வெள்ளி, 31 ஜனவரி, 2014

பத்மபூஷண் விருதை மறுப்பு:! நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்


டெல்லி, ஜன. 31–
பத்ம விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.
அதில் மறைந்த நீதிபதி வர்மாவுக்கு மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நீதிபதி வர்மா குடும்பத்தினர் தற்போது பத்ம பூஷண் விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதில் அவர், ‘‘என் கணவர் வர்மா எந்த பரிசையும் விருதையும் ஏற்காதவர். சிறந்த நீதிபதி என்ற கவுரவத்தையே விரும்பினார். எனவே அவர் விருப்பத்துக்கு மாறாக அரசு கொடுக்கும் பத்ம பூஷண் விருதை ஏற்க இயலாது’’ என்று கூறியுள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிரான வலுவான சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை இவரிடம்தான் அரசு கொடுத்திருந்தது. நீதிபதி வர்மா மிக குறுகிய காலத்தில், 630 பக்க சட்டத்தை உருவாக்கி கொடுத்தார்.
இதற்காக அவரை கவுரவிக்க மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்தது. இந்த விருதை ஏற்க நீதிபதி வர்மா மனைவி மறுப்பு தெரிவித்திருப்பது மத்திய அரசுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக