புதன், 29 ஜனவரி, 2014

வாக்குவங்கியை கோட்டை விட்ட விஜயகாந்த் ! சரிந்தது செல்வாக்கு.. ? புதிய சர்வே !


சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாஜகவை தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செல்வாக்கு குறைந்திருக்கிறது என்று ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏட்டின் சர்வே தெரிவிக்கிறது. லோக்சபா தேர்தலில் தேமுதிக எந்த அணியில் இருக்கிறதோ அது வெற்றிக் கூட்டணி என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இதற்காகவே தேமுதிகவை வளைத்துப் போடுவதில் காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக ஆகியவை மும்முரம் காட்டுகின்றன. இந்நிலையில் விஜயகாந்த் குறித்து ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு ஒரு சர்வே வெளியிட்டுள்ளது. அதில் விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் இப்போது என்ற தலைப்பில் யதார்த்தமான தலைவர் என்பதற்கு 21.56%, எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார் -23.10%, சினிமா நடிகராகவே இருக்கிறார்- 25.35%, அரசியல் தலைவராகவில்லை-29.99% என கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் செல்வாக்கு என்ற தலைப்பில் முன்பைவிட உயர்ந்திருக்கிறது- 22.75%, குறைந்திருக்கிறது- 43.78%. அப்படியே இருக்கிறது 33.47% பேர் கூறியுள்ளனர். Show Thumbnail
விஜயகாந்த் திமுக கூட்டணியில்தான் இணைய வேண்டும் என்று 31.42% பேர் கூறியிருக்கின்றனர். அதற்கு அடுத்ததாக பாஜக அணியில் இணைய வேண்டும் என 27.15% பேரும் காங்கிரஸ் கூட்டணியில் 13.21% பேரும் இருப்பார் என தெரிவித்துள்ளனர். 28.22% பேர் தனித்தே போட்டியிடுவார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Read mவிஜயகாந்த் சேரும் கூட்டணி வெற்றிக் கூட்டணி என 37.6%, ஒரு பலனுக் இல்லை எல்லை 43.89% கூறியுள்ளனர். அத்துடன் விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்தால் பெரிய தோல்வியை சந்திக்கும் என 18.50% பேர் கூறியுள்ளனர்.
தேமுதிக எம்.எல்.ஏக்களை அதிமுக இழுத்தது, விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் போன்றவற்றால் தேர்தலில் அனுதாபம் ஏற்படாது என 21.97%; பெரிய பாதிப்பு இல்லை என 39.50% பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் அரசியல் ரீதியான ஒருநடவடிக்கை என 38.53% பேர் கூறியுள்ளனர்.
குடிகாரர் விமர்சனம் குடிகாரர் என விஜயகாந்தை அதிமுகவினர் விமர்சிப்பது தவறானது என 24.16%. கண்டிக்கத்தக்கது என 27.86% பேரும் கூறியிருக்கின்றனர். ஆனால் இதுவும் விமர்சனம்தான் என 47.98% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்துக்கு தேர்தலில் ஓட்டுப் போடுவேன் என 18.72%, ஓட்டுப் போடமாட்டேன் என 31.23% பேர் கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பேன் என 50.05% பேர் கூறியுள்ளனர்.

tamil.oneindia.in/ வாக்குவங்கியை கோட்டை விட்ட விஜயகாந்த் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக