புனைவுமாக பாடுபாட்டு வருகிறார். மோடிதான் அடுத்த பிரதமர் என்று பாஜக கும்பல், கார்ப்பரேட் மற்றும் ஊடக, இணைய விளம்பர நிறுவனங்களோடு கிளப்பி விட்ட புகையின் போதே திருமாவேலனும் ஜூவியை அதற்கு கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். முத்தாய்ப்பாக “எந்தக் கூட்டணி ஜெயிக்கும்…. அடுத்த பிரதமர் யார்? ஜூ.வி மெகா சர்வே ரிசல்ட்” என்ற தலைப்பில் 19.01.14 தேதியிட்ட இதழில் ஒரு அட்டைப்பட செட்டப் கட்டுரை வந்திருக்கிறது.
சாமியார் அசராம் பாபுவுக்கு 10 ஆயிரம் கோடி சொத்து!
10 ஆயிரம் கோடி சொத்து!
டெல்லி,
ராஜஸ்தான், குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ள
பிரபல சாமியார் அசராம் பாபு மீது உ.பி.யை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த
ஆண்டு பாலியல் புகார் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள
ஆசிரமத்தில் தன்னை சாமியார் பல முறை பலாத்காரம் செய்ததாக புகாரில்
கூறியிருந்தார்.
கோர்ட் உத்தரவை தொடர்ந்து அசராம் பாபுவை
போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு
வந்தவுடன் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் அசராம் பாபு
மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் மீது பாலியல் புகார் கூறினர். இந்த
வழக்கிலும் அசராம் பாபு கைது செய்யப்பட்டார். 2 மாதம் தலைமறைவாக இருந்த
நாராயண் சாயையும் போலீசார் அரியானா எல்லை அருகே பிடித்தனர்.
முதல்
பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை
நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அசராம் பாபுவின் ஆசிரமங்களில் போலீசார்
அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக முகலாயர்களின் ஆட்சி போல அழிந்துவிடும்! சு சுவாமி
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என்று பாஜகவில் தனது
ஜனதா கட்சியை இணைத்துக் கொண்ட சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்
கூறுகையில்,
தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே
பாஜக மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன். என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா,
இல்லையா என்று தெரியவில்லை. அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யட்டும். அது
முடிந்து போன கதை.
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும்: சொல்கிறார் சு.சாமி
அழகிரி, ஸ்டாலின் மோதல் திராவிட இயக்கங்கள் அழிந்து போவதற்கான அறிகுறி.
ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக்
கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிந்துவிட்டது.
பத்மபூஷண் விருதை மறுப்பு:! நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்
டெல்லி, ஜன. 31–
பத்ம விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.
அதில் மறைந்த நீதிபதி வர்மாவுக்கு மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நீதிபதி வர்மா குடும்பத்தினர் தற்போது பத்ம பூஷண் விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதில் அவர், ‘‘என் கணவர் வர்மா எந்த பரிசையும் விருதையும் ஏற்காதவர். சிறந்த நீதிபதி என்ற கவுரவத்தையே விரும்பினார். எனவே அவர் விருப்பத்துக்கு மாறாக அரசு கொடுக்கும் பத்ம பூஷண் விருதை ஏற்க இயலாது’’ என்று கூறியுள்ளார்.
இவ்வளவு கூட்டம் கூடியதா? அழகிரிக்கு நிஜமாகவே எக்கச்சக்க எண்ணிக்கையில் ஆதரவு இருக்கிறது!
தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரான மு.க.அழகிரி, நேற்று (வியாழக்கிழமை) மதுரையில் தனது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடினார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடந்த பிறந்த நாள் விழாவில் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டதால், கட்சித் தலைமை கலக்கமடைந்துள்ளது.
பிறந்த நாளை ஆதரவாளர்களுடன் மதுரையில் கோலாகலமாக கொண்டாடிய போதிலும், ஸ்டாலின் பற்றி அவதூறான பேச்சுகளை பேசியதாக கருணாநிதி கூறிய குற்றச்சாட்டால் அழகிரியின் முகத்தில் சற்று கவலை தென்பட்டது. அதுமட்டுமின்றி அவரது மனைவி, மகன், மகள் உட்பட அவரது குடும்பத்தினரின் முகங்களிலும் கவலை இழையோடியதை கண்கூடாக் காண முடிந்தது.
மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் யாகம் நடத்தப்பட்டது. நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. அதன்பின் காலை 8.45 மணிக்கு அழகிரி தனது மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி மற்றும் குடும்பத்தினர், ஆதரவாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டினார். அப்போது வாணவேடிக்கை (பகலில்!), பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
சேலம்: ஸ்கை டைவிங் பயிற்சியில் பெண் பலி ! பாராசூட் விரியவில்லை. -
சேலம்:சேலம்
மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து
சென்னைக்கு விமானம் இயக்கப்பட்டது. போதிய பயணிகள் வராததால் நஷ்டம்
ஏற்பட்டதை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விமான
நிலையத்தில் கலெக்டர் அனுமதியுடன் டெல்லியை சேர்ந்த இந்தியா ஸ்கை டைவிங்
பாராசூட் அசோசியேஷன் சார்பில், சிறிய வகை விமானத்தில் இருந்து பாராசூட்
கட்டிக் கொண்டு குதிக்கும் பயிற்சி (ஸ்கை டைவிங்) கடந்த 24ம் தேதி
துவங்கியது. இதில் பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோத் (28),
அவரது மனைவி ரம்யா (26) உள்ளிட்ட 11 பேர் பயிற்சி பெற்று வந்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் வினோத்தும், ரம்யாவும் பயிற்சிக்கு சென்றனர். ரம்யாவுடன் பயிற்சியாளர்கள் மோகன்ராவ், ஆஷ் ஆகியோர் விமானத்தில் சென்றனர். சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்த போது, பாராசூட் கட்டிக் கொண்டு ரம்யா குதித்தார். அப்போது, பாராசூட் விரியாததால், பொட்டையாபுரம் என்னுமிடத்தில் காட்டுப் பகுதியில் அவர் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
நேற்று காலை 11 மணியளவில் வினோத்தும், ரம்யாவும் பயிற்சிக்கு சென்றனர். ரம்யாவுடன் பயிற்சியாளர்கள் மோகன்ராவ், ஆஷ் ஆகியோர் விமானத்தில் சென்றனர். சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்த போது, பாராசூட் கட்டிக் கொண்டு ரம்யா குதித்தார். அப்போது, பாராசூட் விரியாததால், பொட்டையாபுரம் என்னுமிடத்தில் காட்டுப் பகுதியில் அவர் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Raid ! S.R,Gopi,,,,.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!
மு.க.அழகிரியின்
நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான
எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் பண்ணை தோட்டத்தில் மதுரை
போலீசார் சுமார் 20க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையால் மதுரை திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையால் மதுரை திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையால் மதுரை திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அழகிரி, ஸ்டாலின் பிரச்சினையைத் ஆற்காடு வீராசாமி தீர்த்து வைத்திருப்பாரோ...?
ஆற்காடு வீராசாமி இருந்திருந்தால் அழகிரி, ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்த்து
வைத்திருப்பாரோ...!?
சென்னை: திமுகவில் தலைமைக்கும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் இடையே உள்ள
இடைவெளியை குறைக்க மீண்டும் ஒரு ஆற்காடு வீராசாமி தேவை என திமுகவில் புதிய
குரல்கள் கேட்கது வங்கியுள்ளதாம்.
ஆற்காடு நா. வீராசாமி, திமுகவில் அதன் தலைவர் கருணாநிதியின் அன்புக்கு
பாத்தியப்பட்டவர். கருணாநிதியின் மனம் அறிந்தவர், அதற்கேற்ப செயல்படுவர்
என்பதால், திமுக இரண்டாம் கட்ட தலைவர்களிடம் அற்காட்டார் மீது மிகுந்த
மரியாதை உண்டு.
திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம், மிக முக்கிய இலாகாவில் வீராசாமி
அமைச்சராக அமர்வார். திமுக பொருளாளராகவும், தற்போது திமுகவின் முதன்மைச்
செயலாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் முன்பு போல இவர் தீவிர அரசியலில்
ஈடுபடவில்லை.
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக
பணியாற்றிய போது, தமிழத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதன்
காரணமாக, திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக
ஆற்காடு வீராசாமி மீது கருணாநிக்கு மிகவும் வெறுப்பானது. அதன் பிறகுதான்
ஆற்காடு வீராசாமியின் செல்வாக்கு மங்கிப் போனதாக கூறப்படுவதுண்டு.
ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் ! அழகிரியின் கேள்விக்கு கலைஞர் இன்னும் சரியான பதிலை சொல்லவே இல்லை!
திருவாரூர். 1938. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
14 வயது கருணாநிதியின் மனதில் அரசியல் விதையாக விழுகிறது அழகிரியின்
பேச்சு. பின் கருணாநிதி மாணவர் மன்றம் தொடங்குகிறார்; பத்திரிகை
தொடங்குகிறார்; பேசுகிறார், எழுதுகிறார், நாடகம் போடுகிறார்; பெரியார்,
அண்ணாவைச் சந்திக்கிறார்… பின்னர் நடந்தவை எல்லாம் வரலாறு. சரியாக 75
ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியின் வரலாற்றில் பட்டுக்கோட்டை அழகிரி
இடம்பெற்ற சூழலையும் இன்றைக்கு மு.க.அழகிரி இடம்பெறும் சூழலையும் இணைத்துப்
பாருங்கள்… திராவிட இயக்கமும் கருணாநிதியும் தமிழக அரசியல் சூழலும்
எவ்வளவு சீரழிந்திருக்கின்றன!
திராவிட இயக்கத்தின்பால் பற்றுகொண்ட எவரும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தக்
கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள்: கருணாநிதிக்குப் பின் தி.மு.க.
என்னவாகும்? இதோ அதையும் தன் காலத்திலேயே நடத்திக்காட்ட ஆரம்பித்துவிட்டார்
கருணாநிதி. .நீரா ராடியா உரையாடலில் ராசா, கனிமொழிக்கு எதிராக மாறன்கள் நகர்த்திய காய்களையும், மாறன்களையும் ஸ்டாலினையும் ...
ஜெயலலிதா வழக்கை : நான்கு மாதங்களில் தீர்வு காண வேண்டும் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோரை விடுவிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்து விட்டது. அவர்கள் மீதான, இந்த வழக்கை விசாரிக்க, விசாரணை நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிய சுப்ரீம் கோர்ட், நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இருவரும் இணைந்து உருவாக்கிய, 'சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த, 1991 - 92, 1992 - 93 மற்றும் 1993 - 94ம் ஆண்டுகளில், வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இது குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, வருமான வரித்துறை, 1996 - 97ல், ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.
IAS IPS அதிகாரிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் இனி இடமாற்றம் செய்ய முடியாது
புதுடில்லி: நாட்டின் உயரிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை, அரசியல்வாதிகளான ஆட்சியாளர்கள், இஷ்டத்திற்கு, இடமாற்றம் செய்து, தூக்கியடிக்கும் நிர்வாக சீர்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள், அதே பணியிடத்தில் பணியாற்ற வேண்டும். அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கென, ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட உள்ள, 'சிவில் சர்வீசஸ் போர்டு' அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையை விட ஐம்பத்தெட்டு வயது வரை நிரந்தரமான வேலையை பெற்றுள்ள அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைதான்திக
வியாழன், 30 ஜனவரி, 2014
சமண முனிவர்களின் அரிய குகை ஓவியங்கள் சித்தன்வாசலில் கண்டுபிடிப்பு ( படங்கள்)
சித்தன்னவாசலில்
இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகையில் ஓவியங்கள் உள்ளதாக மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் ஆய்வு செய்து இதுவரை
யாரும் அறிந்திடாத பல ஓவியங்களை கண்டறிந்து அவற்றை புகைப்படத்துடன்
வெளியிட்டார். மேலும் அந்த ஓவியங்கள் குறித்து அவர்தெரிவித்துள்ளதாவது:
; நான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாறை ஓவியங்களைப் பார்த்த பின்பு
வரலாறுகள் புதைந்து கிடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதேனும் பாறையைப்
பார்க்கும்போதெல்லாம் கண்கள் அதே போன்ற ஓவியங்களைத் தேடத் தொடங்கின. அதேபோல
சித்தன்ன வாசலிலும் இதுவரை அறியப்படாத ஓவியங்கள் இருப்பதைக் கண்டபோது
என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
சித்தன்ன வாசல் புதுக்கோட்டையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சித்தன்ன வாசல் நுழைவாயிலின் இருபுறமும் பெருங்கற்கால (கி.மு.1500 - கி.பி. 500) கல்திட்டைகள், கல் பதுக்கைகள், கல்கிடை, கல்குவை, புதைகுழிகள் எனத் தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. தற்போது சித்தன்ன வாசல் நுழைவாயில் வரவேற்பு வளைவு தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. படகுக் குழாம், சிறுவர் பூங்கா, இயற்பியல் தத்துவப் பூங்கா, சிற்பக்கூடம், இசை நீரூற்று, தமிழன்னை சிலை ஆகியன சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. அறிவர் கோயில் ஓவியங்கள்
சித்தன்ன வாசல் புதுக்கோட்டையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சித்தன்ன வாசல் நுழைவாயிலின் இருபுறமும் பெருங்கற்கால (கி.மு.1500 - கி.பி. 500) கல்திட்டைகள், கல் பதுக்கைகள், கல்கிடை, கல்குவை, புதைகுழிகள் எனத் தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. தற்போது சித்தன்ன வாசல் நுழைவாயில் வரவேற்பு வளைவு தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. படகுக் குழாம், சிறுவர் பூங்கா, இயற்பியல் தத்துவப் பூங்கா, சிற்பக்கூடம், இசை நீரூற்று, தமிழன்னை சிலை ஆகியன சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. அறிவர் கோயில் ஓவியங்கள்
அழகிரி மகன் துரை தயாநிதி : ஸ்டாலின் அப்பாவோட ஆதரவாளர்களை வேட்டையாடுகிறார்
சென்னை: திமுக தலைவராவதற்காக தமது தந்தையின் ஆதரவாளர்களை
வேட்டையாடுகிறார் மு.க. ஸ்டாலின் என்று மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி
சாடியுள்ளார்.
திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதை தொடர்ந்து களத்தில் அவரது மகன்
துரை தயாநிதியும் குவித்திருக்கிறார். தமது தாத்தாவும் திமுக தலைவருமான
கருணாநிதியை பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து வந்தார்.
மேலும் கவுண்டமணி, விஜய்சேதுபதி படங்களைப் போட்டு கருணாநிதியை கலாய்த்துக்
கொண்டிருந்தார். அத்துடன் ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இப்படி ஒரு பொய்யான
அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் சாடினார் துரை தயாநிதி.
மேலும் மு.க. அழகிரியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நேற்றே தொடங்கியும்
வைத்தார் துரை தயாநிதி. ட்விட்டரில் தமது தந்தை மு.க. அழகிரிக்கு ஆதரவு
அளிக்க கோரி வேண்டுகோளும் விடுத்து வருகிறார் அவர்.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துரை தயாநிதி,
என்னுடைய அப்பாவின் ஆதரவாளர்களை கண்டு அஞ்சி ஸ்டாலின் அவர்களை
நீக்குகிறார். திமுகவின் அடுத்த தலைவராக வேண்டும் என்பதற்காக எனது
அப்பாவின் ஆதரவாளர்களை ஸ்டாலின் வேட்டையாடுகிறார்.
என் அப்பா அழகிரி மீது தாத்தா கருணாநிதி பொய்யான குற்றச்சாட்டுகளை
கூறுகிறார். இருப்பினும் நாங்கள் திமுகவை விட்டு வெளியேற மாட்டோம். லோக்சபா
தேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை
நிறுத்தமாட்டோம் என்றார்.
amil.oneindia.in
amil.oneindia.in
சமரசத்துக்கு அழகிரி 2 நிபந்தனைகள்!!
துரை: திமுக தலைமையுடன் சமரசத்துக்கு உடன்பட அக்கட்சியில் இருந்து
நீக்கப்பட்ட மு.க. அழகிரி இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
மதுரையில் தமது பிறந்த நாளை கொண்டாடிய மு.க. அழகிரி செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
எனது பிறந்தநாள் சிறப்பாக இந்த ஆண்டு மிகச் சிறபாக கொண்டாடப்பட்டுள்ளது.
தி.மு.கவில் எனக்கு மீண்டும் முக்கியத்துவம் தருவதாக எந்த தகவலும்
வரவில்லை.
திமுக தலைமையுடன் சமரசத்துக்கு உடன்பட மு.க. அழகிரி 2 நிபந்தனைகள்!!
தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை மாவட்ட திமுகவினர் 10 பேரை மீண்டும்
கட்சியில் சேர்க்க வேண்டும். கலைக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க
அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இந்த 2 விஷயத்தையும் திமுக மேலிடம் ஏற்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.
அப்படி செய்தால் சமரசத்துக்கு உடன்படுகிறேன்.
இவ்வாறு மு.க. அழகிரி தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள்.
பெங்களூரு போல சென்னையிலும் FREE WI-FI வழங்க வேண்டும்- சென்னைவாசிகள் கோரிக்கை
Bangalore has become the first city in the country to provide free Wi-fi services to the people. The “Namma Wifi” service launched here on .
பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டது போல் சென்னையிலும் இலவச பொது வை-ஃபை
சேவை முனையங்களை உருவாக்க வேண்டுமென்று சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.
வை-ஃபை சேவை
வயர்லெஸ் சிக்னலின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு இணைய வசதியை பெற வை-ஃபை
தொழில்நுட்பம் உரு வாக்கப்பட்டது. அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பயன்
படுத்தப்பட்டு வந்த இந்த வை-ஃபை சேவை சில ஆண்டுகளுக்கு முன் பொது இடங்களில்
பயன் பாட்டிற்கு வந்தன. பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக இணை யத்தை
பயன்படுத்தும் விதமாக, வளர்ந்த நாடுகள் பல பொது வை-ஃபை முனையங்களை
உருவாக்கின. முக்கியமாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற
கிழக்காசிய நாடுகளிலும் பொது வை-ஃபை சேவை வழங்கப்பட்டு வருகின்றன.
பெங்களூருவில் வை-ஃபை சேவை
மாத்தி மாத்தி யோசிக்கும் விஜயகாந்த் ! Latest திமுக, தேமுதிக பாஜக கூட்டணிக்கு முயற்சி?- தேமுதிகவி-ன் புதிய கணக்கு
காங்கிரஸையும் அழைத்துக் கொண்டுவந்தால் திமுக கூட்டணி பற்றிப் பேசுவதாக,
மலேசியாவுக்கு தூதுபோன மமக நிர்வாகிகளிடம் சொன்ன விஜயகாந்த் இப்போது மாற்றி
யோசிப்பதாகச் சொல்கிறார்கள். பாஜக-வுடன் இணைந்த திமுக கூட்டணியில்
இணைந்தால் என்ன என்பதுதான் இப்போது அவரது திட்டம் என்கிறார்கள்.
இதுகுறித்து தேமுதிக முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
“இன்றைய சூழலில் தேர்தல் அரசியலே எங்களைச் சுத்தித்தான் நடக்கிறது. மற்ற
கட்சிகளைவிட நாங்கள் யாரோடு கூட்டணி சேரப் போகிறோம் என்பதை எல்லோரும்
ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த தேர்தல் களில் பாஜக., மதிமுக தலா 2 சதவீதமும், பாமக 3.5 சதவீதமும்
ஓட்டு பெற்றன. ஆனால், நாங்கள் 10 சதவீதம் பெற்றோம். இப்போது நாங்கள் பாஜக
கூட்டணிக்கு சென்றாலும் அக்கூட்டணி மொத்தமே 17.5 சதவீதமே ஓட்டுக்கள் மட்
டுமே பெற முடியும். மோடி அலைக்கு 5 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும்
மொத்த ஓட்டுக்கள் 22.5 சதவீதத்தைத் தாண்டாது.
திருடிய பையில் பச்சிளம் குழந்தை... பையோடு போலீசில் சரணடைந்த ‘பாசக்காரத்’ திருடன்
மும்பை: தான் திருடிய பையில் விலைமதிப்பில்லாத குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருடன், அந்தக் குழந்தையை அநாதரவாக விட மனதில்லாமல், தான் போலீசில்
சிக்குவதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தையோடு போலீசில் சரணடைந்த
உணர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மும்பையில் நடந்துள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மும்பை-பேலாபூர் ஹார்போர் ரயிலில்
கேட்பாரன்றி பை ஒன்று அனாதையாக கிடந்ததை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த
திருடன் கிஷோர் காலே (20) அதனை திருடியுள்ளான்.
ரயில் குர்லா ரயில் நிலையம் வந்தபோது, பைக்குள் என்ன பொருள் இருக்கிறது
என்ற ஆவலில் அதை திறந்து பார்த்த கிஷோர் அதிர்ச்சி அடைந்துள்ளான். காரணம்,
பைக்குள் நகை, பணம் போன்ற பொருட்கள் இருக்கும் என எதிர்பார்த்த
திருடனுக்கு, பைக்குள் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இருந்தது தான்.
ஆனபோதும், குழந்தையை அப்படியே நிராதரவாக விட்டுச் செல்ல கிஷோருக்கு
மனம் வரவில்லை. எனவே, உடனடியாக அருகே இருந்த காவலரிடம் இது குறித்து தகவல்
தெரிவித்துள்ளான்.
அதனைத் தொடர்ந்து திருடிய குற்றத்திற்காக கிஷோரைக் கைது செய்த போலீசார்,
பின்னர் அக்குழந்தையை மருத்துவர்கள் துணையுடன் முதலுதவி கொடுத்து
காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
திருடனுக்கு இருந்த இந்த மனிதாபிமானம், அக்குழந்தையைப் பெற்ற பெண் மற்றும்
அவரது உறவினர்களுக்கு இருந்திருந்தால், அக்குழந்தைக்கு இந்நிலைமையே
ஏற்பட்டிருக்காது
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
1984 சீக்கியர் படுகொலை ! விசாரிக்க புலனாய்வு குழு: கேஜ்ரிவால் அதிரடி!!
டெல்லி: 1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது
குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க அம்மாநில முதல்வர்
கேஜ்ரிவால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.
1984ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுப்
படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பல
இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 சீக்கியர் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு:
கேஜ்ரிவால் அதிரடி!!
இந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அப்போதைய ராஜிவ் காந்தி அரசு
கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்கை முதல்வர்
அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்து பேசினார்.
மாலினி 22 பாளையங்கோட்டை ! ஒரு நொடி அதிர்ந்துபோகிற க்ளைமாக்ஸ்!
நடிகை
ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் அதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண்
இயக்குனரிடம் இருந்து வந்திருக்கிற படம் மாலினி 22 பாளையங்கோட்டை. ப்ளே-பாயாக
திரிந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கு சுர்ருன்னு உரைக்கிற மாதிரி ஒரு படம்
என்றும் சொல்லலாம். மலையாளத்தில் வெளிவந்த ‘22 ஃபீமேல் கோட்டயம்’என்ற படத்தின் ரீமேக் தான் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’பெண்களுக்கு
எதிராக நடந்த தொடர்ந்து நடந்துவருகிற அடக்குமுறைகளையும், பாலியல்
வன்முறைகளையும் பற்றி பேசுவது மட்டுமல்லாமல். படம் பார்க்கிற எல்லா
ஆண்களும் ஏன் எல்லா பெண்களும் கூட ஒரு நொடி அதிர்ந்துபோகிற க்ளைமாக்ஸ்!
எல்லா ஆண்களும் அயோக்கியர்கள் அல்ல. காசுக்காகவும் சுகத்துக்காகவும் சில
காமுகன்கள் நடத்துகிற காமவேட்டைக்கு சில அப்பாவி பெண் பலியாவதையும்,
இதனால் ஒடுங்கி வீழ்ந்துவிடாமல், திமிரிக்கொண்டு திருப்பி அடிக்கிற ஒரு சாமர்த்தியமான மாலினியின் கதை.
அழகிரிக்கு நோட்டீஸ் ! 48 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் ?
கட்சியின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது ஏன்?
என்பது குறித்து 48 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க மு.க.அழகிரிக்கு
தி.மு.க. உயர்மட்டக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின்
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கி
வைக்கப்படுவதாக சமீபத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு
வெளியிட்டார்.
அதில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும், கொள்கைக்கும் களங்கம்
விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்
செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க.
தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது அழகிரி காழ்ப்புணர்ச்சியுடன்
செயல்படுவதாகவும், 3 மாதத்தில் அவர் இறந்து விடுவார் என்று கூறி
சென்றதாகவும் கூறினார்.
இதுகுறித்து பேட்டி அளித்த மு.க.அழகிரி, கருணாநிதி கூறிய கருத்துக்கள்
தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் இதை என்னுடைய பிறந்தநாள்
பரிசாக ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தி.மு.க. உயர்மட்டக்குழுவில் இருந்து மு.க.அழகிரிக்கு நேற்று
ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்த கொண்ட உங்களை ஏன்
கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க கூடாது? என்று அதற்கு விளக்கம் அளிக்க
வேண்டி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 48 மணிநேரத்திற்குள் இந்த விளக்கத்தை
அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. nakkheeran.in
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மு.க.அழகிரி
முன்னாள்
மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான
மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை மதுரையில் கொண்டாடப்பட்டது.
டி.வி.எஸ்.நகர்
பகுதி சாய் நகரில் உள்ள தனது வீட்டில் மு.க. அழகிரி வியாழக்கிழமை காலை
பிறந்தநாள் கேக் வெட்டினார். உடன் அவரது மனைவி, மகள், மகன், மருமகள்
ஆகியோர் இருந்தனர். அவர்களுக்கு கேக் ஊட்டினார். மு.க.அழகிரிக்கு அவர்கள்
வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், ஆதரவாளர்கள் புடைசூழ அழகிரியை நலத் திட்ட
உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்துக்கு அழைத்து
சென்றனர்.
அழகிரி
வரும் வழியெங்கும் மேளதாளம், கரகாட்டம், சிலம்பாட்டம் என பிரம்மாண்ட
வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜா முத்தையா
மன்றத்துக்கு வந்ததும் சுமார் 63 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி, அழகிரி
பிறந்த நாளை கொண்டாடுகிறார். மன்றத்தைச் சுற்றிலும், வாழ்த்துத்
தெரிவிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க....யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமையும், தேசிய ஜனநாயக கூட்டணியில்,
பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., மற்றும் ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகள்,
இணைய உள்ளன. இந்த கட்சிகளுடன், முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி
முடிக்கப்பட்டுள்ளது.>
தே.மு.தி.க.,வின் முடிவுக்கு பின், கூட்டணி
கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள பா.ஜ., தலைமை
திட்டமிட்டுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பிப்ரவரி, 2ம் தேதி
நடக்கும் அக்கட்சி மாநாட்டுக்கு பின், முடிவை அறிவிப்பதாக
தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைவர்கள் அவரை சந்தித்தபோது, கூட்டணியில்
எந்தெந்த கட்சிகள் சேர உள்ளன, அவை எதிர்பார்க்கும் தொகுதிகள் விவரம் ஆகியவை
பற்றி, பேசப்பட்டுள்ளது. அதேபோல், அவரது எதிர்பார்ப்பும்
அறியப்பட்டுள்ளது.இந்நிலையில், அடுத்த மாதம், 8ம் தேதி, சென்னை வரும்
நரேந்திர மோடிக்கு, கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து வைக்க
வேண்டும் என, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளார்.
அதற்குள், கூட்டணி கட்சிகளை முடிவு செய்து, தொகுதிகள் பங்கீட்டையும்
முடித்து விட வேண்டும் என, விரும்புகிறார்.
நெப்போலியன்: அழகிரியின் பின்னால் துணை நிற்பேன் ! ஒருநாளும் பின்வாங்க மாட்டேன்:!
முன்னாள்
மத்திய இணை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான நடிகர் நெப்போலியன், இன்று
இரவு விமானம் மூலம் மதுரை சென்றார். அவர், மு.க.அழகிரி இல்லத்திற்கு
சென்று, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்.பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நான் அமெரிக்கா சென்று நேற்று இரவுதான்
சென்னை திரும்பினேன். இதற்கிடையே கட்சிக்குள் நிறைய குளறுபடிகள்
நடந்துவிட்டன. அண்ணனின்( அழகிரி) பின்னால் துணை நிற்பேன். ஒருநாளும்
பின்வாங்க மாட்டேன். நாளை அவரது பிறந்த நாள் விழாவிலும் பங்கேற்றுவிட்ட
பின்னர்தான் சென்னை திரும்புகிறேன்’’ என்றார்.
அழகிரியுடன் மூன்று திமுக எம்.பிக்கள் ? தீவிர ஆலோசனை !
மு.க.அழகிரியின்
63வது பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி
இன்று மாலையே அவரது இல்லம் பரபரப்பாகியது. வண்ண விளக்குகளால் அவரது
இல்லம் அலங்கரிக் கப்பட்டுள்ளது.இரவிலும்
பகல் போல் காட்சியளிக்கும் வீட்டு வாசலில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த
அழகிரியை, திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் முதலாவதாக சந்தித்து பேசினார்.
அதன் பின்பு நெப்போலியன் எம்.பியும், அதற்கடுத்து ரித்தீஷ் எம்.பியும்
வந்து சந்தித்து பேசினர். சந்திப்பின்போது மூன்று பேரும் பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறினர்.பின்னர்,
மூன்று எம்.பிக்களையும் தனது இல்லத்திற்கு எதிரே உள்ள மைதானத்திற்கு
அழைத்து சென்றார் அழகிரி. அங்கு அவர்களுடன் அரை மணி நேரம் தீவிர ஆலோசனை
நடத்தினார். இந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்களையும், அடுத்தகட்ட
திட்டங்களை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.nakkheeran.in
BJP ஹெச்.ராஜா.: பெரியார் ஈ.வெ.ராவை அவன் இவன் ..., அவரை அப்போதே செருப்பாலடித்திருக்க வேண்டாமா ?
அண்மையில்
ஒரு வீடியோ பதிவை இணையத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பெரியார்
ஈ.வெ.ராவை அவன் இவன் என்று வர்ணித்தும் அவரை அப்போதே செருப்பாலடித்திருக்க
வேண்டாமா என்று கேட்டும், ஹிந்து விரோதிகளை உடனுக்குடன் எதிர்த்து
செருப்பால் அடிக்காமல் விட்டதால்தான் இன்றும் ஹிந்து கடவுள்களை இழிவாகப்
பேசுகிறார்கள் என்றும் ஒருவர் பேசிய பதிவு அது. இப்படிப்பட்ட பேச்சுகளை
ஹிந்து அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் பல உதிரி அமைப்புகளின்
தலைவர்கள் பேசுவது வழக்கம்தான் என்றாலும் இந்த முறை பேசியவர் யார்
என்பதுதான் அதிர்ச்சியாக இருந்தது.
பேசியிருப்பவர் ஹெச்.ராஜா. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர். ஆடிட்டர். இயற்கை வேளாண் விவசாயம் செய்பவர்.தொலைக்காட்சிகளில் பாரதிய ஜனதா சார்பில் அடிக்கடி தோன்றி கருத்து விவாதங்களில் ஈடுபடுபவர். நானும் பல முறை அவருடன் விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.
பேசியிருப்பவர் ஹெச்.ராஜா. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர். ஆடிட்டர். இயற்கை வேளாண் விவசாயம் செய்பவர்.தொலைக்காட்சிகளில் பாரதிய ஜனதா சார்பில் அடிக்கடி தோன்றி கருத்து விவாதங்களில் ஈடுபடுபவர். நானும் பல முறை அவருடன் விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.
புதன், 29 ஜனவரி, 2014
வாக்குவங்கியை கோட்டை விட்ட விஜயகாந்த் ! சரிந்தது செல்வாக்கு.. ? புதிய சர்வே !
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாஜகவை தவிக்க வைத்துக்
கொண்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செல்வாக்கு
குறைந்திருக்கிறது என்று ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏட்டின் சர்வே
தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தலில் தேமுதிக எந்த அணியில் இருக்கிறதோ அது வெற்றிக் கூட்டணி
என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இதற்காகவே தேமுதிகவை வளைத்துப்
போடுவதில் காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக ஆகியவை மும்முரம் காட்டுகின்றன.
இந்நிலையில் விஜயகாந்த் குறித்து ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு ஒரு
சர்வே வெளியிட்டுள்ளது. அதில் விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்திருப்பதாக
கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் இப்போது என்ற தலைப்பில் யதார்த்தமான தலைவர் என்பதற்கு
21.56%, எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார் -23.10%, சினிமா நடிகராகவே
இருக்கிறார்- 25.35%, அரசியல் தலைவராகவில்லை-29.99% என கருத்து
தெரிவித்துள்ளனர்.
மீண்டும் த.மா.கா? ராஜ்யசபா எம்.பி.: வாசனுக்கு குழிபறித்த ப.சிதம்பரம்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவின் ஆதரவுடன் போட்டியிடுவது என்ற ஜி.கே. வாசனின் முயற்சிக்கு மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்தான் தடை போட்டதாக கூறப்படுகிறது. இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை குறி வைத்திருக்கிறாராம் வாசன். அதுவும் கிடைக்காமல் போனால் தேர்தலின் போது மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கும் முனைப்பில் இருக்கிறாராம் வாசன். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுதான் முடிவடைந்தது. கடைசி நிமிடம் வரைக்கும் தேமுதிக ஆதரவுடன் எப்படியாவது தேர்தலில் குதித்துவிடுவது என்ற முனைப்பில் இருந்தார் ஜி.கே. வாசன்.
ஸ்டாலின் யாருக்காவது கெடுதல் செய்திருக்கலாம். அதனால் பாதுகாப்பு கேட்டிருக்கலாம் ! அழகிரி ஆவேசம்
மு.க.அழகிரி
திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர்
அளித்த விளக்கத்தை அழகிரி மறுத்தார். ஆனாலும் திமுகவினர் ஆத்திரம் கொண்டு
அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுவதும் எரித்து வருகின்றனர். அழகிரி
உருவபொம்மையை எரிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்டாலின் யாருக்காவது கெடுதல் செய்திருக்கலாம். அல்லது யாரையாவது மிரட்டியிருக்கலாம். அதனால் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்.
இந்நிலையில் மதுரையில் இன்று மாலை அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
ஸ்டாலினுடன் சமரச பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறதே?
அப்படிஎதுவும் இல்லை. என்னிடம் சமரசம் பேச திமுகவிலிருந்து யாரும் வரவில்லை.
பிறந்த நாள் அறிவிப்பு என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளீர்களே?
என் தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்து அதை அறிவிப்பேன்.
என் தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்து அதை அறிவிப்பேன்.
திமுகவிலிருந்து நிரந்தமாக விலகப்போவதாக பேசப்படுகிறதே?
அப்படி ஒரு முடிவு எனக்கு இல்லை. நீங்களாக அப்படி கற்பனை செய்யாதீர்கள்.
விஜயகாந்த் மனைவி பிரேமலதா, திமுகவில் தற்போது நடப்பது நாடகம் என்று சொல்லி யிருக்கிறாரே?
அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கேட்டு பிரதமருக்கு கலைஞர் கடிதம் அனுப்பியுள்ளாரே?
ஸ்டாலின் யாருக்காவது கெடுதல் செய்திருக்கலாம். அல்லது யாரையாவது மிரட்டியிருக்கலாம். அதனால் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்.
அழகிரி பயம்': ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
மூத்த மகன் அழகிரி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட
சம்பவத்தை அடுத்து இளைய மகனும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலினுக்கு
கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான
மு.க. அழகிரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து
தற்காலிகமாக நீக்கினார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த
கருணாநிதி, தன்னுடைய இளைய மகன் ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில்
இறந்துவிடுவார் என்று அழகிரி கூறியதாகத் தெரிவித்தார்.
'அழகிரி பயம்': ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு
கருணாநிதி கடிதம்
இந்நிலையில் அழகிரி சம்பவத்தை அடுத்து ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு
வழங்கக் கோரி கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம்
எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் ஸ்டாலின் மீது நடந்த
கொலை முயற்சியை அடுத்து அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமான்டோக்கள்
பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கருணாநிதி ஸ்டாலினுக்கு
கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிக்க தயங்கி வந்த பிரணிதா நீச்சல் உடையில் போட்டோ ஷூட்
கவர்ச்சியாக நடிக்க தயங்கி வந்த பிரணிதா துணிச்சலான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழில் ‘சகுனி படத் தில் அறிமுகமானவர் பிரணிதா. தமன்னா, ஹன்சிகா அளவுக்கு கல ராக இருந்தாலும் அவர்களைப்போல் வரவேற்பு இல்லாததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். அங்கும் பெரிய அளவில் வரவேற்பில்லாமல் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே படங்களில் நடித்து வந்தார். என்னதான் நடித்தாலும் கமர்ஷியல் பாணிக்கு ஏற்ப கவர்ச்சி காட்டாவிட்டால் சக ஹீரோயின்களுடன் போட்டிபோட முடியாது என்று நலவிரும்பிகள் அவரிடம் கூறினார்கள். அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு தெலுங்கில் பவன் கல்யாண் உடன் நடித்த ‘அத்தரின்டிக்கி தாரிடி படத்தில் 2வது ஹீரோயினாக நடித்த அவரது வேடம் பேசப்பட்டது. எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் வந்ததையடுத்து கவர்ச்சி போட்டிக்கு துணிந்துவிட்டார். இதை வார்த்தை ஜாலமாக சொல்லாமல் செயல் மூலம் காட்டி இருக்கிறார். சமீபத்தில் ஸ்பெஷல் போட்டோகிராபரை அமர்த்தி படுகவர்ச்சி படங்கள் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். நீச்சல் உடையில் வித்தியாசமான போஸ்களில் அவரது படம் வெளியாகி உள்ளது. கவர்ச்சி போட்டிக்கு தயாராகிவிட்ட பிரணிதாவுக்கு - See more at: tamilmurasu.org
தமிழில் ‘சகுனி படத் தில் அறிமுகமானவர் பிரணிதா. தமன்னா, ஹன்சிகா அளவுக்கு கல ராக இருந்தாலும் அவர்களைப்போல் வரவேற்பு இல்லாததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். அங்கும் பெரிய அளவில் வரவேற்பில்லாமல் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே படங்களில் நடித்து வந்தார். என்னதான் நடித்தாலும் கமர்ஷியல் பாணிக்கு ஏற்ப கவர்ச்சி காட்டாவிட்டால் சக ஹீரோயின்களுடன் போட்டிபோட முடியாது என்று நலவிரும்பிகள் அவரிடம் கூறினார்கள். அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு தெலுங்கில் பவன் கல்யாண் உடன் நடித்த ‘அத்தரின்டிக்கி தாரிடி படத்தில் 2வது ஹீரோயினாக நடித்த அவரது வேடம் பேசப்பட்டது. எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் வந்ததையடுத்து கவர்ச்சி போட்டிக்கு துணிந்துவிட்டார். இதை வார்த்தை ஜாலமாக சொல்லாமல் செயல் மூலம் காட்டி இருக்கிறார். சமீபத்தில் ஸ்பெஷல் போட்டோகிராபரை அமர்த்தி படுகவர்ச்சி படங்கள் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். நீச்சல் உடையில் வித்தியாசமான போஸ்களில் அவரது படம் வெளியாகி உள்ளது. கவர்ச்சி போட்டிக்கு தயாராகிவிட்ட பிரணிதாவுக்கு - See more at: tamilmurasu.org
தேமுதிக, காங்கிரஸ் பின்வாங்கியது ஏன்? : கடைசி கட்ட பரபரப்பு
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக, காங்கிரஸ் ஆகியவை கடைசி நேரத்தில்
பின் வாங்கியது ஏன் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச்
சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம்
தேதியுடன் முடிகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 7ம் தேதி
நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் வக்கீல்
எஸ்.முத்துக்கருப்பன், முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ், எல்.சசிகலா
புஷ்பா, விஜிலா சத்தியானந்தம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்
டி.கே.ரங்கராஜன் மற்றும் சுயேச்சைகள் 2 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
இந்தியா ஜப்பானிடமிருந்து ராணுவ விமானத்தை வாங்குகிறது ! வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றம் ?
இரண்டாம்
உலகப் போருக்கு பின் முதன் முறையாக இந்தியா ஜப்பானிடமிருந்து 1.65
பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து
கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் பாதுகாப்பு வாகனங்களை
விற்பதில்லை என்ற அந்நாட்டு பிரதமரின் தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. தலா
110 மில்லியன் டாலர் விலை கொண்ட 15 விமானங்களை வாங்க அரசு முடிவு
செய்துள்ளது. இது இரு நாட்டு உறவில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்துள்ளதாக
இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் நாட்டின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் விமானங்களை
வடிவமைத்து கட்டமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மன்மோகன்
சிங் கூறினார்.
தாய்ப்பால் சோசலிசம் ! கின்னஸ் சாதனை பெரிதாக தெரியவில்லை.
“மக்க முகம் பாத்தா மனசு பாரம் கொறையும், கொழந்த
முகம் பார்த்தால் கோடி சஞ்சலம் தீரும்”ன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும்.
அப்படி மக்களையும் குழந்தைகளையும் ஒரு சேர அதிக நேரம் பாக்குற ஒரு
பாக்கியம் எனக்கு கெடச்சது. ஒரு குழந்தைய பாத்தாலே சந்தோசத்துல முகமெல்லாம்
பல்லாயிரும் எனக்கு, மூணு, நாலு வராந்தா முழுவதுமா குழந்தைங்க குட்டி
குட்டி கை, கால ஆட்டிகிட்டு பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடிக்கும் விதமா
இருந்தத பாத்ததும் ஒரு வட்டி கருப்பட்டிய ஒன்னா சாப்புட்ட சந்தோசம். இந்த
அற்புதத்துக்கு நடுவுல நானும் ஒரு வார காலம் அதிக நேரம் இருக்க முடிந்ததை
நெனச்சு மனசெல்லாம் பரவசம் எனக்கு.
சமீபத்துல என்னோட சொந்தக்கார பொண்ணு பானுவுக்கு பிரசவ வலி வந்து அரசு மருத்துவ மனையில் சேர்ந்திருந்தோம். நீண்ட பிரசவ வலி போராட்டத்துக்கு பிறகு சுகப்பிரசவமா குழந்தை பிறந்துச்சு. குழந்தைக்கு சில பிரச்சனை இருக்குன்னு பிறந்தது முதல் ஆறு நாட்களுக்கு மேல அவசர பிரிவில் வச்சுருந்தாங்க. நான் ரெண்டு நாள் அவள் கூட உதவி ஒத்தாசைக்கு தங்கியிருந்தேன்.
அங்கு பிரசவம் ஆயிருந்தவங்க பெரும்பாலும் சாதாரண எளிய மக்கள்தான். அவங்க வாழ்க்கையில் இருக்கும் வறுமையும் உழைப்பின் சோர்வும் அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் ரோஜாப் பூவாய் கட்டிலில் கிடக்கும் குழந்தையை பார்த்து முகமெல்லாம் பரவசமாக பேசி சிரிந்து கொஞ்சி மகிழந்தார்கள். ஒரு சில பேரோட குழந்தைக்கி பிரச்சனைன்னு அவசர பிரிவில் வச்சிருந்ததால தாய் மட்டும் தனியாக பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை ஏக்கத்தோடு பார்ப்பதும், தன் குழந்தைக்காக கண்ணீரோடு காத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்படி காத்துக் கொண்டிருந்தவர்களில் என் சொந்தக்கார பொண்ணு பானுவும் ஒருத்தி.
சமீபத்துல என்னோட சொந்தக்கார பொண்ணு பானுவுக்கு பிரசவ வலி வந்து அரசு மருத்துவ மனையில் சேர்ந்திருந்தோம். நீண்ட பிரசவ வலி போராட்டத்துக்கு பிறகு சுகப்பிரசவமா குழந்தை பிறந்துச்சு. குழந்தைக்கு சில பிரச்சனை இருக்குன்னு பிறந்தது முதல் ஆறு நாட்களுக்கு மேல அவசர பிரிவில் வச்சுருந்தாங்க. நான் ரெண்டு நாள் அவள் கூட உதவி ஒத்தாசைக்கு தங்கியிருந்தேன்.
அங்கு பிரசவம் ஆயிருந்தவங்க பெரும்பாலும் சாதாரண எளிய மக்கள்தான். அவங்க வாழ்க்கையில் இருக்கும் வறுமையும் உழைப்பின் சோர்வும் அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் ரோஜாப் பூவாய் கட்டிலில் கிடக்கும் குழந்தையை பார்த்து முகமெல்லாம் பரவசமாக பேசி சிரிந்து கொஞ்சி மகிழந்தார்கள். ஒரு சில பேரோட குழந்தைக்கி பிரச்சனைன்னு அவசர பிரிவில் வச்சிருந்ததால தாய் மட்டும் தனியாக பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை ஏக்கத்தோடு பார்ப்பதும், தன் குழந்தைக்காக கண்ணீரோடு காத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்படி காத்துக் கொண்டிருந்தவர்களில் என் சொந்தக்கார பொண்ணு பானுவும் ஒருத்தி.
ஜில்லா கல்லா கட்டவே இல்லை களையும் கட்டவில்லை
‘ஜில்லா’ கலெக்ஷனில் கல்லாகட்டியது என்றும் அதனால் நஷ்டம் ஏற்படவில்லை என்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் சொன்னாலும், வேடிக்கையான திரைக்கதையாலும் சோர்வான காட்சிகளாலும் ஜில்லா விஜய் ரசிகர்கள் மத்தியில் களைக்கட்டமலேயே போனது. அதனால் அடுத்தத்த படங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். இதற்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திலும் விஜய்க்கு கசப்பான அனுபவமே மிஞ்சியது.
2012ஆம்
ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான துப்பாக்கி படத்தை இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி கொடுத்தது. இப்போது மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன்
இணைகிறார் விஜய். தற்போதைக்கு தன் இந்திபட வேலைகளில் இருக்கும் முருகதாஸ்
அதை விடித்துவிட்டு, பெயரிடப்பாடத படத்தில் விஜய்யை இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முதலீடுகள் ஓடுவதேன் ? கமிஷன் கமிஷன் கமிஷன்
சென்னை: தமிழகத்தின் முதலீடு, வெளிமாநிலங்களுக்கு செல்வது குறித்து, முதல்வரின் பதில் என்ன?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகத்தில் அமையும் தொழில்பேட்டைக்கு, தொழில் முதலீட்டை திரட்ட, அம்மாநில முதல்வர் சீதாராமையா, கோவையில், முதலீட்டாளர்களை இழுக்கும் மாநாட்டை நடத்தியுள்ளார். இம்மநாட்டின் மூலம், தமிழகத்தின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்க, கர்நாடகம் ஒப்புதல் பெற்றுள்ளது. தமிழக முதலீடு, வெளிமாநிலங்களுக்கு வெளியேற பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மின்வெட்டு, அரசின் நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்பு பற்றாக்குறை, ஆட்சியாளர்களை சந்திக்க முடியாத சூழல், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காத அணுகுமுறை போன்றவற்றை கூறுகின்றனர். தமிழகத்தில், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு, பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை தேடி, வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது, மீதமிருக்கும் தொழில் நிறுவனங்களும் வெளியேற துவங்கி விட்டன. படத்தில் இருப்பது ஜெயாவின் சென்ற முறை ஆட்சியின் போது கமிஷன் காரணத்தால் புனே க்கு சென்ற வொக்ஸ்வகன் தொழிற்சாலை
கர்நாடக முதல்வர் சீதாராமையா நம்ம ஊரான கோவைக்கே வந்து அள்ளிட்டு போறாரு. கொட நாடே கதின்னு இங்க. என்னத்த சொல்ல.
BJP கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி? தொழிலதிபர் வீட்டில் நடந்த பேச்சில் சுமுக உடன்பாடு
'தே.மு.தி.க., எந்த அணியில் இடம் பெறும்' என, பலத்த எதிர்பார்ப்பு
நிலவும் நிலையில், தி.மு.க.,வை புறந்தள்ளி விட்டு, பா.ஜ., அணியில் இடம்
பெற, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும்,
தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், தே.மு.தி.க.,
முக்கிய பிரமுகரும் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு
எட்டப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 தொகுதிகள்: பி ஜே பி கூட்டணி தலைவர்கள் வேட்பாளர்கள் எதுக்கும் ஹெல்மட் போட்டுக்கிட்டு விருசிககாந்தோட மேடையேறுவது நல்லது இல்லைனா நங்கு நங்குன்னு கேப்டன் வெக்குற கொட்டுல தலை மாம்பழம் சைஸ்ல வீங்கிக்கும்
10 தொகுதிகள்: பி ஜே பி கூட்டணி தலைவர்கள் வேட்பாளர்கள் எதுக்கும் ஹெல்மட் போட்டுக்கிட்டு விருசிககாந்தோட மேடையேறுவது நல்லது இல்லைனா நங்கு நங்குன்னு கேப்டன் வெக்குற கொட்டுல தலை மாம்பழம் சைஸ்ல வீங்கிக்கும்
செவ்வாய், 28 ஜனவரி, 2014
அழகிரி கண்ணீர் : கலைஞர் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை !
கோபாலபுரத்தில் தன்னை
சந்தித்தபோது, மு.க.ஸ்டாலினை கொன்றுவிடுவதாக மிரட்டினார் அழகிரி என்று
திமுக தலைவர் கலைஞர், அழகிரியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்த விளக்க
பேட்டியில் குறிப்பிட்டார்.
இதைக்கேட்டதும்
அழகிரியும், அவரது குடும்பத்தினரும் அப்செட் ஆனார்கள். இதையடுத்து
அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கத்தில், உண்மை கலைஞர் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
அழகிரி முழு விளக்கம்
அழகிரி முழு விளக்கம்
சென்னையில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், அழகிரி நீக்கம் பற்றி
உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் சில தகவல் தெரிவித்தார். இதையடுத்து மதுரையில் அழகிரி தனது இல்லத்தில் செய்தியாளர்களை கூட்டி, கலைஞர் பேட்டிக்கு உருக்கமாக விளக்கம் அளித்தார்.
அவர்,
‘’இன்று மதியம் தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் தலைவர் கலைஞருடைய
பேட்டியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என் மீது இப்படிப்பட்ட
ஒரு அபாண்டத்தை சுமத்துவார் என்று, நான் கனவில் கூட
நினைத்துப்பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய
பிறந்த நாள் வாழ்த்தாக நான் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும், நான் சில
விளக்கங்களை இந்த நேரத்திலே சொல்ல விரும்புகிறேன்.
Rajya Sabha திருச்சி சிவா உட்பட 6 பேரும் போட்டி இன்றி தேர்ந்தெடுக்க படுவார்கள்
டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18
பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல்
நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த்,
முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில்
டி.கே. ரெங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.
மேல்– சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21–ந்தேதி தொடங்கியது.
முதல் நாளே தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த்,
எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ் ஆகிய 4 பேரும் நேற்று மனுதாக்கல்
செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ரங்கராஜனும் நேற்று தனது
மனுவை தாக்கல் செய்தார்.
Times Now TV ராகுல் நேர்காணல் : கேள்விகளுக்கும் தொடர்பு இல்லாமல், தெளிவான பதில் அளிக்காமல் பேசிய ராகுல்
இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள'
சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால்,
ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ,
அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும்
ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது.
இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல்
காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த
வாய்ப்பில் இருந்து நழுவினார்.
'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும்
தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின்
கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை
மூன்றாவது நபராக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் பேசினார் ராகுல்
காந்தி.
அழகிரி பற்றி கலைஞர் ! ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என அழகிரி ....
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் :- மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?
கலைஞர் :-
பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர்
அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு,
பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளைப் பற்றி அறிவிப்பது வழக்கம்.
ஆனால் அதற்கு மாறாக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்தோ
அல்லது விமர்சித்தோ அல்லது கட்டுப்படாமலோ கழகத்திலே உள்ள யாரும்;
முக்கியமாக பொறுப்பிலே உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை. ஆனால் கடந்த சில
மாதங்களாக மு.க. அழகிரி; தான் கழக உறுப்பினர் என்பதை மறந்து விட்டு,
இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல
அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பிலே இருப்பவர் என்பதையும் மறந்து விட்டு -
பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான
அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.
பாம்பன் பாலம் 100 : நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவக்கம்
ராமேஸ்வரம்: பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும் மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை
நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம்
தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கட்டுமான பணி 1913ம் ஆண்டு டிசம்பரில் முடிந்தது.
1914ம் ஆண்டு ஜனவரியில் பாம்பன் பாலத்தில் ரயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. பிப். 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி, முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது.
தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கட்டுமான பணி 1913ம் ஆண்டு டிசம்பரில் முடிந்தது.
1914ம் ஆண்டு ஜனவரியில் பாம்பன் பாலத்தில் ரயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. பிப். 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி, முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது.
M.S.விஸ்வநாதனுக்கு இதுவரை பத்மஸ்ரீ பத்ம பூஷன் போன்ற எந்தவித ஜால்ரா விருதுகளும் கிடைக்க வில்லை.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று பல விருதுகளை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள், அந்த விருதுகளை விட தகுதி குறைந்தவர்களும்.
ப.சிதம்பரம் :இந்தியாவுக்குள் தங்கம் கடத்தல் மாதம் 3 டன்!
இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு, சில மாதங்களில் 3 டன் (3,000 கிலோ) அளவில் இருந்தது, என்பதை ஒப்புக் கொண்டுள்ளார், மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம். டில்லியில் நேற்று கஸ்ட்டம்ஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டபோதே, இதை ஒப்புக்கொண்டார் அவர்.
சமீபகாலமாக தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள கடுமையான சட்டதிட்டங்கள், மற்றும், தங்க இயக்குமதிக்கான சுங்கவரி அதிகரிப்பு ஆகியவையே, திருட்டுத்தனமாக கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு அதிகரத்ததன் காரணம் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
சமீபத்தில்தான் தங்க இறக்குமதிக்கான சுங்கவரி, 10 சதவீதத்துக்கு அதிகரிக்கப்பட்டது. அத்துடன், இந்திய ரிசர்வ் பேங்க், தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பாக பலவிட கடும் சட்டதிட்டங்களை கொண்டுவந்து, தங்கம் இறக்குமதி கிட்டத்தட்ட முடியாத காரியம் என்ற நிலையை ஏற்படுத்தியது.
ஊடகங்கள் மீது 'ஆம் ஆத்மி' பாய்ச்சல் ! அப்போ இனித்தது, இப்போ கசக்குது
டில்லியில், ஆட்சியை பிடித்து, புது வரலாறு படைத்த,
'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஊடகங்கள் ஆதரவு இருந்ததாக கூறப்பட்டது; ஆனால்,
பதவியில் ஏறிய கொஞ்ச நாட்களிலேயே, ஊடகங்கள் மீது, ஆம் ஆத்மி குறை சொல்ல
துவங்கிவிட்டது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, டில்லி
போலீஸ் அதிகாரிகள் சிலரை, பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, டில்லி
முதல்வர், அரிவிந்த் கெஜ்ரிவால், பார்லிமென்ட் வளாகம் அருகே, தர்ணா
போராட்டம் நடத்தினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு
கிளம்பியது. கெஜ்ரிவாலின் கோரிக்கை நிறைவேறவில்லை. அதே நேரத்தில், அவருக்கு
எதிராக விமர்சனம் கிளம்பியது. போதாக்குறைக்கு, அவர் அமைச்சரவை சகா,
சோம்நாத் பார்தி, பத்திரிகைகள் மீது தெரிவித்த கருத்துக்கள், ஊடக உலகில்,
கடும் எதிர்ப்பை சம்பாதித்தது.