வியாழன், 30 ஜனவரி, 2014

அழகிரியுடன் மூன்று திமுக எம்.பிக்கள் ? தீவிர ஆலோசனை !

மு.க.அழகிரியின் 63வது பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  பிறந்தநாளையொட்டி இன்று மாலையே அவரது இல்லம் பரபரப்பாகியது.   வண்ண விளக்குகளால் அவரது இல்லம் அலங்கரிக் கப்பட்டுள்ளது.இரவிலும் பகல் போல் காட்சியளிக்கும் வீட்டு வாசலில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அழகிரியை, திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம்  முதலாவதாக சந்தித்து பேசினார்.  அதன் பின்பு நெப்போலியன் எம்.பியும், அதற்கடுத்து ரித்தீஷ் எம்.பியும் வந்து சந்தித்து பேசினர்.  சந்திப்பின்போது மூன்று பேரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினர்.பின்னர், மூன்று எம்.பிக்களையும் தனது இல்லத்திற்கு எதிரே உள்ள மைதானத்திற்கு அழைத்து சென்றார் அழகிரி.  அங்கு அவர்களுடன் அரை மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்களையும், அடுத்தகட்ட திட்டங்களை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக