புதன், 29 ஜனவரி, 2014

அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முதலீடுகள் ஓடுவதேன் ? கமிஷன் கமிஷன் கமிஷன்


சென்னை: தமிழகத்தின் முதலீடு, வெளிமாநிலங்களுக்கு செல்வது குறித்து, முதல்வரின் பதில் என்ன?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகத்தில் அமையும் தொழில்பேட்டைக்கு, தொழில் முதலீட்டை திரட்ட, அம்மாநில முதல்வர் சீதாராமையா, கோவையில், முதலீட்டாளர்களை இழுக்கும் மாநாட்டை நடத்தியுள்ளார். இம்மநாட்டின் மூலம், தமிழகத்தின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்க, கர்நாடகம் ஒப்புதல் பெற்றுள்ளது. தமிழக முதலீடு, வெளிமாநிலங்களுக்கு வெளியேற பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மின்வெட்டு, அரசின் நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்பு பற்றாக்குறை, ஆட்சியாளர்களை சந்திக்க முடியாத சூழல், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காத அணுகுமுறை போன்றவற்றை கூறுகின்றனர். தமிழகத்தில், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு, பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை தேடி, வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது, மீதமிருக்கும் தொழில் நிறுவனங்களும் வெளியேற துவங்கி விட்டன. படத்தில் இருப்பது  ஜெயாவின் சென்ற முறை ஆட்சியின் போது கமிஷன் காரணத்தால் புனே க்கு சென்ற வொக்ஸ்வகன் தொழிற்சாலை 

கர்நாடக முதல்வர் சீதாராமையா நம்ம ஊரான கோவைக்கே வந்து அள்ளிட்டு போறாரு. கொட நாடே கதின்னு இங்க. என்னத்த சொல்ல.
தொழில்துறை தொடர்பாக, சட்டசபையின், 110வது விதியின் கீழ், முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் நிலை என்ன என, ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தேன்; இதுவரை பதில் இல்லை. இப்போது, தமிழக முதலீடு வெளிமாநிலங்களுக்கு செல்கிறது. இதுதவிர, மத்திய அரசு நிதி ஒதுக்கிய பின்பும், மாநில அரசு தன், பங்குத் தொகையை விடுவிக்கவில்லை. இதனால், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்காவை அமைக்க முடியவில்லை. 'இதுதொடர்பாக, தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சரை, இரு மாதங்களாக சந்திக்க முடியவில்லை' என, மத்திய அரசின் கயிறு வாரிய துணைத் தலைவர், கா.ராயர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கெல்லாம், முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்வாரா? இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக