புதன், 29 ஜனவரி, 2014

அழகிரி பயம்': ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்


மூத்த மகன் அழகிரி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இளைய மகனும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி தனது மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தன்னுடைய இளைய மகன் ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்துவிடுவார் என்று அழகிரி கூறியதாகத் தெரிவித்தார். 'அழகிரி பயம்': ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம் இந்நிலையில் அழகிரி சம்பவத்தை அடுத்து ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் ஸ்டாலின் மீது நடந்த கொலை முயற்சியை அடுத்து அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமான்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கருணாநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக