சனி, 1 பிப்ரவரி, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் : மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை

டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பட்டியலில் தனது பெயரை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிதின் கட்காரி, இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அவருக்கு மானநஷ்ட நோட்டீசு அனுப்பினார். ஆனால், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கட்காரியின் ஊழலை பா.ஜனதாவே நம்பியதால் தான், அவருக்கு 2-வது முறையாக தலைவர் பதவி வழங்கவில்லை. எனவே அவர் பா.ஜனதா மீது தான் மானநஷ்ட வழக்கு தொடர வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக